Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,394.42
-354.00sensex(-0.49%)
நிஃப்டி21,945.60
-110.10sensex(-0.50%)
USD
81.57

டிவிட்டர் டிரெண்ட்ஸ்

ரஜினி மாதிரி இல்ல; விஜய் வேற ரகம் - சவுக்கு சங்கர் | Savukku Rajinikanth Vijay

Abhinesh A.R June 29, 2023

Savukku Sankar about Rajinikanth and Vijay: தனியார் யூடியூப் சேனலில் பேசிய சவுக்கு சங்கர் ரஜினி மாதிரி விஜய் மக்களை ஏமாற்றமாட்டார் என்றும் விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஒரு ’T’ போட்டது குத்தமா - கடைக்கு நாமம் போட்ட தேவஸ்தானம்!

Abhinesh A.R June 26, 2023

திருப்பதி ஏழுமலையான் கோயில் வளாகத்தில் அமைந்திருந்த தேநீர் கடையில் விநியோகிக்கப்பட்ட டீ கப்பில் ’T’ என்ற வார்த்தை இருந்ததால், அந்த கடைக்கு தேவஸ்தான அலுவலர்கள் சீல் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மாட்டுக்கறி சாப்பிடலாமா கூடாதா? அறிவியல் சொல்வதென்ன?

UDHAYA KUMAR December 22, 2022

மாட்டுக்கறி சாப்பிடலாமா கூடாதா? மாட்டுக்கறி சாப்பிடுவதால் ஏதேனும் பிரச்னை வருமா? தன்னை விட பெரிய விலங்குகளைச் சாப்பிடுவது கூடாது என்கிறார்களே அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? மாட்டுக்கறி சாப்பிடுவதில் இருக்கும் நன்மை தீமைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காண்போம். சமூக வலைத்தளங்களில் டாக்டர் ஒருவர் பேசும் வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் தன்னை டாக்டர் எனச் சொல்லிக்கொள்ளும் அந்த இளம்பெண் கூறுவது, மத ரீதியான நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ ரீதியாகவே தன்னை விட பெரிய விலங்குகளைச் சாப்பிடுவது கூடாது என்கிறார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. மாட்டுக்கறியில் புரோட்டின் மாட்டுக் கறியில் புரோட்டின் மற்றும் தாது பொருட்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதனால் பல காய்கறிகளை வாங்கி சாப்பிட்டால் கிடைக்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் எளிதாக கிடைக்கின்றன. அதே நேரம் மாட்டுக்கறியை அளவுக்கு அதிகமாக வாரம் ஒருமுறை என தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது. மாட்டுக்கறி தீமைகள் கோழி, ஆடு போல அல்லாமல் மாட்டுக் கறி பல பிரச்னைக்களுக்கு காரணாக இருக்கிறது. கோழி, ஆடு போன்றவற்றை வாரம் வாரம் சாப்பிட்டால் பெரிய பிரச்னைகள் எதுவும் வரப்போவதில்லை. ஆனால் மாட்டுக்கறியில் கீழ்க்கண்ட பிரச்னைகள் இருக்கின்றன தமனிகளில் தடிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றனவாம் நாளடைவில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு அதிகளவு மாட்டுக்கறி சாப்பிடுவதால் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்குமாம் குடல் புற்றுநோய் ஏற்பட மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் மாட்டுக்கறியிலுள்ள கார்சினோஜென் புற்றுநோயை வரவழைக்க அதிக வாய்ப்புகள் உண்டு கொழுப்பு அதிகம் இருப்பதால், உடல் எடை, பருமன் அதிகரித்து அது தொடர்பான நோய்களுக்கு வாய்ப்பிருக்கிறது இவை அனைத்துமே அதிகப்படியான அளவில் சாப்பிட்டால் மட்டுமே. நீங்கள் எப்போதாவது மாட்டுக்கறி உட்கொள்கிறீர்கள் என்றாலோ, வாரம் ஒருமுறை 100கிராம் 200கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்கிறீர்கள் என்றாலோ அது ஆரோக்யமான உடலுக்கு உதவியாகத் தான் இருக்கும் என்கிறார்கள். கூடவே உடல் எடையையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். உடல்பயிற்சியும் செய்ய வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். தினமும் சிறிதளவு மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் (நல்ல உடல் எடையுடன் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வருபவர்களுக்கு ) உடலில் எல்.டி.எல் எனும் கெட்ட கொழுப்புகள் கட்டுப்படுகின்றனவாம். இதனால் உயர் ரத்த அழுத்த நோயிலிருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளலாம். முடிவு: மாட்டுக்கறி என்றில்லை, ஆடு, கோழி, மற்றும் பல இறைச்சிகள் எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதுதான்.

நள்ளிரவில் வரும் கணவரின் ஆவி.. வீடியோவை பகிர்ந்து உருகிய மனைவி.. உண்மை என்ன?

