Tue ,Jun 25, 2024

சென்செக்ஸ் 77,341.08
131.18sensex(0.17%)
நிஃப்டி23,537.85
36.75sensex(0.16%)
USD
81.57

சினிமா செய்திகள்

முக்கிய பிரபலம் மாரிமுத்து திடீர் மரணம்...ஸ்தம்பித்து போன திரையுலகம் மற்றும் ரசிகர்கள்!

Priyanka Hochumin September 08, 2023

தமிழ் திரையுலகின் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் இன்று காலை எதிர்பாராத விதமாக காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் மீண்டுமா? பிரபல இளம் வயது நடிகையுடன் விஷாலுக்கு திருமணம்..? | Actor Vishal Marriage

Nandhinipriya Ganeshan August 10, 2023

அவ்வப்போது பிரபலங்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். சில சமயங்களில் அது உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம். அப்படி தற்போது நடிகர் விஷாலின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகி வைரலாக வருகிறது. நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்', 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு, பிரிந்த காதலியுடன் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு நடிகர் விஷாலுக்கும் நடிகை வரலட்சுமிக்கும் காதல், விரைவில் அவர்கள் திருமணம் செய்ய போகிறார்கள் என சொல்லப்பட்டது. ஆனால், இருவரும் தாங்கள் நல்ல நண்பர்கள் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன்பிறகு, 'கும்கி' திரைப்படம் மூலம் அறிமுகமாகி 'சுந்தர பாண்டியன்' படத்தின் மூலம் பிரபலமானவர் லட்சுமிமேனன். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஷாலுடன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் இணைந்து நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை. முன்னதாக விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணம் நின்றுவிட்டது. விஷாலை பிரிந்த அனிஷா வாழ்வில் மீண்டும் காதல் வந்திருக்கிறது. இதற்கிடையே விஷாலுக்கும், நாடோடிகள் படம் புகழ் அபினயாவுக்கும் இடையே காதல் என பேச்சு கிளம்பியது. அந்த தகவலும் உண்மை இல்லை என்று விஷாலும், அபினயாவும் தெரிவித்தார்கள். இந்நிலையில், மீண்டும் லட்சுமி மேனன் உடன் விஷாலுக்கு திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது. நடிகர் சங்க கட்டிடம் முடிந்தால் தான் திருமணம் என சொல்லி வந்த விஷால் அதன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் அவரது திருமணம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த தகவலை விஷாலோ, லட்சுமி மேனனோ உறுதி செய்யும்வரை நம்ப முடியாது.

முழு வேட்டையனாக மாறிய ராகவா லாரன்ஸ்...சந்திரமுகி 2 ஃபர்ஸ்ட் லுக் | Chandramukhi 2 Vettaiyan Look

Priyanka Hochumin July 31, 2023

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் உருவான திரைப்படம் சந்திரமுகி. 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் - ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் ஆகியோர் நடித்தனர். தென்னிந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு மாபெரும் வெற்றியை வேறு எந்த படத்திற்கும் நாம் பார்த்திருக்க முடியாது. சந்திரமுகி படத்தின் ரிலீஸ்-க்கு பிறகு ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வியை எழுப்பினார்கள்.

உங்களின் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்.. மாரி செல்வராஜை புகழ்ந்த உதயநிதி ஸ்டாலின்..

Aruvi July 22, 2023

சென்னை: மாரி செல்வராஜ் வாழை படத்துக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  ராமிடம் உதவி இயக்குநராக இருநதவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாளையும், கர்ணனையும் முதல் இரண்டு படங்களாக இயக்கினார். இரண்டு படங்களுமே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கினார். கடந்த ஜூன் 29ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. தனித்தொகுதி எம்.எல்.ஏ ஒருவர் சாதி வெறி பிடித்தவர்களால் எப்படி நடத்தப்படுகிறார் என்பதையும் அதனை சுற்றியும் படத்தை உருவாக்கியிருந்தார். இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்க்காத கதைக்களம் என்பதால் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. பலரும் மாரி செல்வராஜையும், உதயநிதி ஸ்டாலினையும் மனம் திறந்து பாராட்டினர். குறிப்பாக படத்தில் வடிவேலுவின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. இதுவரை பார்க்காத வடிவேலுவை மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் காட்டியிருந்தார் மாரி செல்வராஜ். அதற்கேற்றபடி நடிப்பில் தான் ஒரு மாமன்னன் என்பதை நிரூபித்தார். அவரது நடிப்பை பார்த்த பலரும் கண் கலங்கியும், கை தட்டியும் ரசித்தனர். இந்தப் படத்துக்கு பிறகு நிச்சயம் இதுபோன்ற கதைகள்தான் வடிவேலுவுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருந்தபோதே வாழை என்ற படத்தை தொடங்கிவிட்டார். அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். படமானது முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் எழுதிய பேய் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தில் உதயநிதியின் நடிப்பை பாராட்டி வந்த விமர்சனத்தை மாரி செல்வராஜ் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், “நன்றி மாரி செல்வராஜ் சார். வாழை உங்களின் சிறந்த படைப்பு. உங்களது மேஜிக்கை பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்” என ட்வீட் செய்திருக்கிறார்.

