Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

இந்தியா

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. அதிக பாதிப்பு இந்த இடத்தில் தான்..

Nandhinipriya Ganeshan March 22, 2023

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆனால், மறுநாள் 918 ஆகவும், நேற்று 646 ஆகவும் பாதிப்பு குறைந்த நிலையில், மீண்டும் இன்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி (காலை 8 மணி வரை) நேரத்தில் புதிதாக 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக, மகாராஷ்டிரா - 280 பேர் குஜராத் - 176 பேர் கேரளா - 113 பேர் கர்நாடகா - 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 98 ஆயிரத்து 118 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கேரளா, சத்தீஷ்கரில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,813 ஆக உயர்ந்துள்ளது.

தாயின் வயிற்றில் இருக்கும் 7 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை..

Nandhinipriya Ganeshan March 17, 2023

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே 2 முறை கருச்சிதைவு, ஒரு முறை பிறந்த குழந்தை இறப்பு என துயரத்தில் துடித்த பெண், இம்முறை குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பினார். அவரை பரிசோதனை செய்த மகப்பேறு மற்றும் இதயவியல் மருத்துவர்கள், பலூன் மூலம் அடைப்பை விரிவடைய செய்யும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முன்வந்தார்கள். அதன்படி, தாயின் அடிவயிற்று வாயிலாக குழந்தையின் இதயத்திற்கு பலூனை கொண்டு சென்று அடைப்பை சரிசெய்திருக்கிறார்கள். திராட்சைப் பழம் அளவிலான இதயத்தில் மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சையை 90 நொடிகளில் மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து சாதனை படைத்துள்ளனர். ஒரு அரசு மருத்துவமனையில் இப்படியொரு சிக்கலான அறுவைச் சிகிச்சையை செய்தது இதுவே முதல் முறையாகும். சிகிச்சையில் தாயும், சேயும் நலமாக உள்ளார்கள் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்திய மருத்துவர்களை பெருமைப்படுத்தும் விதமாக சாதனை படைத்த அம்மருத்துவர்களை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. உஷார் மக்களே! | Corona Cases in Tamil Nadu

Nandhinipriya Ganeshan March 14, 2023

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 39 பேருக்கு தொற்று கண்டறியபட்ட நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 235 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், திருச்சியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் கொரோனா தொற்றால் கடந்த மார்ச் 11ஆம் தேதி உயிரிழந்துள்ளார். எனவே, மீண்டும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

வழிமறித்த யானை! எடுறா ரிவேர்ஸ்.. பாருடா ஓட்டத்த.. பரவும் த்ரில் காட்சி..

Gowthami Subramani March 07, 2023

கோத்தகிரி அருகே உள்ள மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று அதன் வழியே வந்த கார் ஒன்றை வழிமறுத்தது. இந்த நிகழ்வு மேட்டுப்பாளையம், கோத்தகிரி மலைப்பாதையில் உள்ள குஞ்சப்பனை அருகே நடந்துள்ளது. இரவு நேரத்தில் அந்தப் பகுதி வழியாக வந்த கார் ஒன்றை காட்டு யானை வழிமறுத்ததுடன் தாக்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் காரைப் பின்னோக்கி இயக்கி, பிறகு காரை வேகமாக முன்னே செலுத்தி தப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநில தொழிலாளர்கள் குறித்த தவறான வீடியோ தகவல் பரப்பியதாக பிரபல யூடியூபர் மீது புகார்!

Gowthami Subramani March 06, 2023

கடந்த சில நாள்களாகவே, வட மாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இதில் தவறான வீடியோவை பதிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. பிரபல யூடியூபர் கோபி மற்றும் சுதாகர் அவர்கள், தமிழர்கள் செய்ய மறுக்கும் வேலைகளை குறைந்த ஊதியத்துக்கு வட மாநிலத்தவர்கள் செய்வதையும், முன்பதிவு செய்யப்பட்டுள்ள ரயில் இருக்கைகளை ஆக்கிரமிப்பது, கட்டுமானத் தொழிலுக்கு தாங்கள் செல்கிறோம் என்ற வகையில் இவர்கள் வீடியோ ஒன்றை காமெடியாகப் பதிவிட்டிருந்தனர்.

மேக்கப் போட்ட மணப்பெண்ணின் முகம் வீக்கம்! திருமணத்தை நிறுத்திய மணமகன்..

Gowthami Subramani March 04, 2023

மணப்பெண் ஒருவருக்கு மேக்கப் போட்ட பிறகு, அவரது முகம் கருமை அடைந்து முகம் வீங்கியதால், திருமணமே நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை சேர்ந்த பெண் ஒருவருக்கும், வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகி பேசி முடிக்கப்பட்டது. இந்நிலையில், அவர்களுக்கு நேற்று முன் தினம் நடக்க இருந்தது. இந்நிலையில், திருமணத்துக்கு சில தினங்களுக்கு முன்பாக மணப்பெண், அரிசிகெரேயில் உள்ள கங்கா என்பவரின் சொந்தமான அழகு நிலையத்திற்குச் சென்று மேக்கப் போட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரலில் படையடுத்த வட இந்தியர்கள்.! தமிழகத்தை விட்டு வெளியேறுகிறார்களா.?

Gowthami Subramani March 04, 2023

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே, வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றதாக வீடியோ பரவி வைரலாகி வருகிறது. இதற்கிடையில், வட மாநிலத்தவர்கள் சென்னை சென்ட்ரலில் படையெடுத்து நிற்பதாகக் கூறப்படுவது அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.

பால் வாங்க ஆதார் கட்டாயம்.. என்னப்பா புதுசு புதுசா சொல்றீங்க? | Aavin Milk

Nandhinipriya Ganeshan March 03, 2023

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, அட்டைகள் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இனி ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் கட்டாயம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், அட்டைகள் மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்களை இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆவின் வாடிக்கையாளர்கள் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேர்க்கப்படுகிறது என ஆவின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி ஒரு வசதி இருப்பதே பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். அட ஆமாங்க, ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் பணம் செலுத்தி அட்டையை வாடிக்கையாளர்கள் புதுப்பித்து கொள்பவர்களுக்கு அரை லிட்டருக்கு 50 பைசாவும், ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை சலுகை விலையில் பால் கிடைக்கிறது.

மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம்! துபாயில் ஆடம்பர திருமணம்.. பிறகு வெளிவந்த உண்மை!

Gowthami Subramani March 02, 2023

துபாயில் நடைபெற்ற ஆடம்பர பாகிஸ்தானிய திருமண விழாவில், மணப்பெண்ணின் எடைக்கு நிகரான தங்கம் காட்சிபடுத்தப்பட்டது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில், துபாயில் ஆடம்பரமான பாகிஸ்தான் திருமணம் நடைபெற்றது. இதில், தங்கத்தின் அளவை மணப்பெண்ணின் எடைக்கு சமமாக வைத்து எடை போடப்பட்டதாக காட்சிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கம் போலியானது எனவும், இது திருமணத்தின் ஒட்டுமொத்த கருப்பொருளின் ஒரு பகுதி மட்டுமே என கண்டறியப்பட்டது.

ஆபத்து! புதிய வைரஸ் பரவல்.. குழந்தைகள் மரணம்..!

Gowthami Subramani March 02, 2023

தொற்று பரவல் காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில், சுவாசக் கோளாறு காரணமாக 7 குழந்தைகள் உயிரிழந்ததாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் இதுவரை அடினோவைரஸ் காரணமாக 12 இறப்புகள் பதிவாகியுள்ளன.