Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

நாமக்கல்

நாமக்கல் அருகே கோர விபத்து...5 பெண்கள் சம்பவ இடத்தில் பலி...5 வயது குழந்தை மட்டும் மீட்பு

Priyanka Hochumin February 28, 2023

பரமத்தி வேலூர் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த 5 பெண்கள் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பரிதமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த முழு விவரமும் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படியுங்கள். ரவி என்பவரின் மனைவி ஓட்டிச்செல்ல, அவருடன் கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா ஆகியோர் உடன் சென்றுள்ளனர். கோவிலில் தரிசனம் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பிய அவர்கள் பரமத்தி வேலூர் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி பெரும் விபத்துக்குள்ளாகியது. அந்த விபத்தில் 5 பெண்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர்.

நாமக்கல்லில் காவிரி-திருமணி முத்தாறு இணைப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி..!!

Sekar January 06, 2023

நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட கால கனவு திட்டங்களில் ஒன்றான காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, நாமக்கல் நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை டி.எம்.காளியண்ணன் நினைவு மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற உள்ளது.

மலேசியாவுக்கு முதல் முறையாக.. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து.. குஷியில் உற்பத்தியாளர்கள்!!

Sekar December 15, 2022

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட உள்ளதால், முட்டை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஒரு ரூபாய் கொடுக்காத கண்டக்டர்.. விஜய் பட பாணியில் 30,000 ரூபாயை இழப்பீடாக பெற்ற பயணி!!

Sekar December 10, 2022

விஜய் நடித்த தமிழன் பட பாணியில், பஸ் பயணியிடம் கூடுதலாக ஒரு ரூபாய் வசூலித்த அரசு போக்குவரத்து கழக பேருந்து நடத்துனருக்கு ரூ.30,000 அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஸ்'ல போகும்போது நம்மில் பலரும் சில்லறை பிரச்சினையை எதிர்கொண்டவர்களாக தான் இருப்போம். பல சமயங்களில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்காக நடத்துனரிடம் சண்டை போட்டுவிட்டு, கடைசியில் சில்லறையை வாங்காமலேயே சென்ற அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

தரக்குறைவாக பேசிய கல்லூரி முதல்வர்; கொதித்தெழுந்த மாணவிகள் செய்த காரியம்! 

Kanimozhi December 06, 2022

நேற்று வணிகவியல் துறை தலைமை பேராசிரியர்  நல்லுசாமி தனது துறையில் பயிலும் மாணவிகளின் இண்டன்ஷிப்புக்கு கையெழுத்து வாங்க கல்லூரி முதல்வர் பால் கிரேஸை சந்தித்துள்ளார். 

ஓடும் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி...சடலமாக மீட்பு!

Priyanka Hochumin October 18, 2022

தாயுடன் செல்லும் போது கொக்கு பாறை ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவி சடலமாக மீட்கப்பட்டார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே சிங்களகோம்பை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி கவிதா மற்றும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் இவர்களின் மகள் ஜீவிதா நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். எதிர்பாராத விதமாக ரெண்டு பெரும் தண்ணீரால் இழுத்து செல்லப்பட்டனர். சுமார் 500 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்ட கவிதா தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த மக்கள் அவரை காப்பற்றியுள்ளனர்.

போகாத ஊருக்கு டிக்கெட் கொடு...தகராறு செய்த போதை ஆசாமி...நடுரோட்டில் சண்டை வைரல் வீடியோ!

Priyanka Hochumin October 13, 2022

மது போதையில் பேசாம ஒரு இடத்தில உட்காராம பஸ்ல ஏறி, அந்த பஸ் போகாத ஊருக்கு டிக்கெட் கேட்டு பிரச்சனை செய்த போதைக்கார இளைஞன். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தானது காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஏறிய மது பிரியர் ஒருவர் அந்த பஸ் போகாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு நடத்துனரிடம் பிரச்சனை செய்துள்ளார். அவரும் எவ்ளவோ சொல்லி புரிய வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் வாக்குவாதம் முற்றி போக நடத்துனரை தாக்க ஆரம்பித்துள்ளார் போதை ஆசாமி.

நாமக்கல் கரண்ட் கட் லேட்டஸ்ட் அப்டேட்!... எப்போ போகும் எப்ப திரும்பி வரும்..

UDHAYA KUMAR December 15, 2022

ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ஆலம்பாளையம், ஆதனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, மல்லசமுத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, படவீடு, பரமத்திவெள்ளூர், பரமத்திவெள்ளூர், பரமத்திவெள்ளூர், பாண்டவீடு , ஆர்.புதுப்பட்டி, சீராப்பள்ளி, வேலூர், வெங்கரை, வெண்ணந்தூர்

ஆறு முடித்து 7வது திருமணம்.. தரகர் மூலம் கல்யாணம் பண்றீங்களா..? இதை தெரிஞ்சிக்கோங்க!!

Sekar September 23, 2022

ஆறு பேரை திருமணம் முடிந்து 7வது திருமணத்துக்கு தயாராக வந்த மோசடி பெண், தரகர் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் நாமக்கலில் கைது செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் கள்ளிபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான தனபாலுக்கு மதுரையை சேர்ந்த தரகர் பாலமுருகன் என்பவர் மூலம் சந்தியா என்ற 26 வயது பெண்ணுக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா மற்றும் மாமா என இருவர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். திருமணத்தை முடித்துக் கொண்டு ஒன்றரை லட்சம் ரூபாய் கமிஷனுடன் தரகர் மதுரைக்கு செல்ல, சந்தியாவின் அக்காவும், மாமாவும் கூட உடனே திரும்பிச் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்து திருமணம் முடிந்த சந்தோசத்தில் தனபால் மணவாழ்க்கையை தொடங்கிய நிலையில், 9ஆம் தேதி அதிகாலை தனபாலுக்கு தெரியாமல் பீரோவில் வைத்திருந்த கல்யாண பட்டுப்புடவை, நகைகளுடன் சந்தியா கம்பிநீட்டிவிட்டார்.

கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.ரங்கசாமி காலமானார்!!

Sekar September 15, 2022

கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கே.எஸ்.ரங்கசாமி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். கல்வியில் பின்தங்கி இருந்த தனது பிராந்தியத்தின் மூலை முடுக்கெல்லாம் கல்வியை எடுத்துச் செல்லும் நோக்கத்தில், ஆர்த்தி எஜுகேஷனல் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, திருச்செங்கோட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். தற்போது இவரது கல்வி சாம்ராஜ்யம் ஆரம்பக் கல்வி முதல், பொறியியல், பல் மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட பல கிளைகளாக விரிந்துள்ளது.