Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57

சீரியல்

விஜய் டிவி சீரியல்களின் பெயர் பட்டியல் & ஒளிப்பரப்பாகும் நேரம்.. | Vijay TV Serial Name List 2023 Tamil

Nandhinipriya Ganeshan May 27, 2023

விஜய் டிவிக்கு என்று தனியொரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதற்கு காரணம் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் அனைத்தும் மாறுப்பட்ட கோணத்திலும் பார்ப்பதற்கே புதுமையாகவும் இருக்கும். முதலில் இந்த சேனல் கோல்டன் ஈகிள் கம்யூனிகேஷன் (GEC) என்ற பெயரில், 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1995 ஆம் ஆண்டு தான் சேனலின் பெயர் 'விஜய் டிவி' என்று மாற்றப்பட்டது. சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மவுஸு என்பது குறையவே இல்லை. அந்தளவிற்கு தன்னுடைய தனித்துவமான சிந்தனைகள் மூலமாக மக்களை ஈர்த்து வருகிறது விஜய் டிவி. தற்போது, இந்த பதிவில் பல்லாயிரக்கணக்கான நெஞ்சங்களை கொள்ளையடித்த விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் பற்றிய முழுவிபரங்களையும் பார்க்கலாம்.

மகராசி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Magarasi Serial

Priyanka Hochumin May 26, 2023

கடந்த 21 அக்டோபர் 2019-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் மகராசி. இதில் முக்கிய கதாபாத்திரமாக திவ்யா ஸ்ரீதர், எஸ்எஸ்ஆர் ஆர்யன் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

தாலாட்டு சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thalatu Serial

Priyanka Hochumin May 25, 2023

கடந்த 26 ஏப்ரல் 2021-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 11.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தாலாட்டு. இதில் முக்கிய கதாபாத்திரமாக கிருஷ்ணா, ஸ்ருதி ராஜ், ஸ்ரீ லதாஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

இலக்கியா சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Ilakkiya Serial

Gowthami Subramani May 24, 2023

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

திருமகள் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Thirumagal Serial

Priyanka Hochumin May 23, 2023

கடந்த 12 அக்டோபர் 2020-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் திருமகள் . ஜெமினி டிவியில் ஒளிபரப்பான 'அதோ அத்தம்மா குதுரோ' என்ற தெலுங்கு சீரியலின் ரீமேக்காக எடுக்கப்பட்டாலும், பின்னர் கதைக்களம் மாற்றப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரமாக ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

பாண்டவர் இல்லம் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Pandavar Illam Serial

Nandhinipriya Ganeshan May 23, 2023

பாண்டவர் இல்லம் சீரியல்: மகாபாரத்தில் வரும் பாண்டவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியில் இருந்து சன் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் பாப்ரி கோஷ், ஆர்த்தி சுபாஷ், கிருத்திகா அண்ணாமலை ஆகியோர் முக்கிய வேடங்களில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், மகிமா, சோனியா / ஸ்வேதா, பாரதி கண்ணன் மற்றும் டேவிட் சாலமன் ராஜா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பாண்டவர் இல்லம் சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். பாண்டவர் இல்லம் சீரியலின் கதை.. பெரிய சுந்தரம் மற்றும் அவரது ஐந்து பேரர்களான ராஜ சுந்தரம் பாண்டவர், நல்ல சுந்தரம் பாண்டவர், அழகு சுந்தரம் பாண்டவர், அன்பு சுந்தரம் பாண்டவர் மற்றும் குட்டி சுந்தரம் பாண்டவர் ஆகியோரின் கதையே இந்த பாண்டவர் இல்லம். இவர்களுடைய வீட்டில் பெண்கள் என்ற வார்த்தைக்கே அனுமதி கிடையாது. ஏனென்றால், திருமண நாளிலேயே அண்ணனை இழந்த பிறகு, இவர்கள் அனைவரும் 'ஆண்கள் மட்டும்' தான் குடும்பம் என்றும், திருமணம் செய்ய மாட்டோம் என்றும் சபதம் செய்துக்கொள்கின்றனர். ஆனால் ஒரு பெண் அவர்களின் வாழ்க்கையில் நுழைந்தால் என்ன நடக்கும்? அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதுவே பாண்டவர் இல்லம் சீரியலின் கதைக்களம்.

பிரியமான தோழி சீரியல் லேட்டஸ்ட் எபிசோடு ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Sun TV Priyamana Thozhi Serial

Gowthami Subramani May 22, 2023

பொழுதுபோக்குத் தொலைக்காட்சி சேனலான சன்டிவி மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் சேனலாகும். அதிலும், தினந்தோறும் மக்களின் கவனத்தை ஈர்த்தவாறு அமையக்கூடியது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். நிறைய புதிய புதிய தொடர்கள், புது புது கதாபாத்திரங்களுடனும், கதைகளுடனும் களமிறங்கி சன் டிவி பிரியர்களின் ஆர்வத்தைக் கூட்டுகின்றன. அந்த வகையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல் கதாபாத்திரங்கள், ஒளிபரப்பாகும் நேரம், நாள், தயாரிப்பாளர், இயக்குநர், இன்றைய எபிசோடு விவரங்கள் மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழுத் தகவல்களை இந்தப் பதிவில் காணலாம்.

