Nandhinipriya Ganeshan August 25, 2023
சந்திராயன் -3 யின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலமாக நிலவில் தென் துருவப்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த உலகமே கொண்டாடிவருகிறது. இந்தியாவின் இம்மாபெரும் வெற்றிக்கு தமிழகத்திற்கும் ஒரு சிறப்பு தொடர்பு உள்ளது. ஆம், இந்தியாவின் இந்த சந்திரப் பயணத்திற்கு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மண்ணும் முக்கிய பங்காற்றியுள்ளது. வாங்க விரிவாக தெரிந்துக்கொள்வோம். சந்திராயனும் தமிழ் விஞ்ஞானிகளும்: விண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போடும் இஸ்ரோ, கடந்த அக்டோபர் 22, 2008 அன்று சந்திராயன் -1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த முதல் சந்திராயன் பயணத்திற்கு தலைமை தாங்கியவர் மயில்சாமி அண்ணாதுரை. இந்த சந்திராயன் -1 விண்கலம் நிலவின் வட துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு, நிலவின் பரப்பில் பனிக்கட்டி விடிவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பு மற்றும் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன் -2 விண்கலம் ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு எம்.வனிதா தலைமை தாங்கினார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் -2 ல் உள்ள விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனால், சந்திராயன் -2ல் இருக்கும் ஆர்பிட்டர் அதே வருடம் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தொடர் முயற்சியின் காரணமாக தற்போது 2023 ஆம் ஆண்டு சந்திராயன் -3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரகமாக தரையிரக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் விழுப்புரத்தை சேர்ந்த எம்.வீரமுத்துவேல். சந்திரப் பயணத்தில் தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, தமிழக மண்ணிற்கும் முக்கிய பங்கு உள்ளது. நாமக்கல் மண்? சந்திராயன் -2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ள மண் தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்காவின் நாசாவிடம் இருந்து ஒரு கிலோ இந்திய மதிப்பில் ரூ.15 ஆயிரம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவில் அந்த வகை மண் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் அந்த வகை மண் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறை பேராசிரியர்கள் துணையுடன் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். அந்த மண்ணில் நிலவில் உள்ள மண் போல அனார்தசைட் என்ற வேதித்தன்மை கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மண் மற்றும் பாறைகள் என சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதைவைத்து தான் சந்திராயன் - 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப் பார்த்தனர். இதன் மூலம் சந்திரயான் பயணத்தின் திறனை சோதிப்பதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (இஸ்ரோ) 2012 முதல் நாமக்கல் மாவட்டம் முக்கிய மண் சப்ளையராக உள்ளது. அந்தவகையில், சந்திராயன் -3 சோதனைக்கும் இந்த மண் தான் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, மண் என்றால் கருஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். ஆனால், சித்தம்பூண்டு, குன்னமலை பகுதியில் உள்ள மண் வெண்மை நிறத்தில் காணப்படும். இதற்காக அந்த இரண்டு கிராம மக்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது தான் இங்கு ஆச்சரியத்தின் உச்சம். இஸ்ரோவுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மண்ணை அனுப்பி வருகிறோம். இஸ்ரோவுக்கு அவர்களின் தேவைக்கேற்ப மண்ணை அனுப்பி வருகின்றோம். அவர்கள் (இஸ்ரோ விஞ்ஞானிகள்) நாங்கள் வழங்கிய மண்ணில் சோதனை நடத்தி வருகின்றனர். சந்திரயான்-4 திட்டம் வந்தாலும், அதற்கான மண்ணை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் அன்பழகன் கூறியுள்ளார்.
