Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
104.99sensex(0.14%)
நிஃப்டி22,055.70
32.35sensex(0.15%)
USD
81.57

கார் ரிவியூஸ்

டாப் வேரியண்ட் 16 லட்சம்...இது தான் நமக்கு ஏத்த பட்ஜெட் கார்! | Honda Elevate On Road Price in India

Priyanka Hochumin September 05, 2023

ஜப்பான் நாட்டை இருப்பிடமாகக் கொண்ட ஹோண்டா ஆட்டோமொபைல் நிறுவனம் உலகெங்கிலும் பிரபலமானது. பட்ஜெட் விலையில் மக்களுக்கு கார்களை வழங்குவதில் இந்நிறுவனமும் ஒன்று. அந்த வகையில், நேற்று இந்தியாவில் ஹோண்டா எலிவேட் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் SV, V, VX மற்றும் ZX என மொத்தம் நான்கு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா பன்ச் ரூ.7.10 லட்சத்திற்கு அறிமுகம் - விலை, மைலேஜ், விவரக்குறிப்புகள் | Tata Punch CNG Launched in India

Priyanka Hochumin August 04, 2023

இந்தியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் அதன் லேட்டஸ்ட் பன்ச் சிஎன்ஜியை அறிமுகம் செய்துள்ளது. ஆரம்ப விலை ரூ.7.10 லட்சத்திற்கு தொடங்கி, டாப்-ஸ்பெக் வேரியண்ட் ரூ.9.68 லட்சம் வரையில் கிடைக்கிறது. இந்த புதிய டாடா பன்ச் - Pure, Adventure, Adventure rhythm, Accomplished, Accomplished Dazzle S உள்ளிட்ட ஐந்து வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது.

எது 1.20 கோடியா டொயோட்டா வெல்ஃபயர்...இதுல அப்படி என்ன இருக்கு? | Toyota Vellfire Launched in India

Priyanka Hochumin August 04, 2023

ஜப்பானை இருப்பிடமாகக் கொண்ட உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டார் கார்பொரேஷன் அவர்களின் அடுத்த ஜென் மாடலான 'டொயோட்டா வெல்ஃபயர்' இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.1.20 கோடி ஆரம்ப விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வெல்ஃபயர் - Hi மற்றும் VIP என்னும் இரண்டு வேரியண்டில் கிடைக்கிறது. காரின் முன் பகுதியில் ஸ்பிலிட் ஹெட்லேம்ப்களால் சூழப்பட்ட சிக்ஸ்-ஸ்லாட் கிரில்லிக்கு நடுவில் டொயோட்டா லோகோ பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.5.99 லட்சத்தில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்.. மைலேஜ், வேரியண்ட் விவரங்கள்.. | Hyundai Exter SUV Launched in India

