Mon ,May 20, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57

சேலம்

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்...ஆகஸ்ட் 3 இந்த மாவட்டங்களுக்கு விடுமுறை!

Priyanka Hochumin August 01, 2023

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடையெழு மன்னர்களில் ஒருவரான வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு வாயூரம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

வேலை கேட்பது போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு பட்டப்பகலில் கொள்ளை - ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது

Selvarani July 17, 2023

வாழப்பாடியில் வேலை கேட்பது போல் நடித்து பட்டப்பகலில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற ஒரு பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கவரக்கல்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி ராணி. இவரது மூத்த மகன் வெற்றிவேல் வாழப்பாடியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனையில் மெக்கானிக் டெக்னீஷியனாகவும், இளைய மகன் வெங்கடேஷ்  சேலத்தில் உள்ள தனியார் கார் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர். மூதாட்டியின் வீட்டுக்கு நேற்று சென்று இருவர் வேலை கேட்டனர்.

வாழப்பாடி அருகே உணவு துறை அதிகாரி போல் நடித்து மோசடி: போலீசார் விசாரணை

Baskar July 06, 2023

வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில் உணவுத்துறை அதிகாரி போல் நடித்து மளிகை கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை மிரட்டி  பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில் வசித்து வருபவர்  பழனிச்சாமி இவர் அதே பகுதியில்  மளிகை கடை மற்றும் உரக்கடை  நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் காலை  கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி உணவுத்துறை அதிகாரி என  கூறி உங்கள் கடையில் சட்டவிரோதமாக ஹான்ஸ் புகையிலை இருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும்  தகவலின் பேரில் சோதனை இட வந்துள்ளோம் எனக் கூறி மிரட்டி உள்ளார்.

எங்கள் பகுதியில் பேருந்தை நிறுத்திச் செல்லுங்கள்..! - பேருந்துக்காக கிராம மக்கள் உண்ணாவிரதம்!

Saraswathi July 01, 2023

ஆத்தூர் அருகே  அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.      சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காட்டுக்கோட்டை என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிற்காமல் சேலம், சென்னை புறவழிச்சாலையாக செல்வதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும்,  மாணவ மாணவிகளும், பாதிக்கப்படுவதாக கூறி அதிகாரிகளிடம் புகார் அளித்தும்  நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.      இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை ஓரத்தில் பந்தல் அமைத்து திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சதீஷ்குமார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் ஆத்தூர் ஊரக காவல் துறையினர்  ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.     அப்போது, அரசு பேருந்து நிற்காமல் செல்வது குறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் இது குறித்து தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.      இது குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், காட்டுக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கல்வி பயிலும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மட்டுமல்லாது 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் காட்டுக்கோட்டை பகுதியில் நிற்காமல் செல்வதால், தாங்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும், இதனால் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர். தங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Salem Power Shutdown Today

Nandhinipriya Ganeshan June 30, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.  இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது.  இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் சேலம் மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். சேலம் மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்... குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து  பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

பக்ரீத் பண்டிகை எதிரொலி - வீரகனூர் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Saraswathi June 27, 2023

சேலம்  மாவட்டம்  வீரகனூரில்  வாரந்தோறும்  சனிக்கிழமையன்று கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. மாவட்டத்திலேயே  மிகப்பெரிய  சந்தையாக இங்கு, சேலம்  மாவட்டமின்றி, வெளிமாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் வெள்ளாடுகள், செம்மறி  ஆடுகள், மேச்சேரி  இன  ஆடுகள், மாடுகள்  உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டுவருகின்றனர். தமிழகத்தில் பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வீரகனூரில்  நடைபெற்ற  கால்நடை சந்தையில் ஆடு, மாடுகளை  விற்பனை  செய்வதற்காக  ஏராளமான விவசாயிகள்  சுமார்  ஐந்தாயிரம் ஆடுகளையும், 500க்கும்  மேற்பட்ட மாடுகளையும்  கொண்டுவந்திருந்தனர்.   

