Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,117.20
-631.22sensex(-0.87%)
நிஃப்டி21,846.20
-209.50sensex(-0.95%)
USD
81.57

கிரிக்கெட்

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் மட்டுமே வழி: அபினவ் முகுந்த்!

Iravaadhan June 24, 2023

சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி குறித்து முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்களான புஜாரா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மூன்று வீரர்களும் டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கடந்த இரு ஆண்டுகளாக சர்ஃப்ராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் உள்ளிட்டோர் அதிக ரன்களை விளாசி நீண்ட நாட்களாக இந்திய அணியின் தேர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் விரக்தியடைந்த தமிழக முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்கள் தேர்வு செய்துள்ளதை புரிந்துகொள்ள முடியவில்லை. இனி ஒரு இளம் வீரர் தனது மாநில அணிக்காக ஆடுவதினால் பெருமை கொள்வதற்கு எந்த ஊக்கனும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியில் விரைவாக இடம்பிடிக்க இனி ஐபிஎல் மற்றும் பிரான்சைஸ் கிரிக்கெட் தான் புதிய வழியாக அமைதுள்ளது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வாழ்நாள் கனவு நிறைவேறியது: நெகிழ்ச்சியுடன் சொல்லும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Iravaadhan June 24, 2023

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றதன் மூலமாக தனது 21 ஆண்டுகால வாழ்நாள் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர், இராணி கோப்பை, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், சையத் அலி முஷ்டாலி அலி தொடர் என்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் விரைவில் இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் 21 வயதாகும் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எங்கு பெயர் தெரியாத இடத்தில் டென்ட் அமைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்ற சிறுவன், அன்றாட செலவுகளுக்காக பானி பூரி விற்ற இளைஞன், இன்று இந்திய டெஸ்ட் அணிக்காக களமிறங்கப் போவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் பேசுகையில், 21 வருட வாழ்க்கையில் நான் கண்ட ஒரே கனவு இதுமட்டும்தான். அது நிறைவேறியுள்ளது. ஒவ்வொரு இரவிலும் எனது படுக்கையில் இருந்து இந்திய ஜெர்சியை அணிந்து சதம் விளாசிய ரசிகர்கள் முன் கைகளை விரித்து கொண்டாடுவது போல் கனவு கண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையை விடவும் கிரிக்கெட்டை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. நான் கூட 13 பந்துகளில் அரைசதம் அடிப்பேன் என்றெல்லாம் நினைத்ததில்லை. எந்தவொரு விஷயத்தில் சாதிக்க வேண்டுமென்றாலும், தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்ய வேண்டும். அதனை பின்பற்றி வருகிறேன். கிரிக்கெட்டில் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரின் இடதுகை ஆட்டமும் முக்கிய காரணமாகும். ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி அப்படி என்ன செய்துள்ளார்? : அஸ்வின் விளக்கம்!

Iravaadhan June 23, 2023

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கேப்டன்சி குறித்து இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். அதேபோல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது ரசிகர்களுக்கு நிச்சயம் விரக்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கும். அதனை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

பாரபட்சம் காட்டும் பிசிசிஐ.. சர்ஃபராஸ், அபிமன்யூ ஈஸ்வரன், ஹனுமா விஹாரி.. தேர்வு செய்யாததற்கு என்ன காரணம்?

Iravaadhan June 23, 2023

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அபிமன்யூ ஈஸ்வரன், சர்ப்ராஸ் கான், பிரியங்க் பஞ்சால், ஹனுமா விஹாரி உள்ளிட்ட ஒருவருக்கு கூட பிசிசிஐ வாய்ப்பு வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் தொடர்ந்து இந்திய அணி இரண்டு முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால் டெஸ்ட் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. புஜாராவை அனுப்பிவிட்டு ஹனுமா விகாரி, ரஹானேவுக்கு பதில் சர்ப்ராஸ் கான், பேக் அப் தொடக்க வீரராக அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்ட ரஞ்சி போட்டியில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: சஞ்சு சாம்சன் கொடுத்த மாஸ் கம்பேக்

Iravaadhan June 23, 2023

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடருக்கான இந்திய அணியை தற்காலிக தேர்வு குழு தலைவர் சிவ் சுந்தர் அறிவித்துள்ளார். அதில் சஞ்சு சாம்சன் மீண்டும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய அணி வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய ஒரு நாள் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அணியில் புஜாராவை நீக்கம்.. துணை கேப்டனாக உயர்ந்த ரஹானே!