Nandhinipriya Ganeshan August 24, 2023
பூமியின் துணைக்கோளான நிலா இரவில் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்தாலும், அது தனக்குள் பல்வேறு மர்மங்களை உள்ளடக்கியது. இதுவரை எத்தனையோ நாடுகள் நிலாவில் ஆராய்ச்சி செய்தாலும், நிலவின் தென் துருவ பகுதியில் மட்டும் எந்தவொரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை. இதற்கு காரணம் பல மில்லியன் ஆண்டுகளாக நிலவின் தென் துருவ பகுதியில் சூரிய வெளிச்சமே பட்டதில்லை. ஆனால், இயற்கையில் ஏற்பட்ட மாற்றம் நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரி மாற்றம் ஏற்பட வைத்தது. நிலவு லேசாக சாய்ந்து. இதனால், நிலவின் தென் துருவத்தில் சில இடங்களில் சூரிய வெளிச்சம் பட்டது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த சிறிய மாற்றம்தான் நிலவின் தென் பகுதியில், அடியாழத்தில் இருந்த ஐஸ் கட்டிகள் சில உருகி அங்கு தண்ணீரை உருவாக்கியது. இங்குள்ள பள்ளங்களில் உறைந்தநிலையில் 80 மில்லியன் டன் அளவுக்கு தண்ணீர் இருப்பதுடன், நமது சூரிய குடும்பம் உருவான போது ஏற்பட்ட மோதல் காரணமாக நிலவின் தென் துருவத்தில் நிறைய காந்தமும் இருக்கிறது. ஆனால் இது வெளிப்படையாக வெளியே இல்லாமல் காந்த குவியல்களாக நிலவின் அடியில் தென் துருவத்தில் உள்ளது. நிலவின் வட துருவத்தில் இந்த காந்தம் காணப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், அதிக அளவு ஹைட்ரஜன், மீத்தேன், அமோனியா உள்ளிட்ட மூலக்கூறுகள் மற்றும் நிலவு உருவான நேரத்தில் அதில் படிந்த பொருட்கள் எல்லாம் இந்த தென் துருவத்தில் தான் இருக்கின்றன. இந்த பொருட்களை ஆராய்ந்தால் உலகம் தோன்றியது எப்படி, மனித இனம் தோன்றியது எப்படி என்று பல கேள்விகளுக்கு கூட பதில் கிடைக்கும் என்கிறார்கள். இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்தபடியாக எரிபொருள் தேவைதான் உலக நாடுகளுக்கு முக்கிய தேவையாக இருக்கிறது. எனவே, கதிர்வீச்சு அபாயமில்லாத அதிக ஆற்றல் கொண்ட ஹீலியம் மூலக்கூறுகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே, சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் நிலவின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில்தான் தென் துருவத்தில் சந்திராயன் - 3 விண்கலத்தை தரையிறக்கி பெரும் சாதனை படைத்துள்ளது இந்தியா. இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவை பற்றிய பல அரிய ரகசியங்கள் வெளியுலகுக்கு இந்தியா மூலம் தெரியவரும்.
Nandhinipriya Ganeshan August 23, 2023
பருவ நிலை மாற்றத்தால் உலகில் எத்தனையோ நாடுகள் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் அதிகம் பாதிக்கப்படும் நாடாக ஈராக் நாடும் ஒன்று. பல மாதங்களாக அந்த நாட்டின் தென்பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் மிக முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றான மொசூல் ஆணை டைக்ரிஸ் ஆற்றின் மீது கட்டப்பட்டது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் பழங்கால தடையங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் கடும் வறட்சி காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் குறைந்தது. இந்த நிலையில் சர்வதேச தொல்லியல் துறை குழு ஒன்று ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் கெமுனேவில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்தில் கிபி 1275 - 1475 இல் வாழ்ந்த மிட்டாணி பேரரசு அமைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நகரத்தில் பீங்கான் ஜாடிகள், களிமண், மண் செங்கற்கள், சுவர்கள், கோபுரங்கள், அரண்மனைகள் மற்றும் பல மாடி கட்டிடங்கள் போன்ற பழங்கால இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுவாரஸ்மயமாக, கியூனிஃபார்ம் என்ற பழங்கால எழுத்து நடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து நடையை படித்து புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால், தற்போது மொழிபெயர்ப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நகரமானது கிமு 1350 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழிந்துள்ளதாகவும், மிட்டாணி சாம்ராஜ்ஜியத்தின் மண் சுவர்கள் இவ்வளவு காலம் நீரில் மூழ்கியிருந்தாலும் இன்னும் அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கண்டுபிடிப்பின் மூலமாக மிட்டாணி சாம்ராஜ்ஜியத்தின் அழிவு பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்தியாவால் உருவாக்கப்பட்ட சந்திரயான்- 3 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதனை சுமந்து செல்லும் எல்.வி.எம்-3 M4 விண்கலத்திற்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. நிலாவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் உருவாக்கப்பட்ட சந்திரயான் - 1 விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து, மேல் ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து, தற்போது, சந்திரயான் - 3 விண்கலம், நிலவின் தெற்குப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்த விண்கலத்தை எல்.