Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,058.11
-690.31sensex(-0.95%)
நிஃப்டி21,832.60
-223.10sensex(-1.01%)
USD
81.57

வானிலை

நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!!

Saraswathi July 15, 2023

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளட்ட நான்கு மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மேற்குத் திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 20ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று நண்பகல் வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் தென்மாவட்ட கடலோரம், மன்னார்வளைகுடா, குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுவீசும் என்றும், இதனால் மீனவர்கள் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. 

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை - வானிலை மையம் அறிவிப்பு

Saraswathi July 14, 2023

தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 

தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

saraswathi July 12, 2023

தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்று கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை (ஜூலை.13) முதல் 18ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

saraswathi July 11, 2023

தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதேபோல், தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களைத் தவிர, ஈரோடு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் இடி மின்னல் மற்றும் இலேசான காற்றுடன் மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! | Rain Alert Today

Saraswathi July 10, 2023

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.   மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்தது. இந்நிலையில், வவரும் 13ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.    இந்நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இலேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வடமாவட்டங்களுக்கும்,  நீலகிரி, கோவை ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - 41 ஆண்டுக்குப் பிறகு 15.3 செ.மீ மழை பதிவு!!

Saraswathi July 10, 2023

டெல்லியில் கடந்த 41 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் வெள்ளக்காடாக மாறியுள்ள டெல்லியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.  மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாட்டால் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத வகையில், கடந்த 41 ஆண்டுக்குப் பிறகு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 153 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், டெல்லியின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. பலத்த மழையால்,  மின்சாரம் ,இணையதள சேவை முடங்கியதோடு, சில இடங்களில் வீடு இடிந்து விழுந்தன. நிலச்சரிவும் ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பல இடங்களில் வெள்ள நீர் செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கி நிற்பதால் டெல்லியின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.   மழை பாதிப்புகளை சீர்செய்யும் பணியில் டெல்லி அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், டெல்லி மட்டுமின்றி காஷ்மீர், இமாச்சலபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இன்றும் மழை நீடிக்கும என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதற்கான மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது. கடந்த 1958ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி டெல்லியில் 266 மில்லி மீட்டர் பெய்த மழை இதுவரை அம்மாநிலத்தில் பதிவான அதிகபட்ச மழை ஆகும். இதைத் தொடர்ந்து, கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் 169 மில்லி மீட்டர் மழை பதிவானது. பின்னர் 41 ஆண்டுகள் கழித்து தற்போது, டெல்லியில் ஜூலை மாதத்தில் தற்போது 153 மில்லி மீட்டர் மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 3 மணி நேரத்தில் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

Saraswathi July 05, 2023

தமிழகத்தில் சென்னை,கோவை, நீலகிரி உட்பட 25 மாவட்டங்களுக்கு அடுத்த  3 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் ஜூலை 8 வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

மீன்வளத்துறை அறிவிப்பு எதிரொலி..! தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச்செல்லவில்லை..!!

Saraswathi July 04, 2023

தூத்துக்குடியில் மீன்வளத்துறையின் எச்சரிக்கையால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 700க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தென் தமிழக கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் சுழல்காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும், மறு அறிவிப்பு வரும்வரை விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. இதனால், தூத்துக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால், 250 க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், சுமார் 500க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளும், கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தூத்துக்குடி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஏற்கனவே சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக தீவு பகுதியில் தங்கி மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Saraswathi July 04, 2023

தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலப்பகுதியில் நிலவும் சுழற்சியால் தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், நாளை (ஜூலை.5) நீலகிரி கோவை மாவட்டங்களில் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், வரும் 6ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும், லட்சத்தீவு, கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழை எச்சரிக்கை எதிரொலி - நீலகிரியில் தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு!

Saraswathi July 03, 2023

நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் 21 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பதிவு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.