Iravaadhan June 23, 2023

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மீண்டும் கேப்டனாக ரோகித் சர்மாவையே தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், புஜாராவை மட்டும் அதிரடியாக நீக்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் தற்போது வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை தற்காலிக தேர்வு குழு தலைவர் சிவ்சுந்தர் அறிவித்துள்ளார். இதில் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

தேர்வுக் குழு தலைவர் பதவிக்காக யாரும் என்னை அணுகவில்லை: சேவாக் பேட்டி! | Former Cricketer Virender Sehwag

Iravaadhan June 23, 2023

இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழு தலைவராக சேத்தன் சர்மா செயல்பட்டு வந்தார். ஆனால் ஜீ தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய சேத்தன் சர்மா, தானாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி மாதத்தில் சேத்தன் சர்மா ராஜினாமா செய்த நிலையில், அவரது இடம் இன்று வரை நிரப்பப்படாமலேயே உள்ளது. இதனால் தேர்வுக் குழு இடைக்கால தலைவராக ஷிவ் சுந்தர் தாஸ் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கும் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன்பின்னர் தேர்வுக் குழு தலைவராக செயல்பட பிசிசிஐ தரப்பில் வீரேந்தர் சேவாக்கிடம் பேசப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சேவாக் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அப்போது சேவாக்கை தவிர்த்துவிட்டு, அந்த பொறுப்புக்கு அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமனம் செய்தது. அதன்பின்னர் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி, என்சிஏ தலைவராக விவிஎஸ் லக்‌ஷ்மண், இந்திய அணி பயிற்சியாளராக ராகுல் டிராவிட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால் இந்திய அணிக்காக ஆடிய சேவாக்கிற்கு மட்டும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு சேவாக் விண்ணப்பிக்கப் போவதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் குறித்து வீரேந்தர் சேவாக்கிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் தேர்வுக் குழு தலைவராக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தேர்வுக் குழுவினருக்கான ஊதியம் குறைவாக இருப்பதால், அந்தப் பொறுப்புக்கு வருவதாக இந்திய ஜாம்பவான்கள் தயங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் யார்? தயாராகும் சேவாக், கைஃப் மற்றும் வெங்கடேஷ் பிரசாத்!

Iravaadhan June 23, 2023

மும்பை: இந்திய அணிக்கான தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை கோரியுள்ள நிலையில், இந்திய முன்னாள் வீரர்களான சேவாக், வெங்கடேஷ் பிரசாத் மற்றும் கைஃப் ஆகியோர் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது முக்கிய ஆட்டங்களில் தோல்வியை தழுவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி கைப்பற்றவில்லை. இந்த நிலையில் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மாவும் சர்ச்சைகளில் சிக்கி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்போது புதிய தேர்வு குழு தலைவர் பதவிக்கு நபர்களை தேர்வு செய்ய பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை வரும் 30-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும் என்றும் பி சி சி ஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த பதவிக்கு வர வாய்ப்புள்ள மூன்று நபர்கள் குறித்த தற்போது பார்க்கலாம். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சேவாக் தான். இந்திய அணியின் அதிரடி வீரர் சேவாக்கிற்கு ஏற்கனவே பயிற்சியாளர் பொறுப்பு தேடி வந்தது. ஆனால் அவர் அப்போது உள்ள மனநிலையில் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.தற்போது சேவாக் கிரிக்கெட் தொடர்பாக எந்த பணியிலும் இல்லை என்பதால் தேர்வு குழு தலைவராக அவர் வருவதற்கு பல வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் தற்போது வட பிராந்தியத்திலிருந்து வந்த சேத்தன் சர்மா தான் ராஜினாமா செய்திருப்பதால் அந்தப் பிராந்திய பகுதியில் இருப்பவர்கள் தான் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிடித்திருப்பவர் முகமது கைஃப். இந்திய அணியில் உள்ள பிரச்சினைகள் என்ன? இந்திய அணியில் என்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது தன்னுடைய கருத்தை கூறி வருவதால் இந்த போட்டிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவம் களத்தில் விளையாடிய திறமை என அனைத்தும் இருப்பதால் கைஃப் விண்ணப்பித்தால் அவருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு குழுவின் பணிகள் சரியில்லை என்று கடுமையான விமர்சனங்களை வெங்கடேஷ் பிரசாத் வைத்து வருகிறார். மேலும் சில வீரர்களை எந்த வகையில் தேர்வு செய்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு குழு தலைவர் பதவிக்கு வர தகுதியான நபராக இருப்பார் என தெரிகிறது. எனினும் அவர் தெற்கு பிராந்திய பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில் சிக்கல் இருக்கிறது. தற்போது தேர்வு குழு தலைவராக சிவசுந்தர் அந்தப் பணியில் தற்காலிகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வாரங்களாக தோனி ஓய்வில் இருக்கிறார்: சிஎஸ்கே காசி விஸ்வநாதன் தகவல்