லியோ படக்குழு மீது விஜய் அப்செட்.. காரணம் என்ன தெரியுமா?

Aruvi July 21, 2023

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விக்ரம் படத்தின் மெகா ஹிட் லோகேஷ் கனகராஜ் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருப்பதால் இந்தப் படத்தை ஒட்டுமொத்த கோலிவுட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. நட்சத்திர படை: ஒரு படத்தில் மூன்று நட்சத்திரங்களை வைத்து சமாளிப்பதே பெரிய வேலை என்று டாக் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் லியோவிலோ சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், மாத்யூ தாமஸ், த்ரிஷா, மடோனா செபாஸ்டியன், அனுராக் காஷ்யப் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தனுஷும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாக புதிய தகவலும் வெளியாகியிருந்தது. ஆனால் அது வதந்திதான் என உறுதி செய்யப்பட்டது. இறுதிக்கட்ட ஷூட்டிங்: காஷ்மீரில் தொடங்கிய ஷூட்டிங் அதன் பிறகு சென்னையில் அவுட்டோரிலும், ஸ்டூடியோவிலும் நடந்துவந்தது. ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு  500க்கும் மேற்பட்டவர்கள் நடனம் ஆடிய நா ரெடிதான் பாடல் ஷூட் செய்யப்பட்டது. இதனையடுத்து திருப்பதியில் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது. அங்கு விஜய் உள்ளிட்டோர் நடித்தனர். விஜய் பிறந்தநாளையொட்டி கடந்த ஜூன் 22ஆம் தேதி நா ரெடிதான் பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரவேற்பையும், விமர்சனத்தையும் ஒருசேர சந்தித்தது. இருப்பினும் பாடலில் விஜய்யின் லுக்கும், நடனமும் பெரிதும் பேசப்பட்டது. எனவே அந்தப் பாடலை திரையில் பார்ப்பதர்கு ரசிகரள் பேரார்வத்துடன் உள்ளனர். அதேபோல் படத்தில் விஜய்க்கு இரண்டு கெட்டப்புகள் என்றும் தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் லியோ படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிந்துவிட்டதாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அறிவித்தார். இதனால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன. இந்நிலையில் லியோ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து விஜய் புகைப்படம் எடுக்க சென்றிருக்கிறார். ஆனால் அங்கு கூட்டம் அதிகம் ஆனதால் எதுவுமே சொல்லிக்கொள்ளாமல் விஜய் பாதியிலேயே அதிருப்தியோடு வெளியேறிவிட்டதாக ஒரு தகவல் கோலிவுட்டில் உலாவிக்கொண்டிருக்கிறது.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. வெளியானது அப்டேட்! | Jailer Audio Launch

Aruvi July 21, 2023

சென்னை: ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிஉர்க்கும் இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்திலிருந்து முதல் சிங்கிள் சில வாரங்களுக்கு முன்னதாக வெளியானது. ரஜினிகாந்த்தின் படத்திலிருந்து சிங்கிள் வெளியாவதால் நிச்சயம் தலைவர் சம்பவமாகத்தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலோடு பார்த்தனர். ஆனால் அவர்களது ஆவல் அனைத்தையும் தமன்னா தவிடு பொடியாக்கவிட்டார். முழுக்க முழுக்கா தமன்னாவுக்காக அந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது. தலைவரின் பாடலில் மற்றொருவர் ஸ்கோர் செய்துவிட்டாரே என்ற ஆதங்கம் ரஜினி ரசிகர்களிடம் இருந்தது. மேலும், எதற்காக தமன்னாவுக்கான பாடலில் ரஜினிகாந்த்தை உள்ளே கொண்டு வர வேண்டும். ஏதோ சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட் போல் இந்தப் பாட்டில் ரஜினியை நெல்சன் உபயோகப்படுத்திவிட்டார் என காட்டமாகவே விமர்சனத்தை முன்வைத்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடல் வெளியானது. பாடல் வரிகள் முழுக்க முழுக்க ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது.  மேலும் பாடல் எழுதிய சூப்பர் சுப்புவையும் சூப்பர் ஸ்டார் பாராட்டியிருந்தார்.  இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி ஆடியோ வெளியீட்டு விழா விரைவில் நடக்கவிருப்பதாக ப்ரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறத். அநேகமாக இந்த மாதத்தின் இறுதியில் விழா நடைபெறலாம் என கருதப்படுகிறது.