Nandhinipriya Ganeshan July 11, 2023

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவி மாடலான 'எக்ஸ்டர்' இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5.99 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் - EX, EX (Optional), S, SX, SX (Optional) மற்றும் SX (Optional) Connect என 6 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், 15-இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, டெயில் லைட்கள், அகலமான பாராமெட்ரிக் கிரில் டிசைன், ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ரியர் ஏசி வென்ட்கள், பவர் அவுட்லெட், டிபிஎம்எஸ், இன்பில்ட் நேவிகேஷன், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் என்ஜின்: இந்த புதிய எக்ஸ்டர் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 6000rpm-ல் 81 hp பவரையும், 4000rpm-ல் 113.8 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. டிரான்ஸ்மிஷன் விருப்பங்களில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி ஆட்டோமேட்டிக் ஆகியவை அடங்கும். அதேபோல், சிஎன்ஜி ஆப்ஷனில் 6000rpm-ல் 69 hp பவர் மற்றும் 4000rpm-ல் 95.2Nm டார்க் வழங்குகிறது. இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மட்டும் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் இண்டீரியர்: காரின் உட்புறத்தில் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டேஷ்கேம், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஃபூட்வெல் லைட்டிங் உள்ளது. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ESC, VSM, HAC, பார்கிங் சென்சார்கள் உள்ளன. ஹூண்டாய் எக்ஸ்டர் பரிமாணங்கள்: மைலேஜைப் பொறுத்தவரை, பெட்ரோல் என்ஜின் 19.4 கிமீ/லி மைலேஜையும், பெட்ரோல் ஏஎம்டி 19.2 கிமீ/லி மைலேஜையும், சிஎன்ஜி வேரியண்ட் 27.1 கிமீ/கிகி மைலேஜையும் கொடுக்கிறது. எக்ஸ்டர் காரின் பரிமாணங்கள் முறையே 3815mm நீளம், 1710mm அகலம் மற்றும் 1631mm உயரம் கொண்டுள்ளது. 2450mm வீல்பேஸ் கொண்டுள்ள காரில் 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. அதேபோல், சிஎன்ஜி வேரியண்டில் 185mm கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டு, 391 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொள்ளளவுடன், 37 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் விலை: அட்லஸ் வைட் டைட்டன் கிரே, ஸ்டேரி நைட், காஸ்மிக் புளூ, ஃபியெரி ரெட், ரேஞ்சர் காக்கி, அட்லஸ் வைட் - டூயல்-டோன் ரூஃப், காஸ்மிக் புளூ - டூயல்-டோன் ரூஃப் மற்றும் ரேஞ்சர் காக்கி - டூயல்-டோன் ரூஃப் என்ற ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. வேரியண்ட்களின் விலைகள் முறையே ஹூண்டாய் எக்ஸ்டர் இ.எக்ஸ் ரூ. 6 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் இ.எக்ஸ் (ஆப்ஷனல்) ரூ.6.25 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ் ரூ.7.24 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் ரூ.7.99 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) ரூ.8.63 லட்சம், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்.எக்ஸ் (ஆப்ஷனல்) கனெக்ட் ரூ.9.32 லட்சம் ஆகும்.

மாருதி ஜிம்னி vs மஹிந்திரா தார்.. எது பெஸ்ட்? | Maruti Suzuki Jimny vs Mahindra Thar

Nandhinipriya Ganeshan June 08, 2023