Iravaadhan June 21, 2023

சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் அறுவை சிகிச்சைக்கு மூன்று வார கால ஓய்வில் இருந்து வருவதாக சிஎஸ்கே சிஇஒ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் வாரத்திலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்கு முதற்கட்ட சிகிச்சைகளை மட்டுமே எடுத்துக் கொண்ட தோனி, காயத்துடனே ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வந்தார். விக்கெட் கீப்பிங் செய்யும் போது, பேட்டிங் செய்யும் போதும் தோனி காயத்தால் ஒட முடியாமல் அவதியடைந்தது ரசிகர்களுக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.

இங்கிலாந்து ரசிகர்களின் சீண்டல்கள்.. ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதிலடி! | Australia Captain Cummins

Iravaadhan June 21, 2023

லண்டன்: இங்கிலாந்து ரசிகர்களின் பாடல்கள், கோஷங்கள் எதுவும் எங்களின் கவனத்தை சிதைக்காதென ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார். இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரில் ரசிகர்கள் என்ன எதிர்பார்த்தார்களோ, அதனை முதல் போட்டியிலேயே ரசிகர்களுக்கு கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் ஹெட்டிங்லே போட்டியில் நிகழ்ந்த சம்பவம் அப்படியே மாறி ஆஸ்திரேலிய அணி நிகழ்ந்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து ரசிகர்கள் ”Boring Aussie.. Boring” என்று வம்புக்கு இழுக்க, களத்தில் சலனமே இல்லாமல் வெற்றியை தேடி கொடுத்தார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கு முதல் காரணம் உஸ்மான் கவாஜா என்றால், இரண்டாவது காரணம் கேப்டன் பேட் கம்மின்ஸ்தான். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 44 ரன்கள் விளாசியும் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்தார். அதேபோல் இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்தை முறியடிக்க வழக்கம் போல் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டே போதுமானது என்று ஆஸி. அணி நிரூபித்து காட்டியுள்ளது. இந்த வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் ஹெட்டிங்லே போட்டியை நினைவுபடுத்தவில்லை என்று கூறினால் அது பொய்தான். அந்தப் போட்டியில் வெற்றியை நழுவவிட்டது எப்போதும் சோகத்தையே கொடுக்கும். ஆனால் இன்று இந்த வெற்றி மருந்தாக அமைந்துள்ளது. ஓய்வறையில் உள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் நம்பர் 1 அணி நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளோம். அதேபோல் என் வாழ்க்கையில் அடைந்த மிகச்சிறந்த வெற்றி இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக 20 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் எங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, சிறந்த அணியாக இருக்கிறோம். இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் சில கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் அதனையும் மீறி எளிதாக வெற்றியை பெற்றுள்ளோம். ஒருவேளை முதல் நாளில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யவில்லை என்றால், இன்றைய நாளில் நான் அரைசதம் விளாசி இருப்பேன் என்று தெரிவித்தார்.