Sun ,Mar 26, 2023

சென்செக்ஸ் 57,527.10
-398.18sensex(-0.69%)
நிஃப்டி16,945.05
-131.85sensex(-0.77%)
USD
81.57

தஞ்சாவூர்

“எங்களால முடியல” - தஞ்சை விவசாயிகள் அரசுக்கு பரபரப்பு கோரிக்கை! 

KANIMOZHI December 16, 2022

நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெல் கொள்முதலில் 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து , கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

“பாப்கட் செங்கமலம்” குளித்து மகிழ ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்; அறநிலையத்துறை அசத்தல்! 

Kanimozhi December 05, 2022

செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், கோயில் வளாகத்தில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து,அதனை இன்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். அந்த நீச்சல் குளத்தில் யானை பாப் கட்டிங் செங்கமலம் குளித்து நீராடி மகிழ்ந்தது.

எங்கள மறந்துட்டீங்களே -  தாராசுரம் மக்கள் ஆதங்கம்! 

Kanimozhi December 02, 2022

யுனெஸ்கோ அமைப்பின் உலக கலாச்சார பாரம்பரிய மரபுச் சின்னங்களில் ஒன்றான தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஒரு வார காலத்திற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ள  மின்விளக்கு அமைப்புகளை நிரந்தரமாக அமைத்திட வேண்டுமென சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

ஜி20 தலைமைப் பொறுப்பில் இந்தியா; ஜொலி ஜொலித்த தஞ்சை பெரிய கோயில்! 

Kanimozhi December 02, 2022

ஜி20 அமைப்பிற்கு டிசம்பர் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.  இதனை கொண்டாடும் விதமாக  நாடு முழுவதும் உள்ள தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 100 பாரம்பரிய சின்னங்கள் ஜி-20 அடையாள சின்னத்துடன் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கோட்டை சுவற்றில் ஜி- 20 மாநாடு சின்னத்தை ப்ரொஜெக்டர் மூலம் பிரதிபலிப்பதுடன், கோவில் சுற்றுச்சுவர் வெள்ளி  நிறத்தில் ஜொலிக்க விடப்பட்டுள்ளது.

தஞ்சையில் பரபரப்பு.. தனியார் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

Sekar November 28, 2022

தஞ்சாவூரில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 8 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள குறிச்சி என்ற கிராமத்தில் ஐபிஇஏ என்ற தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த பல்வேறு மாணவ மாணவியரும் இந்த பள்ளியில் படிக்கும் நிலையில், அவர்களுக்காக பள்ளி பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று அதம்பை எனும் கிராமத்திலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள வயலுக்குள் சென்று விபத்துக்குள்ளானது.

ரூ.1000 மழை நிவாரணம் - இன்று தொடங்கியது

Editorial Desk November 24, 2022

சீர்காழி மற்றும் கொள்ளிடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவ மழையால் கடந்த நவம்பர் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. மழை நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் விளைநிலங்களில் பாதிப்பை எதிர்கொண்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இன்று அரசு சார்பில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி சீர்காழி அருகே மணி கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் நிகழ்வை தொடங்கிவைத்தார். இதன் மூலம் இன்று முதற்கட்டமாக மணி கிராமத்தைச் சேர்ந்த 893 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் மொத்தம் 238 ரேசன் கடைகளில் 1,61,647 குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

குளத்த காணோம்... குறைதீர்க்கும் கூட்டத்தில் சட்டையில்லாமல் வந்தவரால் பரபரப்பு!

Editorial Desk November 24, 2022

கடந்த எட்டு ஆண்டுகளாக நாச்சியார் கோவில் பகுதியில் 8 குளங்கள் காணாமல் போய் உள்ளது. அது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து தேசியக் கொடியுடன் கும்பகோணத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்திற்கு வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில், திருநறையூர், சமர்த்தனார்குடி, போன்ற இடங்களில் இருந்த எட்டு குளங்கள் கடந்த சில ஆண்டுகளாக காணாமல் போய்விட்டது எனவும், இது தொடர்பாக 8 ஆண்டுகளாக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து, சட்டை இன்றி கும்பகோணத்தில் இன்று நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த கோவிந்த வல்லப பந்த் என்ற சமூக ஆர்வலரின் செயல் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழப்பு… தஞ்சையில் நடந்த பகீர் சம்பவம்..!

Gowthami Subramani October 18, 2022

தஞ்சை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நடுக்காவேரியைப் பகுதியைச் சேர்ந்த கமலநாதன், ஜெயலட்சுமி தம்பதியினர் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், தஞ்சை மேம்பாலத்தில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து, இவர்களது பைக்கை முந்தி செல்ல முயன்றது. இதில், பைக்கின் பக்கவாட்டில் உரசியுள்ளது. இதனால், நிலை தடுமாறிய பைக்கில் இருந்து கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் தனது கணவன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சையில் கரண்ட் கட்! பவர் எப்ப போகும் எப்ப வரும் விவரங்களுடன்...!

UDHAYA KUMAR December 20, 2022

திருக்கண்ணூர்பட்டி, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருமலைசமுத்திரம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, பூண்டி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் நகர், ஒரத்தநாடு, ஈச்சங்கோட்டை, சாக்கோட்டை, திருப்புறம்பியம், ஆடுதுறை, மதுக்கூர், திருப்புறம்பியம், ஆடுதுறை, மதுக்கூர், மாரியம்மன்பேட்டை, மாரியம்மன்பேட்டை. மணிமண்டபம், சேதுபாவாசத்திரம், திருக்கண்ணூர்பட்டி, பேராவூரணி, கும்பகோணம், திருப்பனந்தாள்