Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

வேலூர்

மலைக் கிராமத்தில் நள்ளிரவில் தொழிலாளியை கடித்த பாம்பு - மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரைவிட்ட பரிதாபம்.

Selvarani July 20, 2023

வேலூர் அருகே பாம்பு கடித்து கூலித்தொழிலாளி உயிரிழந்துவிட்டதால் மலைவாழ் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுபோன்று நடைபெறாமல் இருக்க  மலைப்பகுதியில் 24 மணி நேரமும் பாம்பு கடிக்கு தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை  விடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்கள் மலைப்பகுதிகளில் பல்வேறு தொழில்களில், குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நள்ளிரவில் மாரியம்மன் கோவிலில் கொள்ளை - உண்டியலை திருடர்கள் தூக்கிச்செல்லும் காட்சி வெளியீடு!

Selvarani July 17, 2023

வேலூர் அருகே இரவு நேரத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து பணத்தை திருடிச்சென்ற உண்டியல் கொள்ளையர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் சித்தேரி பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் குறைந்த பிறகு இரவு நேரத்தில் இந்த கோவிலிக்குள் மர்ம நபர்கள் புகுந்துள்ளனர். பின்னர் போலீசாரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க இரண்டு பேரும் முகத்தை துணியால் மூடிக்கொண்டு கோவிலில் இருந்த உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச்சென்றனர்.

வேலூர் தங்க கோவிலில் நடிகை சமந்தா தரிசனம் - தங்க சிலைக்கு தனது கையால் அபிஷேகம்!

Selvarani July 17, 2023

வேலூர் தங்க கோவிலில் தரிசனம் செய்த நடிகை சமந்தா, தங்கத்தால் ஆன சொர்ணலட்சுமி அம்மன் சிலைக்கு தனது கைகளால் அபிஷேகம் செய்து தீபாதணை காட்டினார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை சமந்தாவுக்கு சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பிறகு, மன உளைச்சலில் இருந்த நடிகை சமந்தா, நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே பேசிவந்தார். அதன்பிறகு அவர் நடித்த புஸ்பா பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.

காட்பாடி அருகே கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Baskaran July 14, 2023

காட்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சின்னகீசா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (57). இவர் மேல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

மரண வாக்குமூலத்தை மறைத்த டிஎஸ்பி? மக்கள் முற்றுகை

Abhinesh A.R June 28, 2023

மரண வாக்குமூலத்தை மறைத்து குற்றவாளியை பாதுகாக்கும் காட்பாடி இணை காவல் கண்காணிப்பாளர் (DSP) நடவடிக்கையை கண்டித்து குகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் இந்திய குடியரசு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் கார் கொடுத்தது ஒரு அரசியல்தான்..! - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

Saraswathi June 27, 2023

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமலஹாசன் கார் கொடுத்தது ஒரு அரசியல்தான். ஜெயலலிதா காலத்திலேயே பெண் ஓட்டுநர் இருந்துள்ளார். அப்பொழுது ஏன் அரசியல் செய்யவில்லை? அப்பொழுது ஏன் கார் வாங்கி கொடுக்கவில்லை?  என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாநகரில் இரண்டு இடங்களில் தேமுதிக கொடியேற்றும் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாலர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் விருப்பாச்சிபுரத்தில்  மறைந்த முன்னாள் தேமுதிக மாவட்ட செயலாளர் வி.பி.வேலு இல்லத்திற்குச் சென்ற அவர், வேலுவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு,  அவரது குடும்பத்திற்கு நிதி உதவியையும் வழங்கினார்.

வேலூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Vellore Power Shutdown Today

Nandhinipriya Ganeshan June 26, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது. இந்தப் பதிவில் ஒவ்வொரு மாதத்திற்கும், வேலூர் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். Vellore மின்தடை பகுதிகள் ஜூன் 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

ராணிப்பேட்டை அருகே 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது!

Abhinesh A.R June 18, 2023

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே காரில் குட்கா கடத்தியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 164 கிலோ எடையுள்ள ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை தரும் பாக்குகள் மற்றும் ரொக்கம் ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் திமுகவிற்கு இறங்குமுகம்.. பாஜக ஏறுமுகம்..! - வேலூர் இப்ராஹிம் பேட்டி

Saraswathi June 17, 2023

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி ஏறுமுகத்திலும், திமுகவின் வளர்ச்சி இறங்குமுகத்தில் இருப்பதாகவும் பாஜக சிறுபான்மையினர் தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்  தமிழக ஆளுநரை அவமதிப்பது தொடர்ந்துகொண்டிருக்கிறது.  சட்டமன்றத்திலேயே ஆளுநரை வைத்துக் கொண்டு அவருக்கு எதிராக இழிவாக பேசி, எழுந்து  செல்லக்கூடிய ஒரு நிலையை அவர் உருவாக்கினார். 

தாய் இறந்த சோகத்தில் மகனும் இறப்பு - காட்பாடி அருகே கிராமத்தில் சோகம்

Saraswathi June 17, 2023

காட்பாடி அருகே தாய் இறந்த சோகத்தில் மகனும் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அருகே டி .ஆர் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 45). தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவரது  தாய் கோசாலை (வயது 80), கடந்த  ஒரு மாத காலமாக உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்த நிலையில் நேற்று மாலை அவர் காலமானார்.