விஜய் அரசியலுக்கு வருகிறாரா?.. லோகேஷ் கனகராஜ் சொன்ன பதிலை கேளுங்க!

Aruvi July 20, 2023

சென்னை: விஜய் அரசியலுக்கு வருகிறாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்துவிட்டதாக சமீபத்தில்தான் இயக்குநர் லோகேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லியோவில் நடித்துகொண்டிருந்தபோதே தனது 68ஆவது படத்தில் கமிட்டானார் விஜய். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க; வெங்கட் பிரபு இசையமைக்கிறார். முதன்முறையாக விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. மேலும் அந்தப் படத்துக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பித்து மும்முரமாக நடந்துவருகிறது. தனது மக்கள் இயக்கத்தினரை வைத்து கடந்த பல வருடங்களாகவே நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறார் விஜய். ஆனால் சமீப காலமாக தானே நேரடியாக களத்தில் இறங்கியிருக்கிறார். அதன்படி 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று பேரை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கி சால்வை அணிவித்து கௌரவித்தார். அதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இரவு நேர பாடசாலையும் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது இந்த செயல்களை எல்லாம் வைத்து பார்க்கும்போது விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்கான விதையைத்தான் இப்போது தீவிரமாக விதைத்துக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் பலர். இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வருகிறாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கான பதிலை அரசியல் தெரிந்தவர்கள் சொன்னால் சரியாக இருக்கும். எனக்கு அரசியல் தெரியாது. அதனால் இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்றார்

இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை மறைத்து வெளியிடலாம்..! - மாவீரன் படக்குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி

Baskaran July 12, 2023

சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில், மாவீரன் படத்தின் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாவீரன் படத்தில் எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) போட்ட பின்னரே திரையரங்குகளில் வெளியிட வேண்டுமென சிவகார்த்திகேயனின் மாவீரன் படத் தயாரிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 60 கோடி ரூபாய் செலவில், நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நாளை மறுதினம் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்திற்கு தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் P.ஜெயசீலன் வழக்கு தொடர்ந்து உள்ளார். படத்தில் வில்லனாக நடித்துள்ள மிஸ்கின் வரக்கூடிய காட்சிகளில் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடியாக, தங்களது இந்திய ஜனநாயக கட்சியின் தங்கள் கட்சியின் கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர் என் மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்திய ஜனநாயக கட்சி தரப்பில் வழக்கறிஞர் டாக்டர் V வெங்கடேசன் ஆஜராகி, சிகப்பு - வெள்ளை - சிகப்பு என்ற வண்ண அடுக்குகளில் உள்ள தங்கள் கட்சியின் கொடியை படத்தில் பயன்படுத்தி உள்ளதாகவும், கொடியாக மட்டுமல்லாமல் படத்தில் வரக்கூடிய கட்சியினர் அணியும் வேஷ்டி மற்றும் துண்டு ஆகியவற்றிலும் கட்சியின் கொடியை பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். படத்தில் வரும் எதிர்மறையான கதாப்பத்திரத்தில் கட்சியின் கொடி பயன்படுத்தப்படுவதால், கட்சியி பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், பொதுமக்கள் மத்தியில் தவறான பிம்பத்தை விதைப்பதாக அமைந்துவிடும் என்பதால், அந்த வண்ணங்களை மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அவற்றை மாற்றம் செய்யாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என டாக்டர் வி.வெங்கடேசன் வாதங்களை முன்வைத்தார். சாந்தி டாக்கீஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் P S ராமன் ஆஜராகி, படத்தில் இடம்பெறுவது இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை போன்றது இல்லை என்றும், இளம் காக்கி - மஞ்சள் - இளம் காக்கி என்கிற அடுக்கில்தான் படத்தில் வரும் காட்சிகளில் கொடி வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையானவை என படத்தின் தொடக்கத்தில் டிஸ்கிளைமர் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். காட்சிகளை முழுமையாக மாற்ற 10 முதல் 20 நாட்கள் கால அவகாசம் தேவைப்படும் என்றும், படம் நாளை மறுநாள் 750க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகாவிட்டால் பெறுத்த நஷ்டம் ஏற்படும் எனவும் விளக்கம் அளித்தார். அப்போது இந்திய ஜனநாயக கட்சி தரப்பு வழக்கறிஞர் டாக்டர் வி.வெங்கடேசன் குறிக்கிட்டு, படத்தின் முன்னோட்ட காட்சிகள் குறித்த வீடிவோவை பார்க்கும்படி நீதிபதி மஞ்சுளாவிடம் வழங்கினார். அதை பார்த்த நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், எந்த அரசியல் கட்சியையும் குறிப்படவில்லை என படத்தின் தொடக்கத்தில் 15 விநாடிகள், இடைவேளைக்கு பிறகு 15 விநாடிகள், படம் முடியும் போது 10 விநாடிகள் என 40 விநாடிகள் என 40 வினாடிகளுக்கு பொறுப்புத் துறப்பை (Disclaimer) வெளியிட வேண்டுமென படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் காட்சிகளில் இடம்பெறும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனலில் வெளியிட வேண்டுமெனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அனிருத்தின் செம வைப்பில் வெளியானது காவாலா!

