Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,130.69
-617.73sensex(-0.85%)
நிஃப்டி21,849.60
-206.10sensex(-0.93%)
USD
81.57

செயலிகள்

வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்: இனி செக்யூரிட்டி டைட் தான்

Chandrasekar July 12, 2023

வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் நம்பர்களுக்கான புதிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில், 'போன் நம்பர் ப்ரைவஸி'என்கிற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் வழியாக, ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டியின் கீழ் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் கலந்துகொள்ளும் போது, யார் என்றே தெரியாத மற்ற குழு மெம்பர்களிடம் இருந்து உங்களின் பெயர் மற்றும் போன் நம்பரை மறைக்க முடியும்; கூடவே அனைத்து மெசேஜ்களுக்கும் ரியாக்ட் செய்யவும் முடியும். இந்த அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை காட்டும் ஸ்கிரீன் ஷாட் ஒன்றும் - வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோ வலைத்தளம் வழியாக - வெளியாகியுள்ளது. போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது குழு அனௌன்ஸ்மென்ட் குரூப் இன்ஃபோவின் கீழ் அணுக கிடைக்கும். இந்த அம்சத்தை இயக்கும் போது, கம்யூனிட்டி அட்மின் மற்றும் ஏற்கனவே உங்களுடைய மொபைல் நம்பரை சேமித்து வைத்திருக்கும் மெம்பர்களை தவிர மற்ற நம்பர்களிலிருந்து உங்கள் போன் நம்பர் மறைக்கப்படும். குழு அட்மின்களுக்கு உங்களுடைய போன் நம்பர் ஏற்கனவே தெரியும் என்பதால், இந்த அம்சம் கம்யூனிட்டி மெம்பர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதுதவிர்த்து, சொந்த விருப்பத்தின்கீழ் குறிப்பிட்ட கம்யூனிட்டி மெம்பர்களுடன் உங்களுடைய மொபைல் நம்பரை பகிர்ந்துகொள்ளவும் விருப்பமும் இருக்கும். ஒட்டுமொத்தமாக வாட்ஸ்அப்பின் இந்த புதிய போன் நம்பர் ப்ரைவஸி அம்சமானது, உங்கள் போன் நம்பரை, கம்யூனிட்டியில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பார்வையில் பாடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் தற்போது வரையிலாக அனைத்து வாட்ஸ்அப் குழு பயனர்களுக்கும் வெளியிடப்படவில்லை. வாட்ஸ்அப்பீட்டாஇன்ஃபோவின் கூற்றுப்படி, இது ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.23.14.19 வாட்ஸ்அப் பீட்டா மற்றும் ஐஓஎஸ் 23.14.0.70 பீட்டா வெர்ஷன்களை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஒருவேளை நீங்களும் இந்த புதிய அம்சத்தை முயற்சிக்க விரும்பினால் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது டெஸ்ட்ஃபிளைட்டிலிருந்து வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் பில்ட்-ஐ பதிவிறக்கம் செய்யலாம். அறியாதோர்களுக்கு வாட்ஸ்அப் குழு என்றால், ஒரே மாதிரியான நோக்கங்களை கொண்ட வெவ்வேறு வாட்ஸ்அப் குரூப்களை "ஒரே குடையின்" கீழ் கொண்டுவந்து, ஒழுங்கமைத்து ஒன்றிணைக்கும் இடமாகும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்டை டெலிட் செய்வது எப்படி? | How to Delete Threads Account in Tamil

