Sun ,May 26, 2024

சென்செக்ஸ் 75,410.39
-7.65sensex(-0.01%)
நிஃப்டி22,957.10
-10.55sensex(-0.05%)
USD
81.57

வாகன செய்திகள்

ரூ.2.50 கோடிக்கு மிரட்டலாக களமிறங்கும் BMW-வின் லேட்டஸ்ட் மாடல் | BMW i7 M70 Price in India

Priyanka Hochumin October 25, 2023

நம்ப பட்ஜெட்டிற்கு ஏற்ப கார் வாங்கி மகிழும் மக்கள் மத்தியில், பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் விலை உயர்ந்த கார் வாங்கி மகிழ்பவர்களுக்கு BMW புது மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிவில் BMW எலக்ட்ரிக் கார் i7 மற்றும் BMW 740d பெட்ரோல் காரின் விவரக்குறிப்புகளை முழுமையாக பார்க்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், BMW இன் முதல் M மாடல் எலக்ட்ரிக் கார் M70 டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக, 650hp மற்றும் 1015Nm ஆற்றலை வெளிப்படுத்தும் ட்வின் மோட்டார் அமைப்பைக் கொண்டு i7 M70 மாடல் வெளியாகியுள்ளது.

KTM, ராயல் என்ஃபீல்டு-னு செப்டம்பர்ல இத்தன பைக் வரப்போகுதா? | New Bikes Launching in September 2023

Priyanka Hochumin August 31, 2023

இந்தியாவை பொறுத்த வரையில் கார், பைக், ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. அதற்கு ஏற்றார் போல் பல புதிய வாகனங்களும் ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2023 மாதத்தில் ஹோண்டா எஸ்பி160, ஹீரோ கரிஸ்மா எக்ஸ்எம்ஆர், டிவிஎஸ் எக்ஸ் இ-ஸ்கூட்டர், புதிய ஓலா எஸ்1 வரிசை மற்றும் டுகாட்டி டயவல் வி4 உள்ளிட்ட வாகனங்கள் களமிறங்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே போல், அடுத்து வரும் செப்டம்பர் மாதத்தில் பலரும் எதிர்பார்க்கப்பட்ட சில பைக் மாடல் வெளியாக உள்ளது. அது என்னென்ன, அவற்றின் விவரக்குறிப்புகள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

குறைந்த விலையில் அதிக வசதிகள் கொண்ட டைகர் இவி 200 எலக்ட்ரிக் கார்.. | Tiger EV 200 Electric Car

Nandhinipriya Ganeshan August 25, 2023

திருப்பூரை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான நியூ எனர்ஜி வேகன், 'டைகர் இவி 200' என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இரண்டு வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கார்கள் தான் எலக்ட்ரிக் கார்களில் தற்போது இருப்பதிலேயே குறைந்த விலையில், அதிக வசதிகள் உள்ள கார்களாக விளங்குகின்றன. உறுதியான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் 8 வித நிறங்களில் இந்த கார் வாங்க கிடைக்கிறது. பயணிகளின் பாதுகாப்புக்காக இந்த காரில் இரண்டு ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன. பயணிகள் அமர விசாலமான இட வசதி உள்ளது. இந்த காரில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். டைகர் EV 200 இன் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆகும் இரண்டு வகைகளில், முதல் வகை 9 மணி நேரம் சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். அதுவே, மற்றொரு வகை ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தாலே 369 கிமீ தூரம் வரை பயணம் செய்ய முடியும். விலையை பொறுத்தவரையில், முதல் வேரியண்ட் விலை ரூ. 9.86 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட் விலை ரூ. 13.93 லட்சம் ஆகும்.

சும்மா தாறுமாறு...398cc என்ஜின் உடன் களமிறங்கும்...நியூ KTM 390 டியூக் | KTM 390 Duke 2024 Launch Date

Priyanka Hochumin August 23, 2023

இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் கே.டி.எம் [KTM] பைக் மாடலுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நம்மால் வாங்க முடியாவிட்டாலும் ஒரு முறையாவது அந்த பைக்கை செயல்படுத்தி பாக்க வேண்டியது தான் பலரின் கனவாக இருந்து வருகிறது. இவர்களுக்காகவே கேடிஎம் நிறுவனம் பட்ஜெட்டிற்கு ஏற்ப மூன்று மாடலை அறிமுகம் செய்துள்ளது. KTM 390 டியூக், KTM 250 டியூக் மற்றும் KTM 125 டியூக் மாடலுக்கு இடையே இருக்கும் வித்தியாசம், அம்சம், விலை உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.

