Mon ,Jun 05, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57

கரூர்

நீரில் மூழ்கி பலியான 4 மாணவிகளின் விவகாரத்தில் அடுத்தடுத்து பரபரப்பு..

Nandhinipriya Ganeshan February 16, 2023

கரூர் மாவட்டம் மயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவிகளை ஆற்றிற்கு அழைத்து சென்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனையார் பொறியில் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று உடற்கல்வி ஆசிரியருடன் சென்றுள்ளனர்.

கரூரில் மேலும் ஒரு அதிர்ச்சி..! இரண்டு நாள்கள் கழித்து கழிவுநீர் தொட்டியில் மீண்டும் ஒருவர் இறந்த நிலையில் மீட்பு...

Gowthami Subramani November 17, 2022

கரூரில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே, கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் படி, கரூர் மாவட்டத்தில் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்பவரின் புதிய வீடு ஒன்று கட்டுமான பணி நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னராகவே, கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் தொட்டியில் கான்கிரீட் சவுக்கு மரங்கள் மற்றும் பலகைகளை அகற்றும் வேலைகள் இருந்துள்ளன.

விடாத கனமழை.. கடல்போல் காட்சி அளிக்கும் அணை.. இந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. 

Nandhinipriya Ganeshan November 14, 2022

கரூர் அருகே அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக உடுமலை அமராவது அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரூர் மாவட்டத்தில் ராஜபுரம், செட்டிப்பாளையம், அணைப்பாளையம், ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கரூர் பவர்கட் எங்கெங்கே எப்போது ? - அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 வரையிலான அட்டவணை

UDHAYA KUMAR September 29, 2022

பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுழி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, பாலவிடுதி, தலைவாசல், புதுவாடி, பாலவிடுதி கோடாங்கிபட்டி,சின்னம்பட்டி,சடையம்பட்டி,வெள்ளபட்டி,பூலாம்பட்டி,கொசூர்,பள்ளிகவுண்டனூர்,தந்திரிப்பட்டி,ஒட்டப்பட்டி,சந்தையூர்,சிந்தாமணிப்பட்டி,பணிக்கம்பட்டி,வளையபட்டி,எருமநாயக்கன்பட்டி,மேட்டுப்பட்டிபட்டிக்காபட்டி,மருதூர்,நாடுபட்டிமத்தப்பட்டிபட்டி,நாடுபட்டி புனவாசிபட்டி,ஆந்தரப்பட்டி, மகிழிப்பட்டி, பொட்டம்பட்டி, ஓமந்தூர், எம்.புதுப்பட்டி, மத்திப்பட்டி, பாலப்பட்டி, நச்சலூர், நல்லூர், அர்த்தம்பட்டி, இனுங்கூர், கலிங்கப்பட்டி, புதுப்பட்டி, கீழப்பட்டி, கல்லை, தோகமலை, தெலுங்கப்பட்டி,சின்னப்பருந்தலுார் வேம்பதுராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ரக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி, அய்யர்மா லை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டரைப்பட்டி, வேப்பங்குடி, வடுகபட்டி, மகாதானபுரம், கிருஷ்ணராயபுரம், வடுகபட்டி, மஹாதானபுரம், கிருஷ்ணராயபுரம் சின்னசெங்கல், கீழமுனையனூர்

மொத்தம் 164 நாடுகளில்...கரூர் அரசு பள்ளி மாணவன்...இளம் ஐன்ஸ்டீன் பட்டம் வென்று சாதனை!