மஹிந்திரா தார் என்பது தற்போது இந்தியாவில் உள்ள டிஃபாக்டோ லைஃப்ஸ்டைல் ​​ஆஃப்-ரோடர் எஸ்யூவியாக இருந்து வருகிறது. ஆனால், தார் 3 கதவுகளுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இதற்கு போட்டியாக மாருது சுஸூகி ஜிம்னி ஆஃப்-ரோடர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாருடன் ஒப்பிடுகையில் ஜிம்னியில் 5 கதவுகள் இருக்கின்றன. இதுதான் ஜிம்னியின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. இந்த இரண்டு ஆஃப்-ரோடர்களுக்கும் இடையே அப்படி என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம். ஜிம்னி vs தார் பரிமாணங்கள்: ஜிம்னியில் கதவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மஹிந்திரா தாரை விட நீளமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. ஜிம்னி மற்றும் தார் என இரண்டு ஆஃப்-ரோடர்களின் நீளமும் 3985 மிமீ தான். உயரத்தை பொறுத்தவரையில் தார் 1896 மிமீ கொண்டது. ஆனால், ஜிம்னி 1720 மிமீ மட்டுமே உயரம் கொண்டது. அகலம் மற்றும் வீல்பேஸ் அளவுகளின் முறையே தார் 1820 மிமீ மற்றும் 2450 மிமீ கொண்டது; ஜிம்னி 1645 மிமீ மற்றும் 2590 மிமீ கொண்டது. ஆகமொத்தம் இரண்டு எஸ்யூவிகளின் நீளமும் ஒரே மாதிரியாக இருந்தாலும், தார் உயரமாகவும் அகலமாகவும் இருக்கிறது. பாடி ஸ்டைல்: மஹிந்திரா தாரில் உட்பக்கத்தில் நெருகலான கட்டமைப்பே அதன் குறையாக பார்க்கப்படுகிறது. இதை நன்றாக புரிந்துக் கொண்ட மாருதி ஜிம்னியை 5 கதவுகளுடன் அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும், வாகனத்தின் அளவில் மாற்றம் இல்லை. மேற்கூரையை பொறுத்தவரையில், ஜிம்னி உலோகத்தால் ஆன மேற்கூரையுடன் வருகிறது. ஆனால், தாரில் சாஃப்-டாப் மற்றும் ஹார்ட்-டாப் என 2 விதமான மேற்கூரை விருப்பம் உள்ளது. இதுவே தாரின் பிளஸ் பாயிண்டாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவாக, தாரில் பின்புற இருக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்றால் முன் இருக்கையை முன்னோக்கி நகர்த்த வேண்டிய உள்ளது. ஆனால், ஜிம்னியில் பின்புற இருக்கைகளுக்கு செல்ல தனி கதவுகள் உள்ளன. இது ஜிம்னியின் பிளஸ் பாயின்டாக பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டு ஆஃப்-ரோடர்களிலும் பின்புற ஏசி வென்ட்கள் அல்லது யுஎஸ்பி சாக்கெட்டுகள் இல்லை என்றாலும், தார் மட்டுமே பின்புறத்தில் சாய்ந்திருக்கக்கூடிய இருக்கைகளை வழங்குகிறது. ஜிம்னி vs தார் என்ஜின்: என்ஜின் விருப்பங்களை பொறுத்தவரை, மஹிந்திரா தார் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று விதமான என்ஜின் விருப்பங்களுடன் வருகிறது. 1.5 லிட்டர் என்ஜின் 113 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது, இது பின்புற வீல்களை மட்டுமே இயக்கும். அதேபோல், 2.2 லிட்டர் டீசல் என்ஜின் 128 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோ என்ஜின் 148 பிஎச்பி பவரையு, 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இரண்டு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாருதி ஜிம்னியை பொறுத்தவரையில், 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது. இது 103 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு வீல் டிரைவ் தரத்துடன் வருகிறது. அம்சங்கள்: இந்த இரண்டு ஆஃப்-ரோடர்களிலும் டச்ஸ்க்ரீன், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி ஃபங்க்சன் ஸ்டீயரிங் வீல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இருப்பினும், டச்ஸ்க்ரீன் அளவுகளை பொறுத்தவரை, ஜிம்னியின்(9 இன்ச்) டிஸ்ப்ளே தாரை (7 இன்ச்) விட 2 இன்ச் பெரியதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஜிம்னியில் கூடுதலாக 6 ஏர்பேக்குகள், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஹெட்லேம்ப் வாஷர்ஸ், ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லேம்ப்கள், மிருதுவான பயனர் இடைமுகம் (UI), வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதிகள் இடம்பெறுகின்றன. இவை மஹிந்திரா தாரில் கிடையாது.

