சர்வதேச சிறுதானிய ஆண்டான 2023 முன்னிட்டு கொடைக்கானல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்றது. சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதில் பல இடங்களில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு நடைபெற்று வருகிறது.
உசிலம்பட்டி வழியாக பழனி முருகன் கோவில் மற்றும் சபரிமலைக்கு பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இரவினில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மர்மநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் தமிழக அரசும் முதல்வரும் உதவி செய்து சிறுவனை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் தொடங்கியுள்ளது.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு வரவிருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்பதற்காக மின்னொழியில் ஜொலிக்கும் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் தயாராகி வருகிறது.
தமிழக பொது நூலகத்துறை மூலமாக நூலக நண்பர்கள் திட்டம் திண்டுக்கல்லில் இன்று நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 டன் பூக்கள் வரை விற்பனைக்கு வரும் ஆனால் இன்று 03.12.22 திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 15 டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
பனிப்பொழிவு, முகூர்த்த நாட்கள் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 9 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகை, ஒரு கிலோ மல்லிகை பூ 3,100க்கு விற்பனை செய்யப்பட்டது மல்லிகை பிரியர்களின் மனதை வாட வைத்துள்ளது.
நிலக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Editorial Desk November 24, 2022
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டம் சி.ஆர்.பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் , இவர் இசை ஆசிரியராக உள்ளார். இவர் தனது மாமனார் ஊரான பட்டிவீரன்பட்டிக்கு வருகை தந்துள்ளார். இன்று திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் நண்பரை சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது தனது காரை சாலையோரம் நிறுத்திவிட்டுச் சென்ற, சிறிது நேரத்திலேயே காரின் முன்பக்கம் உள்ள இன்ஜினில் இருந்து திடீரென புகை வர தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் புகை அதிகமாகி தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். சாலையோரம் நின்றிருந்த கார் திடீரென பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பம் குறித்து விசாரனை நடத்திய திண்டுக்கல் நகர மேற்கு காவல்நிலைய போலீசார், வண்டியின் முகப்பு விளக்கு எரிந்து கொண்டே இருந்ததன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.