வி.எம்.3 - M4 ராக்கெட் சுமந்து செல்கிறது. இதையடுத்து, சந்திரயான்-3 விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக ராக்கெட்டில் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அனைத்து பரிசோதனை மற்றும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில், எல்.வி.எம்-3 M4 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில், எல்.வி.எம்3-எம்4 ராக்கெட்டுக்கான 25 1/2 மணி நேர கவுன்டவுன் இன்று பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, நாளை (ஜூலை.14) பிற்பகல் 2 மணி 35 நிமிடம் 17 விநாடியில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்.வி.எம்-3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாயவுள்ளது. நிலவை ஆய்வதற்கான அனுப்படும் இந்த சந்திரயான்-3 விண்கலம் மூலம் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதிலும் 91% விழுக்காடு நிறுவனங்கள் ChatGPT AI போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நபர்களை கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தும் வேலைக்கு எடுக்க தயாராக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஜூபிடர் (Jupiter) கோளில் ஏற்பட்ட மின்னலை நாசாவின் (NASA) ஜூனோ விண்கலம் படம்பிடித்து வெளியிட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Priyanka Hochumin June 02, 2023
பூமி, ஆகாயம், செவ்வாய் கிரகம் என்று பல விண்வெளி ஆர்ச்சிகளை மனித குளம் தற்போது நடத்தி வருகிறது. அதில் சீனா தற்போது பூமியின் மேற்புறத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் துளை தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பூமியின் உள் மற்றும் வெளிப்புற எல்லைகளை விண்வெளியிலும் கண்காணிக்கும் முடியும் என்று கூறப்படுகிறது. இது வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள தாரிம் படுகையில் 10,000 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது.
Gowthami Subramani April 19, 2023
சூரிய கிரகணம் 2023: இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது, ஏப்ரல் 20 ஆம் தேதி ஏற்பட உள்ளது. இது தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரம் குறித்த விவரங்களையும், எங்கு தெரியும் என்பது குறித்த விவரங்களையும் இதில் காண்போம்.
Nandhinipriya Ganeshan April 18, 2023
பூமி, நிலா, சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வே "சூரிய கிரகணம்" என்று சொல்வார்கள். சூரியனை நிலா மறைப்பதால் இந்த கிரகணம் ஏற்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் 4 கிரகணம் நிகழும். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை 'நிங்கலூ சூரிய கிரணம்' (Ningaloo Eclipse) அல்லது 'கலப்பின சூரிய கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது. அதென்ன 'நிங்கலூ'. நெருப்பு வளைய சூரிய கிரகணமாக தோன்றும் இந்த கிரகணம் முழு வளைய கிரகணம் தோன்றுவதற்கு முன்பாக, நிலா சூரியனை முழுவதுமாக மறைக்கப்பட்டு முழு சூரிய கிரகணமாக தோன்றி அதன்பிறகு வளைய கிரகணமாகத் தோன்றுவதால் இது நிங்கலூ சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சரி வாங்க, கிரகணம் எப்போது, எந்த நேரத்தில் ஏற்படுகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம். சூரிய கிரகணம் 2023 தேதி, நேரம்: 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அரிய கிரகணம் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அதிகாலை 3.34 மணி முதல் 6.32 வரை ஏற்படுகிறது. இந்த கிரகத்தின் உச்ச நிகழ்வாக 4.29 மணி முதல் 4.30 வரையான குறுகிய காலத்திற்கு மட்டுமே அந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. இந்த கிரகணம் எங்கெல்லாம் தெரியும்? தெற்கு ஆசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா, இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அண்டார்டிக்கா பகுதிகளில் உள்ளவர்களால் இந்த அரிய கிரகணத்தை பார்க்க முடியும். இருந்தாலும், இந்த தனித்துவமான சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.
Vaishnavi Subramani March 30, 2023
சவுதி அரேபியாவில் இதற்கு முன்பாக ஒரு கண்ணாடி நகரம் ஒன்று தயாராகி வரும் நிலையில் இப்பொழுது புதிதாக ஒரு கப்பல் நகரம் உருவாகவுள்ளது எனத் தகவல் வந்துள்ளது. இது 200 முதல் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த கண்டத்தின் நினைவாக இந்த கப்பல் நகரத்திற்கு பாஞ்சியோஸ் எனப் பெயர் சூட்டினார்கள். இது மற்ற கப்பல்களை விட இது ஒரு புதுவிதமான கப்பல். இது கடலில் நிற்காமல் மிதக்கும் வடிவில் தயாரிக்கப்பட உள்ளது.