சேலம் அருகே மளிகைக்கடையில் பணம் திருடிய மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை - வீடியோ

Saraswathi June 26, 2023

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மளிகைக் கடையின் ஷட்டரை உடைத்து, ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையத்தை சேர்ந்தவர் விஜயன். வாழப்பாடி மெயின் ரோட்டில் இவர் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் விஜயன் மளிகைக் கடையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை திரும்பிவந்து பார்த்தபோது, இரும்பு கேட் உடைக்கப்பட்டு, கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்த விஜயன், உள்ளே சென்றபோது, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கள்ளாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தில் விஜயன் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர். வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி தொடர் கொள்ளை நடைபெற்றுவருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடராஜன் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ரொம்ப பெருசு: தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி!

Iravaadhan June 23, 2023

சேலம்: இந்திய வீரர் நடராஜன் கட்டியுள்ள மைதானத்தை முன்னணி நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்துள்ளார். அதேபோல் சிறிய நகரத்தில் இருந்து சாதித்த வீரர்களில் தோனிக்கு பின் நடராஜன் தான் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், அசோக் சிகாமணி, விஸ்வநாதன், உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இந்த மைதானத்தில் 4 பிட்ச்கள், இரண்டு பயிற்சி தடங்கள், உடற்பயிற்சி கூடம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் கேலரியும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான வீரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மைதானத்தை திறந்து வைத்த இந்திய கிரிக்கெட் தினேஷ் கார்த்திக் பேசுகையில், நடராஜனின் கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கக் கூடிய ஒன்றாகும். பெரிய நகரங்களில் இருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சின்ன ஊரில் இருந்து வந்து சாதித்தவர் தான் எம்எஸ் தோனி. அதேபோல் சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து வந்து இந்திய கிரிக்கெட்டில் சாதித்தவர் நடராஜன். ஐபிஎல் தொடருக்கு பின் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை என்று ஹெய்டனும், ரிக்கி பாண்டிங்கும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். அதுதான் நடராஜன் ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம். தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக ஏராளமானோர் விளையாடி இருக்கிறார்கள். நானும் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால் எனக்கு இப்படியொரு மைதானம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. என்னுடன் இருக்கும் மக்கள் என்னைவிட மிகப்பெரிய வீரர்களாக வர வேண்டும் என்ற ஆசையுடன் நடராஜன் மைதானத்தை கட்டியுள்ளார். நடராஜன் தான் பெற்றதை இந்த சமூகத்திற்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதன் சாட்சிதான் இந்த மைதானம் என்று தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே காவல்நிலைய வளாகத்தில் மோதல் - 3பேர் கைது..!

Baskaran June 21, 2023

ஆட்டையாம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம்  ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (29) என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18ஆம் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகனான பெயிண்டர் நவீன்குமார் (27) என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தியுள்ளார்.

சேலத்தில் பேருந்து ஏறி மாணவன் உயிரிழப்பு - பெற்றோர் கண்ணீர் மல்க ஆட்சியரிடம் மனு..!

Baskaran June 19, 2023

சேலம்: சேலத்தில் பள்ளி மாணவன் மீது அரசு பேருந்து ஏறி உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோர் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகன் கவேஷ்(12). அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சாக்கடை கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை சாலையோரம் குவிக்கப்பட்டு இருந்தது. அதன் மீது ஏறி சிறுவன் நடந்தபோது தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்து சிறுவன் தலை மீது ஏறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில், இந்த விபத்திற்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் எடுக்கப்பட்ட மண் மற்றும் கற்கள் சாலை ஓரத்திலேயே குவிக்கப்பட்டிருந்தது. அரசின் அஜாக்கிரகையால் தனது மகன் உயிரிழந்ததாக கூறி வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற விபத்துக்கள் இனி நடைபெறாமல் இருக்க அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் பள்ளி முன்பும், பேருந்து நிறுத்தத்தின் முன்பும், சாலை பாதுகாப்பு காவலர்கள் அனைத்து நாட்களும் காவலுக்கு இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனது குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.