என்னாது வெறும் ரூ. 5 லட்சத்திற்கே பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ கார்களை வாங்கலாமா?.. எப்படி? | Luxury Cars Under 5 Lakhs in India

Nandhinipriya Ganeshan August 16, 2023

இந்த காலத்தில் டுவீலர்கள் வாங்குவோர்களின் எண்ணிக்கையை காட்டிலும் கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதிலும் பலருக்கு கார் வாங்க வேண்டும் என்பதே கனவாகும் இருக்கிறது. அப்படியே வாங்கினாலும் அது சொகுசு காராக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. பொதுவாக, சொகுசு கார்கள் என்றாலே விலை சற்று அதிகம் தான். ஆனால் விலை அதிகம் என்று சொல்வதெல்லாம் அந்த காலம். தற்போது எல்லாம் மாறிவிட்டது. ஆம்! சொகுசு கார்களின் சந்தை நிலைமை மொத்தமாகவே மாறிவிட்டது. இனி யார் வேண்டுமானாலும் சொகுசு கார்களை வாங்கலாம். அதுவும் வெறும் 5 லட்சத்தில் இருந்தே பென்ஸ், ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற ப்ரீயம் கார்கள் கிடைக்கின்றன. வாங்க விரிவாக பார்க்கலாம். பி.எம்.டபிள்யூ: குறைந்த விலையில் ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் கார்கள் சிறந்ததாக இருக்கும். 2012 - 2013 காலக்கட்டத்தில் வெளியான 90 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமாக ஓடிய கார்களை ரூ. 5 லட்சத்திற்கே வாங்கலாம். அதேபோல், பி.எம்.டபிள்யூ 5 சீரிஸ் கார்களும் தற்போது குறைவான விலையில் கிடைக்கின்றன. அதிலும், இ60 2008 மாடல் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக விலையில் கிடைக்கிறது. 90 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடிய கார்களுக்கு மட்டும் தான் இந்த குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி கார்: ஆடி காரில் சொகுசாக பயணிக்க விரும்புவோருக்கு ஆடி ஏ4 கார்கள் சிறந்த தேர்வாக இருக்கும். 2010 - 2012 காலக்கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி ஏ4 மாடல் காரை தற்போது ரூ. 5 லட்சத்திற்கு வாங்கலாம். ஆடி காரில் சொகுசாக பயணிக்க வேண்டும், அதே நேரத்தில் அளவில் பெரியதாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, 2012 காலங்களில் வெளியான ஆடி ஏ6 மாடல் கார் சிறந்த தேர்வாக இருக்கும். 60 ஆயிரம் கிலோ மீட்டர் ஓடிய இந்த கார்களை ரூ.9 முதல் 10 லட்சத்திற்கு வாங்க முடியும். 2013 - 2014 காலங்களில் வெளியான ஆடி Q3 மாடல் காரை 8 லட்ச ரூபாய்க்கு வாங்க முடியும். 70 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணித்த கார்கள் இந்த விலைக்குக் கிடைக்கிறது. மெர்சீடிஸ் பென்ஸ்: வாங்கினால் பென்ஸ் தான் வாங்க வேண்டும் நினைப்பவர்களுக்கு மெர்சீடிஸ் பென்ஸ் சி.எல்.ஏ கார் சிறந்த தேர்வாக இருக்கும். இந்த காரில் 2015 முதல் 2016 வரை உள்ள மாடல்களைத் தேர்ந்தெடுத்தால் ரூ.15 லட்சத்திற்கு வாங்கலாம். ஆனால், அவை 50 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓடியதாக இருக்கும். வோல்வோ எக்ஸ்சி: உலகின் தலைசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட சொகுசு காரை வாங்க விரும்புவோருக்கு வோல்வோ XC 60 மாடல் அற்புதமான தேர்வாக அமையலாம். தற்போது ஒரு லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயன்படுத்திய 2012 முதல் 2014 மாடல் கார்களை ரூ.10 லட்சம் என்ற விலையில் வாங்கலாம்.

