குமுளி மலைச்சாலையில் நடந்த விபத்தில் தீவிர சிகிச்சையில் இருந்த கார் ஓட்டுநர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சபரிமலை சென்று திரும்பிய ஐயப்ப பக்தர்கள் கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் தேனி பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தேனி மாவட்டத்தில் பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, போலீசார் பிரேதத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் ராமச்சந்திரன்-ரம்யா எனும் தம்பதிக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்து, கடந்த நவம்பர் 29 ஆம் தேதி மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் வைகை ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி - போடிநாயக்கனூர் இடையே அகல ரயில் பாதை அதிநவீன பெட்டியுடன் சோதனையோட்டம் செய்யப்பட உள்ளதால் டிசம்பர் 6ம் தேதி யாரும் அப்பகுதி தண்டவாளத்தை கடக்க வேண்டாம் என எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு கட்டிடங்களாக செயல்பட்டு வருகிறது. இதில் 5 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் எல்கேஜி யுகேஜி மாணவ மாணவிகள் பயின்றுவந்த பள்ளிக்கட்டிடத்தை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக பழமையான கட்டிடம் சேதமடைந்துள்ளது என்று கூறி இடிக்கப்பட்டது. இதற்கு மாற்றுக் கட்டிடம் அதே இடத்தில் கட்டப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வரை கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்படாமல் உள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்து வருகிறது.
தேனியில் தாய்மாமன் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது, ஆற்றில் குளிக்கப்போய் தவறி விழுந்து புதுமணத் தம்பதி பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த சஞ்சய் லண்டனில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோவையைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. தாய்மாமா திருமணத்திற்கு லண்டனில் இருந்ததால் வரமுடியாத சஞ்சய், தற்போது ஊர் திரும்பிய நிலையில், போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார். இதையடுத்து போடி சென்ற தம்பதியை, சஞ்சய் அருகாமையில் உள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளார்.
தேனி மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி தெற்கு ஒன்றியத்தில் திமுக பொறுப்பாளராக இருக்கும் ரத்தின சபாபதி, வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவரும் கூட. இவர் நேற்று இரவு வீரபாண்டியில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவருடைய வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து உருட்டு கட்டை மற்றும் கற்களால் ரத்தினசபாபதியை தாக்கி உள்ளனர். மேலும் அவருடைய வீட்டின் மீதும் அந்த கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.