Aruvi July 06, 2023

சென்னை: ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார் ரஜினிகாந்த். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது.  குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் நெல்சன் திலீப்குமாரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார்.   அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்ததாக கூறப்படுகிறது.. அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே படத்தின் முதல் சிங்கிளான காவாலா என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகி ட்ரெண்டானது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலை கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜா எழுதியிருக்கிறார்.  ஷில்பா ராவ் பாடியிருக்கிறார். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். வழக்கமான அனிருத் பாடல் டெம்ப்ளேட்டில் இருந்தாலும் பாடல் செம வைப் கொடுப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். அதுமட்டுமின்றி பாடலின் இடையே ரஜினி போடும் ஸ்டெப்களும் ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

PVR ரெட்ஹில்ஸ் - டிக்கெட் விலை, முகவரி, ஆன்லைன் புக்கிங் | PVR Redhills Ticket Booking

Nandhinipriya Ganeshan July 05, 2023

பொழுதுபோக்கிற்கு எத்தனையோ விஷயம் இருந்தாலும், திரைப்படம் பார்ப்பது மட்டும் நம்மில் பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாக இருக்கிறது. வீட்டில் பார்ப்பதை காட்டிலும் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் தியேட்டருக்கு சென்று பார்ப்பதையே அதிகம் விரும்புகிறோம். அந்தவகையில், தமிழகத்தில் அதிகப்படியான மக்களை ஈர்த்த திரையரங்காக PVR Cinemas இருந்து வருகிறது. ஹை-கிளாஸ் திரையரங்கங்களில் ஒன்றான இந்த நிறுவனத்திற்கு தமிழகத்தில் மட்டும் மொத்தம் 136 திரைகள் இருக்கின்றன.  இங்கு ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி திரைப்படங்களும் ஒளிபரப்படுகின்றன. இந்த தியேட்டர்களில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தபடுவதால், படம் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் கதையின் ஒரு பகுதியாக நாம் மாறுவது போல உணரவை தருகிறது. அந்தவகையில், பிவிஆர் சினிமாஸ்க்கு சென்னையில் மட்டும் 12 திரையரங்கள் உள்ளன. அவற்றில் அமிஞ்சிக்கரையில் உள்ள SKLS கேலக்ஸி மாலிலும் ஒரு திரையரங்கம் உள்ளது. சென்னையில் ஃபேமஸான திரையரங்குகள் ஒன்றாக இருக்கும் இதில் பார்க்கிங் வசதி, வசதியான சாய்வு இருக்கைகள், டால்பி அட்மாஸ், Wi-Fi மற்றும் சுவையான உணவு போன்ற அனைத்து வசதிகளுமே உள்ளன. ஆன்லைன் புக்கிங்: இந்த தியேட்டர்களில் படம் பார்க்க ஆன்லைன் புக்கிங் மூலமும், நேரடியாகவும் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும், ஆன்லைன் மூலமாக புக் செய்தால் நமக்கான சீட்டை நாமே தேர்வு செய்துக்கொள்ள முடியும். நேரடியாக டிக்கெட் வாங்கும் அந்த அப்ஷன் கிடைக்காது. அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் மூலம் புக் செய்வதால் கிஃப்ட் கார்டு, ஆஃபர், கூப்பன் போன்றவற்றை பயன்படுத்தி டிக்கெட்டின் விலையை குறைத்துக் கொள்ளலாம். எனவே, ஆன்லைன் முறையே சிறந்தது. மற்ற திரையரங்குகளை காட்டிலும் இங்கு விலை சற்று அதிகமாக இருந்தாலும், நிறைவான திரைப்படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும்.  ரெட் ஹில்ஸ் SKLS கேலக்ஸி மாலில் அமைந்திருக்கும் PVR Cinemas தியேட்டரின் முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. PVR Redhills Address: 4வது தளம், SKLS கேலக்ஸி மால், சர்வே எண். 93/IC/2B, GNT சாலை, ரெட் ஹில்ஸ், சென்னை - 600 052. இந்த லிங்கை கிளிக் செய்து டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். Book Tickets தமிழகத்தில் இருக்கும் PVR Cinemas தியேட்டர் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த லிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம். PVR Cinemas