மாருதி ஜிம்னி இந்த அம்சத்தில் முதலில் இந்தியாவில் தான் அறிமுகம் | Maruti Suzuki Jimny on Road Price in India

Priyanka Hochumin June 07, 2023

நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாருதி சுஸுகியின் ஜிம்னி எஸ்யூ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனின் ஆரம்ப நிலை Zeta டிரிம் ரூ.12.74 லட்சத்தில் தொடங்கி, டாப்-ஸ்பெக் ஆல்ஃபா டிரிம்களின் விலை ரூ.15.05 லட்சம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா தான் ஐந்து கதவுகள் கொண்ட வெர்சனை பெரும் முதல் நாடாகும். வாடிக்கையாளர்கள் மாருதியின் சந்தா திட்டத்தின் மூலம் ஜிம்னியை மாதாந்திர கட்டணமாக ரூ.33,550க்கு தேர்வு செய்யலாம். இந்த கார் மாருதியின் குருகிராம் ஆலையில் தயாரிக்கப்பட்டு அங்கிருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.

கியாவின் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி.. ஒருமுறை சார்ஜ் செய்தால் 541கிமீ ரேன்ஜ் தரும்.. | Kia EV9 Price in India

Nandhinipriya Ganeshan June 05, 2023

கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான கியா மோட்டார்ஸ் இந்தியா, முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. நிறுவனம் இதுவரை உருவாக்கியதிலேயே, அளவு அடிப்படையில் நீளமான கார் இதுவாகும். அதாவது, மூன்றடுக்கு இருக்கைகள் கொண்ட இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் வடிவில் கிடைக்கிறது. முற்றிலும் புதுமையாக பார்ப்பதற்கே ஸ்டாலான லுக்கியில் இருக்கும் இந்த கியா EV9 மாடல் முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 541 கிலோமீட்டர்கள் வரை ரேன்ஜ் தருகிறது. இந்த ரேன்ஜ் WLTP பரிசோதனையில் கிடைத்த முடிவுகளே. இருப்பினும், அன்றாட பயன்பாடுகளின் போது வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட விஷயங்களின் அடிப்படையில் காரின் ரேன்ஜ் வேறுப்படலாம். இத்துடன் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த காரை 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 239 கிமீ வரை பயணிக்க முடியும். Kia EV9 டைமென்ஸன்: அளவீடுகளை பொறுத்தவரை, காரின் நீளமானது 5 மீட்டருக்கும் அதிகமாகவே உள்ளது. HMG-யின் பிரத்யேக பேட்டரி எலெக்ட்ரிக் வாகன (BEV) பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட இரண்டாவது கார் இதுவாகும். 1,980மிமீ அகலமும், 1,750மிமீ உயரமும், 3,100மிமீ வீல்பேஸும் கொண்டுள்ளது. இந்த மாடலின் பூட் 4/5 சீட்டர் மாடலில் நிமிர்ந்து இருக்கும் போது 828 லிட்டர் அளவுக்கு ஸ்டோரேஜ் வசதியை வழங்குகின்றன. அதேசமயம், இதன் 6/7 சீட்டர் மாடலில் இருக்கைகள் நேராக இருக்கும் போது 333 லிட்டர்கள் அளவுக்கு ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. காரைச் சுற்றி 15 சென்சார்கள் உள்ளன. இதில் இரண்டு ஹைடெக் LiDAR சென்சார்கள் முன்பக்கத்தில் உள்ளன. அவை உங்கள் சுற்றுப்புறத்தை வரைபடமாக்குகின்றன. இவை, மற்ற காரில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வைத்திருக்க உதவுகிறது. Kia EV9 ரேன்ஜ் & பேட்டரி: மேலும், இந்த எலெக்ட்ரிக் கார் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியண்ட்களும் கியாவின் நான்காம் தலைமுறை பேட்டரி தொழில்நுட்பத்துடன் 99.8 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் வருகின்றன. ரியர்-வீல் டிரைவ் வேரியண்டில் 150 கிலோவாட் மோட்டார் உள்ளது. இது அதிகபட்சமாக 350Nm டார்க் இழுவிசையையும், 215hp பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 185 கிமீ வேகத்தில் செல்லும் இந்த மாடலானது 0-விலிருந்து 100 கிமீ வேகத்தை 9.4 வினாடிகளில் எட்டிவிடும். அதேபோல், ஆல்-வீல் டிரைவ் வேரியண்டில் உள்ள மோட்டார், அதிகபட்சமாக 600Nm டார்க் இழுவிசையையும், 380hp பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலானது 0-விலிருந்து 100 கிமீ வேகத்தை 6.0 வினாடிகளில் எட்டிவிடும். அது போதுமான வேகம் இல்லை என்றால், நீங்கள் Kia Connect ஸ்டோரிலிருந்து "பூஸ்ட்" செயல்பாட்டை வாங்கிக் கொள்ளலாம். இது டார்க் இழுவிசையை 700Nm ஆக அதிகரிக்கும். இதன் மூலம் வெறும் 5.3 வினாடிகளில் அதிகபட்ச வேகத்தை எட்டிவிடும். Kia EV9 சார்ஜிங்: கியா EV9 மாடலை 800-வோல்ட் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட் அதிகபட்சமாக 239 கிமீ வரை செல்லும். அதேசயம் ஆல் வீல் டிரைவ் வேரியண்ட் 219 கிமீ வரை செல்லும். விலை & வெளியீட்டு தேதி: முற்றிலும் புதுமையான கியா எலெக்ட்ரிக் எஸ்யூவி 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து கொரிய சந்தையில் முன்கூட்டிய ஆர்டர் செய்ய கிடைக்கும். மேலும், விலை ஜூலை மாதத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கார்களின் வகைகள்.. | Different Types of Cars Names in Tamil