அடேங்கப்பா! இத்தனை ஆயிரம் முன்பதிவுகளை தட்டித்தூக்கிய ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440.. | Harley Davidson X440 Bookings Update

Nandhinipriya Ganeshan August 10, 2023

ஹார்லி டேவிட்சன் என்றாலே அதிக விலை இருக்கும் என்று தான் மக்கள் நினைத்திருந்தனர். ஆனால், இந்திய வாகன நுகர்வோரில் உள்ள நடுத்தர பயனர்களுக்காக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததோ என்னவோ ஹார்லி நிறுவனம். அதற்காகவே ஹார்லி நிறுவனம் இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ உடன் கூட்டு சேர்ந்து தனது முதல் விலை மலிவான ரெட்ரோ பைக்கான ஹார்லி டேவிட்சன் எக்ஸ்44 பைக்கை ஜூலை 4,2023 அன்று இந்தியா முழுவதும் அறிமுகம் செய்தது. தனித்துவமான டிசைன், பல மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ள இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் ஜூலை 4,2023 அன்று நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இதுவரையிலும் 25,597 முன்பதிவுகளை பெற்றுள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. ஹார்லி டேவிட்சன் பைக்கில் எக்ஸ்440 டெனிம், எக்ஸ்440 விவிட், எக்ஸ்440 எஸ் என மொத்தம் மூன்று வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் டாப் வேரியண்டான எக்ஸ்440 எஸ் (X440 S) தான் 65 சதவீத முன்பதிவுகளை பெற்றுள்ளது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு மூடப்பட்டுவிட்டதாகவும், மீண்டும் முன்பதிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. மேலும், இந்த முன்பதிவுக்கான தயாரிப்புகளை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும், டெலிவரிகள் அக்டோபர் முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தலைமை செயல் அதிகாரி நிரஞ்சன் குப்தா இது பற்றி தெரிவிக்கையில், 'X440 மாடலுக்கான வாடிக்கையாளர்களின் வரவேற்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரிவில் வாடிக்கையாளர்கள் காட்டிய நம்பிக்கையைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், எங்களது முன்பதிவுகளில் பெரும்பாலானவை டாப் எண்ட் S மாடலுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் சரியான பிராண்டுக்கு விலை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்பதை தெளிவாக காட்டுகிறது. பிரீமியம் பிரிவில் வெற்றி பெறுவதற்கான எங்கள் பயணத்தின் ஆரம்பம் இதுவே' என குறிப்பிட்டார்.

இதுக்காக தான இத்தன நாளா வெயிட்டிங்.. வருகிறது ராயல் என்ஃபீல்டின் எலக்ட்ரிக் பைக்.. | Royal Enfield Electric Bike Launch

Nandhinipriya Ganeshan August 09, 2023

பைக் என்றாலே அது ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்க வேண்டும் என்பது தான் தற்போது இளம்தலைமுறையின் விருப்பமாக இருக்கிறது. இதற்கு காரணம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல்களை உற்பத்தி செய்து வருகிறது. அதிலும், ட்ரெண்டுக்கு ஏற்ப தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இம்மாபெரும் வளர்ச்சிக்கு காரணம். அந்த வரிசையில், பிரீமியம் லைஃப்ஸ்டைல் பிரிவில் அனைத்து மாடல்களையும் கலமிறக்கி வரும், ராயல் என்ஃபீல்டு அடுத்ததாக எலக்ட்ரிக் பைக்குகளையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. இதனால், முன்னணி நிறுவனங்கள் பலவும் எலக்ட்ரிக் பைக்குகளை உற்பத்தி செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன. அந்த வரிசையில் தான் தற்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இறங்கியுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை தயாரிக்க ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான ஸ்டார்க் பியூச்சர் என்ற நிறுவனத்துடன் கைக்கோர்த்துள்ளது. தற்போது இந்த இரு நிறுவனமும் சேர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க அடிப்படை பணிகளை தொடங்கியுள்ளனர். இந்திய சந்தை மட்டுமல்லாது, சர்வதேச சந்தைகளையும் குறிவைத்துதான் ராயல் என்பீல்டு நிறுவனம் எலக்ட்ரிக் பைக்குக்களை உருவாக்கவுள்ளது. மேலும், ராயல் என்ஃபீல்டு உருவாக்கி வரும் இந்த எலக்ட்ரிக் பைக் 'L1A' எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்கிடையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சிஇஓ சித்தார்த்தலால் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான பணிகளை ஏற்கனவே உள்ள ஊழியர்களை வைத்து செய்யாமல் இதுக்காக தனியாக 100 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் இந்த பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் பைக்கில் மட்டுமல்லாமல், பேட்டரி மேனேஜ்மெண்ட் சிஸ்டம், மோட்டார் கண்ட்ரோலர் யூனிட் சிஸ்டம் மற்றும் அதன் துணைக் கருவிகளுக்கான டிசைன் ஆகியவற்றை செய்து வருகிறது. முதற்கட்டமாக, நிறுவனம் 1.5 லட்சம் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. எனவே, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக் நிச்சயமாக மார்க்கெட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ. 1.25 லட்சம் வரை மஹிந்திரா கார்களுக்கு தள்ளுபடி...இந்த மாடலுக்குமா? | Mahindra August Discount Offers