Priyanka Hochumin September 16, 2022

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் இருக்கும் வரட்சியான பகுதிகளில் ஒன்று பஞ்சப்பட்டி. அங்கு செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் இருந்து தனபால் என்னும் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் 11-ம் வகுப்பு படிக்கும் பூவரசன் என்ற மாணவர் சர்வதேச அளவில் `இளம் ஐன்ஸ்டீன்' விருது பெற்றிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் மொத்தம் 164 நாடுகளில் இருந்து மத்திய, மாநில பாடத்திட்டத்தில் பயிலும் அனைத்து பள்ளிகளில் இருந்து 43 படைப்புகள் சர்வதேச அளவில் பங்குபெற்றன. பூவரசன் கண்டுபிடிப்பு - அலைபேசி ப்ளூடூத் மூலம் ரோபோவை கட்டுப்படுத்தும் இயந்திரத்தை காட்சியளித்தார்.

அழகான பெண் என்று ஏமாந்த 8 இளைஞர்கள்...அதுல இன்னும் 2 வெய்டிங் லிஸ்ட்...அலேக்காக மாட்டிய கல்யாண ராணி!

Priyanka Hochumin September 16, 2022

Karur District News Tamil: கரூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இதுவரை 8 பேரை திருமணம் செய்து பணத்தை ஏமாற்றிய பெண், அடுத்து திருமணம் செய்ய போகும் மாப்பிளையால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். தனக்கு அமைச்சரை தெரியும் என்னவும் தான் பெரிய இடத்து பெண் என்று நாடகம் ஆடி இதுவரை லட்சக்கணக்கில் ஏமாற்றிய பெண், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய போகும் மாப்பிளையால் கையும் களவுமாக மாட்டியுள்ளார். விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

கரூர் அருகே சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை - பகீர் பின்னணி..

Nandhinipriya Ganeshan September 12, 2022

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டார பகுதியில் கரூர் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்த 39 வயதான செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான தனியார் கல்குவாரி செயல்பட்டு வந்தது. இதே கல்குவாரிக்கு அருகில் கரூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான 52 வயதான ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019 ஆம் ஆண்டு நிலப்பிரச்சனை தொடர்பாக தன்னை கொலை செய்ய முயன்றதாக ஜெகநாதன் க.பரமத்தி போலீஸ் நிலையத்தில் செல்வக்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், செல்வக்குமாரின் கல்குவாரி உரிமம் முடிந்து இயங்கி வருவதாகவும் கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

கரூர் பவர்கட் எங்கெங்கே எப்போது ? - அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31

UDHAYAKUMAR September 06, 2022

TANGEDCO Karur District Power Shutdown September 2022 Today & Tomorrow 1/9/2022 to 30/9/2022 September Month 2022 Current Cut Schedule News:  TANGEDCO கரூர் மாவட்டம் மின்பராமரிப்பு பணிகள் செப்டம்பர்2022 இன்று மற்றும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு.  1/9/2022 to 30/9/2022 செப்டம்பர்2022 மாதத்துக்கான மின் தடை நிலவர அட்டவணை: TNEB Karur Current Cut / Karur Power Cut Locations & Today Karur Power Cut or Not? Here we have updated TNEB Karur District Today & Tomorrow Power Shutdown  கரூரில் எங்கெல்லாம் மின்தடை ஏற்படும். எப்போது மின்சாரம் திரும்ப வரும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காண்போம். கரூரில் இருக்கும் முக்கியமான பகுதிகளின் பட்டியல். 

கரூர் மாவட்டத்தில் மின்தடை.. ஆகஸ்ட் மாத பட்டியல் வெளியீடு.. உங்கள் பகுதியில் எப்போது தெரியுமா?

Sekar August 05, 2022

தமிழக மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அமல்படுத்தப்படும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் கரூர் மாவட்டத்தின் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தினத்தில் மின்தடை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.

வாரிசு சான்றிதழுக்கு ரூ.10,000.. அரவக்குறிச்சி தாசில்தார் அதிரடி கைது!!

Sekar July 21, 2022

வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட அரவக்குறிச்சி தாசில்தார் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தாலுக்கா சின்னதாராபுரம் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. அவரது தந்தை இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட தாசில்தார் ராஜசேகரன், வாரிசு சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ.10,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.