Nandhinipriya Ganeshan July 12, 2023

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர். இந்த ட்விட்டரை கடந்த அக்டோபர் மாதம் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் சுமார் ரூ.3.64 லட்சம் கோடி கொடுத்து வாங்கினார். இதையடுத்து ட்விட்டர் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. அதாவது, ட்விட்டர் பணியாளர்கள் நீக்கம், பயன்படுத்தப்படாத ட்விட்டர் கணக்குகள் நீக்கம், பிரபலங்கள் பெயரில் இருக்கும் போலி அக்கவுண்ட்கள் நீக்கம், ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக் பெற கட்டணம், ட்வீட்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு, இறுதியில் ட்விட்டர் லோகோ மாற்றம் என பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்தது. இவையனைத்தும் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பயனர்களிடையே பெரும் குழப்பத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தியது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பல நிறுவனங்கள் களத்தில் குதித்தன. இந்த நேரத்தில் தான் ட்விட்டருக்கு போட்டியாக புதிய தளத்தை உருவாக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் இறங்கியது. அப்படி உருவாக்கப்பட்ட புதிய செயலி தான் 'த்ரெட்ஸ்'. இந்த புதிய செயலியை கடந்த ஜூலை 06 ஆம் தேதி மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க் அறிமுகம் செய்தார். இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரே நாளில் 5.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றது. ட்விட்டர் போலவே இருக்கும் இந்த செயலியிலும் கருத்துகளை எழுத்து வடிவில் பதிவிடவும், இணைப்புகளை பகிரவும், புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடவும் முடியும். இதை மற்றொருவர்கள் லைக், ஷேர், கமெண்ட் செய்ய முடியும், மேலும் பிற நபர்களின் கணக்குகளை பின்தொடரலாம். அதுமட்டுமல்லாமல், தனி நபருடன் சாட்டிங் செய்யும் வசதியும் இருக்கிறது. இந்த புதிய பிளாட்ஃபார்மை முயற்சிக்கவும், அதில் என்ன புதியதாக வழங்கப்படுகிறது என்பதைப் பார்க்கவும் பலரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலமாக த்ரெட்ஸ் -இல் இணைய தொடங்கினர். அதாவது, த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்க வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்க வேண்டும். அப்படி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை பயன்படுத்தி த்ரெட்ஸ் செயலியில் அக்கவுண்ட் தொடங்கும்போது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல் உங்கள் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க முடியாது. ஆனால், இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்காமல், த்ரெட்ஸ் அக்கவுட்ண்ட்டை செயலிழக்க செய்ய முடியும். அது எப்படி செய்வது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. How to Delete Threads Account in Tamil? ➦ இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை டெலிட் செய்யாமல் த்ரெட்ஸ் அக்கவுண்ட்டை நீக்க, முதலில் த்ரெட்ஸ் செயலியை திறந்து கீழே வலது மூலையில் உள்ள ப்ரொஃபைல் ஐகானை (Profile Icon) க்ளிக் செய்யவும். ➦ பின்னர், மேல் வலது மூலையில் இருக்கும் மெனு ஐகானை (Menu Icon) க்ளிக் செய்யவும். ➦ அதில் அக்கவுண்ட் (Account) என்பதை க்ளிக் செய்து, ப்ரொஃபைலை செயலிழக்கச் செய்யவும். ➦ இறுதியாக டிஆக்டிவேட் த்ரெட்ஸ் (Deactivate threads) சுயவிவரத்தை தட்டி உங்கள் விருப்பதை உறுதிப்படுத்தவும். ➦ அவ்வளவு தாங்க!

இனி தெரியாதவர்கள் அழைத்தால் வாட்ஸ்அப் இதை செய்யும்!

Abhinesh A.R June 20, 2023

வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை பயனர்களுக்கு கொண்டுவந்துள்ளது. இதன்படி, தெரியாதவர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை சைலன்ட் செய்யும் வசதி கிடைக்கும்.

Truecaller Call Recorder: பழைய சேவைக்கு உயிர் கொடுத்த ட்ரூகாலர் ஆப்!

Abhinesh A.R June 15, 2023

Truecaller Update: பிரபல ட்ரூகாலர் செயலியில் அழைப்புகளை பதிவு செய்யும் அம்சம் மீண்டும் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் iOS இயங்குதளங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விலைக்கு ஏற்ற அம்சங்களுடன், அட்டகாசமான மோட்டோரோலா மொபைல்..! | Motorola Razr 40 Ultra

Gowthami Subramani June 02, 2023

பிரபல மொபைல் உற்பத்தி நிறுவனமான மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த மாடலான Motorola Razr 40 Ultra மொபைலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைலின் சிறப்பம்சங்கள், இந்தியாவில் இதன் விலை மற்றும் அதன் முக்கிய விவரங்களைக் காணலாம்.