Priyanka Hochumin August 07, 2023

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, மக்கள் மத்தியில் பெரும் நம்பகத்தன்மைப் பெற்றுள்ளது. இவர்களின் ஒவ்வொரு தயாரிப்பும் சந்தையில் வந்த வேகத்தில் விற்பனையாகிவிடும். அப்படியான மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.25 லட்சம் வரையில் XUV400, Marazzo, XUV300, Bolero மற்றும் Bolero Neo உள்ளிட்ட வாகனங்களுக்கு தள்ளுபடி தருவதாக அறிவித்துள்ளது. இது தான் செம்ம ஆஃபர், இப்ப மிஸ் பண்ணா இதே ஆஃபர் திரும்ப எப்ப கிடைக்கும்னு தெரியாது.

முற்றிலும் புதுமையான அம்சங்களுடன்...ஏதரின் நியூ ஸ்கூட்டர்…! | Ather 450S EV Scooter

Priyanka Hochumin August 03, 2023

ஏதர் நிறுவனத்தின் அடுத்த லேட்டஸ்ட் மாடல் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஏதர் எனர்ஜி என்னும் பெங்களூர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் குறைவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில், ஏத்தர் நிறுவனம் தங்களின் புதிய மாடல் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியிடும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 அறிமுக தேதி வெளியானது.. விலை எவ்வளவு? | Hero Karizma XMR 210 Launch Date

Nandhinipriya Ganeshan July 24, 2023

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், தனது புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தபடி, Hero Karizma XMR 210 இந்த ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வரவிருக்கும் Karizma XMR 210 ஏற்கனவே டீலர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, இந்த முழு ஃபேர்டு பைக் ஸ்போர்ட்டி ஸ்டைலிங்குடன் வரும் என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்த பைக்கில் 210 சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 25 பிஹச்பி பவரையும், 35 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பவர்டிரெய்ன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் ஸ்லிப்பர்-அசிஸ்ட் கிளட்ச் உடன் இணைக்கப்படும். மேலும், இந்த Hero Karizma XMR 210 லிக்விட்-கூல்டு மோட்டார் மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பெற்ற ஹீரோவின் முதல் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர், ஹார்டுவேரைப் பொறுத்தவரை, இந்த பைக்கில் டெலஸ்கோப்பிக் முன் ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக், இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் அமைப்பு ஆகியவை இடம்பெறும். இந்த பைக்கின் மற்ற அம்சங்களில், LED ஹெட்லேம்ப்கள், ஒரு ஸ்பிலிட் சீட் செட்-அப், ஒரு ஸ்டப்பி எக்ஸாஸ்ட், ப்ளூடூத் இணைப்பு அமைப்புடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை அடங்கும். Hero எப்போதும் தனது தயாரிப்புகளுக்கு அதிக விலை கொடுக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் கரீஸ்மா எக்ஸ்எம்ஆர் 210 மாடலின் விலை ரூ.1.8 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகமானதும் Karizma XMR மிகவும் பிரபலமான பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200, யமஹா ஆர்15 வி4, சுஸுகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.