Mon ,Jun 17, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57

ஈரோடு

ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்.. | Erode Power Shutdown Today

Nandhinipriya Ganeshan June 30, 2023

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருநாள் மின்தடை (மாதாந்திர பவர் கட்) அறிவிக்கப்படும். அதன்படி, அனைத்து இடங்களிலும் வெவ்வேறு மணி நேரத்தில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரையிலும் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின்சார வாரியத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது.  இருப்பினும், சில சமயங்களில் மோசமான வானிலை, அதிக மழை, வெள்ளம் உள்ளிட்ட வேறு சில காரணங்களுக்காகவும் மின்தடை ஏற்படலாம். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் இவை சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். இது குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்ள மின்சாரத் துறையை அணுகலாம். ஆனால், இவ்வாறு தடை செய்யப்படும் மின்தடை, மாதாந்திர மின்தடையுடன் சம்பந்தப்படுத்தபடாது.  இந்தப் பதிவின் மூலமாக ஜூலை 2023 மாதத்தில் ஈரோடு மாநகரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த நாட்களில் மின்தடை செய்யப்படுகிறது என்பதை காணலாம். இதன் மூலம் மின்சாரத்தை பயன்படுத்தி ஏதேனும் முக்கிய பணிகள் இருந்தாலும் செய்துக்கொள்ள முடியும். ஈரோடு மின்தடை பகுதிகள் ஜூலை 2023: பராமரிப்பு பணிக்காக கீழ்கண்ட பகுதிகளில் காலை 09:00 மணிக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிவடைந்தால் மதியம் 04:00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும்.  சில சமயங்களில் நீட்டிப்பு பணிகள் இருந்தால், மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படலாம். விரைவில் அப்டேட் செய்யப்படும்... குறிப்பு: இதில் கொடுக்கப்பட்ட விவரங்கள், பல்வேறு இணையதளங்களில் இருந்து  பெறப்பட்டதாகும். எனவே, மின்தடை குறித்த மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த பகுதியின் மின்வாரியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

காளிங்கராயன் அணைக்கட்டில் வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறப்பு..!

Surya June 16, 2023

ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 120 நாட்கள் வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பவானியில் உள்ள காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வரை 90 கிலோ மீட்டர் சென்று நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் 15 ஆயிரத்து 743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து அணைக்கட்டில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். அக்டோபர் 13-ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால், விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. காளிங்கராயன் அணைக்கட்டு வாய்க்கால் பாசனத்தின் மூலம் வாழை, மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நடப்பாண்டும் விளைச்சல் பெருகும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக பவானியில் தொடரும் நகரமன்ற தலைவரின் அட்டூழியங்கள்..

Nandhinipriya Ganeshan May 25, 2023

பவானி நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக சார்பில் 20 கவுன்சிலர்களும், அதிமுக சார்பில் 4 பேரும், கம்யூ கவுன்சிலர் ஒருவரும், சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் உள்ளனர். மேலும், பவானி நகரமன்ற தலைவராக திமுகவின் சிந்தூரி இளங்கோவன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று (மே24, புதன்கிழமை) நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களான கவிதா, சுப்பிரமணி, கார்த்திகேயன், ரவி உள்பட 23 பேர் கலந்துக் கொண்டனர்.  கூட்டம் தொடங்கியதும், அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்தும், நகரமன்ற தலைவர் மதிப்பதில்லை என்றும், நகராட்சி ஒப்பந்த பணிகளை அவருடைய உறவினர்களுக்கு தருவதாகவும், வார்டில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில்லை என்றும் திமுக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், பவானி நகராட்சி வளர்ச்சிக்கு எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் ஒதுக்கி வைத்து முதல்வர் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொள்வதாகவும் நகரமன்ற தலைவர் மீது குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து திமுகவின் ஒன்பது கவுன்சிலர்களும், கம்யூ. கட்சியை சேர்ந்த இருவரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நகரமன்ற துணை தலைவர் மணி, நகரமன்ற தலைவரின் செயல் குறித்து தமிழக முதல்வருக்கு தகவல் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். திமுக நகரமன்ற தலைவரை திமுகவினரே குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோட்டில் பரபரப்பு..! மத்திய படை வீரர்கள் குவிப்பு!

Gowthami Subramani February 11, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல், வரும் பிப்ரவரி 27 ஆம் நாள் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்குதல் திரும்பபெறும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து, வேட்புமனு தாக்குதல் பெற்று இறுதியாக 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட உள்ளார்.

உலக சாதனைக்காக குமாரபாளையம் மாணவ, மாணவிகள் செய்த காரியம்!

KANIMOZHI January 17, 2023

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உலக சாதனைக்காக 102 மாணவ, மாணவிகள் மூன்றரை மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். 

பிரபல அரசியல் தலைவர் மரணம்! அதிர்ச்சியில் உறவினர்கள்.

Gowthami Subramani January 04, 2023

ஈரோடு கிழக்குத் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா இளம் வயதிலேயே மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரான இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா. இவர், தமிழக காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பி.ஏ.பொருளாதாரம் படித்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

கருப்பன் தொல்ல தாங்க முடியல... கடுப்பான கிராம மக்கள் செய்த காரியம்!

KANIMOZHI December 28, 2022

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

சில்க் ஸ்மிதாவிற்கு இப்படியொரு ரசிகரா?... சிலிர்க்க வைத்த சம்பவம்! 

Kanimozhi December 02, 2022

நடிகை சில்க் சுமிதாவின் 63 வது பிறந்த தினத்தை தூய்மை பணியாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளார். 

புலிகள் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்

Kanimozhi December 02, 2022

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 2022ம் ஆண்டிற்கான மழைக்குப் பிந்தைய புலிகள் கணக்கெடுப்பு இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.   இதில் முதல் மூன்று நாட்கள் நேர்கோட்டு பாதை மற்றும் பெரிய தாவர உண்ணிகளான யானை, காட்டெருமை ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. 

களைகட்டிய கலைத்திருவிழா - 56 பள்ளி மாணவர்களிடையே போட்டா போட்டி!

Kanimozhi December 02, 2022

கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வரும் கலைத் திருவிழா போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இறுதி நாளான நேற்று நடன போட்டிகள் நடைபெற்றன, பரதம், கோலாட்டம் , கிராமிய நடனம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், பாரம்பரிய நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.