செவ்வந்தி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Sevvanthi Serial

Priyanka Hochumin May 22, 2023

கடந்த 11 ஜூலை 2022-இல் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் செவ்வந்தி. இரண்டாம் மனைவியாக ஒருவருக்கு வாக்கப்பட்டு போகும் மனைவி சந்திக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த சீரியல். இதில் முக்கிய கதாபாத்திரமாக திவ்யா ஸ்ரீதர், ராகவ் ரங்கநாதன், நிதின் ஐயர் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

அருவி சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Aruvi Serial

Nandhinipriya Ganeshan May 22, 2023

அருவி சீரியல்: கடந்த 2021,18 அக்டோபர் மாதத்தில் இருந்து சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 2.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் அருவி. மாமியார் மற்றும் மருமகளின் அழகான உறவை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் ஜோவிதா ஜோன்ஸ், அம்பிகா, மற்றும் கார்த்திக் வாசுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஈஸ்வர் ரகுநாதன் மற்றும் லாவண்யா தேவி ஆகியோர் துணை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த சீரியல் உதயா டிவியில் ஒளிபரப்பாகி வரும் கன்னட சீரியலான கஸ்தூரி நிவாசாவின் ரீமேக்காக இருந்தாலும், வேறுப்பட்ட கதைக்களத்தை கொண்டுள்ளது. இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம். அருவி சீரியல் நடிகை, நடிகர்கள்: உண்மையான பெயர் [Real Name] கதாபாத்திரத்தின் பெயர் [Character Name] ஜோவிதா ஜோன்ஸ் அருவி கார்த்திக் வாசுதேவன் புகழேந்தி அம்பிகா சரஸ்வதி சிவக்குமார் ஈஸ்வர் ரகுநாதன் ஈஸ்வரமூர்த்தி லாவண்யா தேவி   லக்ஷ்மி ஈஸ்வர் வி.ஜே.சாம்   கலைசெல்வன் கிரிஷ்    விஸ்வநாதன் ஜீவிதா சிவசங்கரி கிரித்திகா லட்டு இந்து கலை சூப்பர்குட் கண்ணன் சிவக்குமார் ஸ்வப்னா சரத் நீலவேணி சோனியா விக்ரம்  வெண்ணிலா அருவி சீரியலின் கதை.. தாயில்லை என்றாலும் தைரியமான துணிச்சலான பெண்ணாக வருகிறாள் அருவி. அவள் தனக்கு பிடித்ததை எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்துகிறாள். அதேபோல், எந்த கருத்துக்களையும் யாருக்கும் பயமின்றி கூறுபவள். அவள் கதையின் நாயகனான புகழை விரும்பி இருவரும் திருமணமும் செய்துக்கொள்கின்றனர். புகழும் அருவியின் குணத்தை விரும்பி அவளுக்காக அனைத்தையும் மாற்றிக்கொள்ள ஆரம்பிக்கிறான். ஆனால் அவனது அனைத்து முடிவுகளும் அவனது தாயார் சரஸ்வதியால் நிர்வகிக்கப்படுகிறது. குடும்பம் பின்பற்ற வேண்டிய விதிகளை அமைத்து, சரஸ்வதி ஒரு கண்டிப்பான வீட்டுத் தலைவியாக வலம் வருகிறார். எல்லோரும் அவளுடைய கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும், அவள் என்ன முடிவெடுத்தாலும் அவர்கள் உடன்பட வேண்டும். தன் குடும்ப உறுப்பினர்கள் மீது தனக்கு இருக்கும் அதிகாரத்தை தயங்காமல் வெளிப்படுத்துவராக இருக்கிறார். ஆனால், அருவியை திருமணம் செய்துக்கொண்டதன் மூலம் புகழே முதன்முறையாக சரஸ்வதிக்கு எதிராக செல்கிறார். இதை கண்டு சரஸ்வதி வருத்தப்படுகிறார். அதுமட்டுமல்லாமல், அருவி மாமியார் சரஸ்வதி அமைத்த அனைத்து தடைகளையும் உடைக்கிறாள். இந்த விஷயங்கள் அவர்களைச் சுற்றி ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்குகின்றன. அவர்களுக்கிடையே புகழ் எப்படி சமாதானத்தை ஏற்படுத்துகிறார் என்பது அருவி சீரியலின் கதைக்களம். அருவி சீரியல் இன்றைய எபிசோட் அருவி சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும். அருவி சீரியல் ப்ரோமோ டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் அருவி சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 

மலர் சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Malar Serial

Nandhinipriya Ganeshan May 19, 2023

மலர் சீரியல்: மலையாள தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 'சாந்த்வானம்' என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த 'மலர்'. மலையாளத்தில் அதிக கவனத்தை பெற்ற இந்த சீரியலில் ப்ரீத்தி ஷர்மா, இந்திரன், நிவிஷா, அக்னி, மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பிப்ரவரி 27, 2023 முதல் மதியம் 03.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.  மலர் சீரியலின் கதை.. மலர் மற்றும் பார்வதி என்ற இரண்டு சகோதரிகளின் வாழ்க்கையை எடுத்துக்கூறம் அழகான கதை. வலுவான கொள்கைகள், மதிப்புமிக்க உறவுகள் மற்றும் பிணைப்புகளை கொண்ட தைரியமான பெண்ணான மலரின் மிகப் பெரிய ஆசையே பார்வதிக்கு பிடித்த வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதாவது, தனது சகோதரியின் கனவை நிறைவேற்றுவதற்காக தன்னையே தியாகம் செய்கிறாள். இதற்காக, மலர் எந்த மாதிரியான சவால்களை சந்திக்க போகிறாள் என்பதே கதைக்களம். மறுபுறம், தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மதிக்கும் ஒரு குடும்ப பையனாக வருகிறார் அர்ஜுன். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது என்ன நடக்கும்?