Sekar December 18, 2022

டிக்டாக்கில் ஒரு பெண், நள்ளிரவில் தனது கைக்குழந்தையைப் பார்க்க இறந்த கணவர் வருவதாகக் கூறி, அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு வைரலாகி வருகிறார். விட்னி ஆலன் எனும் அந்த பெண் தனது கணவர் இறந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை ஒரு தாயாக வளர்த்து வருவது குறித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆலனின் கணவர் ரியான், தேனீ கொட்டியதால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவு ஏற்பட்டு இறந்தார்.

50 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்.. வைரலாகும் வீடியோ!!

Sekar December 17, 2022

திருமணங்கள் எப்போதும் சிறப்புதான். இதுவரை, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதையும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதையும் நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இருப்பினும், சமூக ஊடகங்களில் புயலை கிளப்பிய சமீபத்திய ஒரு வீடியோவில், ஒரு இளம் பெண் தனது 50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார்.

அமைச்சரான அப்பாவிற்கு உதயநிதி மகள் கொடுத்த பரிசு; வைரல் வீடியோ! 

KANIMOZHI December 14, 2022

அமைச்சர் பதவியேற்ற பிறகு குடும்பத்தினரிடம் ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலினை கட்டியணைத்து அவரது மகள் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சே... மாப்பிள்ளையை கதற வைத்த நண்பர்கள் - வைரல் வீடியோ! 

kanimozhi December 12, 2022

திருமணம் ஒன்றில் பாத்திரங்களை இசைக்கருவிகளாக மாற்றி மாப்பிள்ளையின் நண்பர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எங்கு நடந்தது என தெளிவாக குறிப்பிடப்படாத வீடியோவில் ஏராளமான ஆண்கள் சேர்ந்து சமையல் பாத்திரம், ஷேர் ஆகியவற்றை தட்டிக்கொண்டே வட்டமிட்டு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

Cat in the Kitchen: இந்த போட்டோவிற்குள் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

Kanimozhi December 03, 2022

சமையலறைக்குள் செம சைலண்டாக மறைந்து கொண்டிருக்கும் திருட்டு பூனை யை உங்களுக்கு 7 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க முடியுமா?. அதற்குள் இந்த போட்டோவிற்குள் பூனை எங்கே மறைந்துள்ளது என்பதை கமெண்ட் செக்‌ஷனில் சொல்லுங்க. இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீ வேற... எங்க இருக்குன்னு தெரியல நீயே சொல்லு என்பவர்கள் மேலும் படிக்க என்பதை கிளிக் செய்து விடையைத் தெரிந்து கொள்ளுங்கள்... 

1582ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மாயமான அந்த 10 நாட்கள்.. பின்னாடி இருக்கும் மர்மம் | october 1582 calendar history in tamil

Nandhinipriya Ganeshan November 30, 2022

சமூக வலைதளங்களில் தினமும் பல விதமான சுவாரஸ்யங்களும் தகவல்களும் பகிரப்பட்டு வருகின்றன. அப்படி, சமீபத்தில் ஒரு பயனர் பகிர்ந்த ஒரு பதிவு இணையவாசிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தல அஜித் நடித்த சிட்டிசன் திரைப்படத்தில் கடற்கரை பகுதியில் இருந்த அத்திப்பட்டி என்ற கிராமமே மாயமானது போல, 1582 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தல் வழக்கமாக இருக்கும் 31 நாட்களில் 10 நாட்கள் மாயமாகி உள்ளது. அதாவது, 1582 ஆம் ஆண்டின் காலெண்டரை பயனர் ஷேர் செய்துள்ளார். அந்த காலண்டரில் மற்ற மாதங்களை விட பத்து நாட்கள் குறைவாக இருந்துள்ளது. அதாவது, அக்டோபர் 5 முதல் 14ந் வரையிலான 10 நாட்கள் இல்லாமல் இருந்தது. அதெப்படி, ஒரு மாதத்தில் 10 நாட்கள் காணாமல் போகும், என்ன காரணம், என நெட்டிசன்கள் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, இதற்கான காரணத்தை, குறித்து அமெரிக்க வானியல் இயற்பியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான நீல் டி கிராஸ் டைசன் கூறியுள்ளார்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது இதுக்கு தானா? வைரலாகும் 'Before and After Elon Musk' போட்டோஸ்...

Nandhinipriya Ganeshan November 22, 2022

சமீபத்தில் தான் உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்து மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவை அனைத்தும் சர்தேச அளவில் கவனம் பெற்று வருகிறது. அதன்படி, முதல் வேலையாக அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வாலை வேலையை விட்டு அனுப்பினார். மேலும், தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, பொது ஆலோசகர் என மொத்தம் 3700 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கினார்.