சூப்பர் ஸ்பெஷலா களமிறங்கும் ரியல்மி 11 ப்ரோ 5ஜி.. அதுவும் இவ்ளோ கம்மி விலையில்..! | Realme 11 Pro 5g

Gowthami Subramani June 01, 2023

இந்தியாவில் ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைல் அட்டகாசமான அம்சங்களுடன் வெளியாக உள்ளது. மொபைல் பிரியர்களால் விரும்பப்படும் பிராண்டுகளில் ஒன்றாக விளங்குவது ரியல்மி. ரியல்மி தற்போது இதன் அடுத்த வெர்சனாக ரியல்மி 11 ப்ரோ 5ஜி மொபைலை அறிமுகப்படுத்த உள்ளது. முன்னரே, ரியல்மி 11 ப்ரோ ப்ளஸ் மொபைல் ஆனது, கடந்த மே 9 ஆம் தேதி சீனாவில் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. இந்தப் பதிவில், ரியல்மி ப்ரோ 11 5ஜி மொபைல் சிறப்பம்சங்கள், விலை மற்றும் அதன் முக்கிய விவரங்களைக் காண்போம்.

Xiomi Mix Fold 3 மொபைல்ல இருக்க மெயின் ஸ்பெஷாலிட்டியே இது தான்..! | Xiaomi Mix Fold 3 Specs

Gowthami Subramani May 31, 2023

பல்வேறு முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், சந்தைக்கு ஏற்றவாறு புதுவித அமைப்புகளுடன் மொபைல்களை ரிலீஸ் செய்து வருகின்றன. அந்த வகையில் Fold மொபைல்களும் அடங்கும். Xiaomi நிறுவனம் Fold மொபைல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அதன் படி, Xiaomi Mix Fold 1 மற்றும் Xiaomi Mix Fold 2 மொபைல்கள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, Xiaomi Mix Fold 3 மொபைலை Xiaomi நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மொபைல் இவ்ளோ விலை கம்மியா..? வாங்குனா இந்த மொபைல் தான் வாங்கணும்..! | Oppo Reno 10, Reno 10 Pro, Reno 10 Pro+

Gowthami Subramani May 30, 2023

Oppo நிறுவனம் அட்டகாசமான வடிவமைப்புடனும், கண்ணைக் கவரும் நிறங்களிலும் Oppo Reno Series மொபைல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது மே 24, 2023 ஆம் நாளில் சீனாவில் அறிமுகமானது. இந்தியாவில் ஜூன் அல்லது ஜூலை தொடக்கத்தில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் அறிவிப்பிற்கு முன்பே, Oppo Reno Series மொபைல்களின் வடிவமைப்பு, சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.

வேற லெவல் அம்சங்களுடன் விரைவில் வெளியாக உள்ள Nothing Phone 2..! | Nothing Phone 2 Specifications

Gowthami Subramani May 26, 2023

Nothing Phone ஆனது வரும் ஜூலை மாதம் அதிகார்ப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் என இதன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த மொபைலின் சிறப்பம்சங்கள் மொபைல் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இது குறித்த விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

இவ்ளோ கம்மி விலையில, இப்படி ஒரு போன் கிடைக்கவே கிடைக்காது..! | Vivo iqoo Z7s 5g

Gowthami Subramani May 25, 2023

Vivo நிறுவனம் iQoo z7s மொபைலை மே 24 ஆம் நாள் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இது iQoo z7 தொடரின் சமீபத்தில் வெளிவந்த மொபைல் ஆகும். இந்த மொபைல் MediaTek Dimensity 920 SoC-ஐக் கொண்டுள்ளது. இதன் பேட்டரியானது 4,500mAh Li-ion பேட்டரி யூனிட்டைக் கொண்டிருக்கும். இதன் மூலம், 44 வாட் ஃப்ளாஸ் சார்ஜ் வசதியைத் தரும்.