Nandhinipriya Ganeshan June 02, 2023

கார் மாடல்களில் நிறைய வகைகள் இருப்பது நமக்கு தெரியும். ஆனால், மாடல்களை தாண்டி கார் வகைகளும் உள்ளன. எத்தனையோ கார் கார் வகைகள் இருந்தாலும், அவற்றில் தற்போது SUV, MUV மற்றும் XUV வகை கார்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பதை இப்பதிவில் பார்க்கலாம். இவை அனைத்துமே அதன் உருவத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. கார் வகைகள்: ஜீப் [Jeep] மினிவேன் [Minivan] கன்வெர்டிபில்ஸ் [Convertibles] பிக் அப் [Pickup] செடான் [Sedan] ஹேட்ச்பேக் [Hatchback] கூபே [Coupe] ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் [SUV-Sports Utility Vehicle] மல்ட்டி யூட்டிலிட்டி வாகனங்கள் [MUV-Multi Utility Vehicle] க்ராஸ்ஓவர் யூட்டிலிட்டி வாகனங்கள் [XUV/CUV-Crossover Utility Vehicle] மல்ட்டி பர்போஸ் வாகனங்கள் [MPV -Multi-Purpose Vehicle] கூல் யூட்டிலிட்டி வாகனங்கள் [KUV-Kool Utility Vehicle] டஃப் யூட்டிலிட்டி வாகனங்கள் [TUV-Tough Utility Vehicle] ஆட்டோனமஸ் அண்டர்வாட்டர் வாகனங்கள் [AUV-Autonomous Underwater Vehicle] லைட் யூட்டிலிட்டி வாகனங்கள் LUV [light utility vehicle]

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக்கின் வேரியண்ட் மாடல்.. அந்தவொரு அம்சம் சூப்பர்.. | Mahindra Scorpio Classic S5 Price

Nandhinipriya Ganeshan May 30, 2023

உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ என் எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்திருந்தார்லும், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் பழைய பதிப்பிற்கான தேவை வலுவாகவே இருந்து வருகிறது. இதனால், நிறுவனத்தை மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் என்ற மாடலை மீண்டும் வெளியிட வேண்டிய நிலைமைக்கு தள்ளியது. அதன்படி, மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் S (பேஸ்) மற்றும் S11 (டாப்-ஸ்பெக்) என்ற இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வகைகளுக்கு இடையே பெரிய விலை இடைவெளி இருந்ததால், மஹிந்திரா இப்போது மிட்-ஸ்பெக் S5 வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது SUVயின் அடிப்படை மற்றும் டாப்-ஸ்பெக் வகைகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும். தற்போது, ஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலின் உட்புற மற்றும் வெளிப்புற அமைப்பு, எஞ்சின் ஆகியவற்றை பார்க்கலாம். வெளிபுறத்தில், பெரிய 17-இன்ச் அலாய் வீல்கள், பாடி-கலர் பம்பர்கள், பாடி-கலர் கருப்பு ORVMகள், ரூஃப் ரெயில்கள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்றவை உள்ளன. உட்புறத்தில், S5 வேரியண்ட் ஒரு இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டைக் கொண்டிருக்கவில்லை, எனவே இது ஸ்டீயரிங்-மவுண்டட் கன்ட்ரோல்களையும் இழக்கிறது. ஆகமொத்தம் உட்புறம் மிகவும் பேசிக்காக இருக்கிறது. இருப்பினும், சாய்வாக சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் மற்றும் நான்கு பவர் ஜன்னல்கள் போன்ற அம்சங்களுடன் வருகிறது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் S5 வேரியண்ட் கடைசி வரிசையில் பக்கவாட்டு இருக்கைகளுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ​​பவர்டிரெய்ன் என்று வரும்போது S5 வேரியண்ட் மாடல் 130bhp மற்றும் 300Nm உச்ச முறுக்குவிசையுடன் 2.2-லிட்டர், டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் எஞ்சின் மூலம் தொடர்ந்து இயக்கப்படுகிறது. மேலும், இந்த எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் பிரத்தியேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தானியங்கி பரிமாற்றம் இல்லை, AWD (ஆல்-வீல் டிரைவ்) மற்றும் 4x4 செயல்பாட்டிற்கான பரிமாற்ற கேஸ் இல்லை. விலையை பொறுத்தவரையில், மஹிந்திரா S5 வேரியண்ட்டின் விலையானது அடிப்படை 'S' வேரியண்டிற்கும்(ரூ.12.99 லட்சம்), டாப்-ஸ்பெக் 'S11' வேரியண்டிற்கும் (ரூ.16.81 லட்சம்) இடையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் S5 வேரியன்ட்டின் விலை சுமார் ரூ.15 லட்சம் வரை இருக்கும். இறுதியாக, S11 டிரிமுடன் ஒப்பிடுகையில், S5 இல் முந்தையது போன்ற பல அம்சங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலத்திற்குப் பின் வெளிவரும் ஹோண்டா எலிவேட்-ன் அசத்தலான புத்தம் புது மாடல்.! விலை எவ்வளவு தெரியுமா.? | Honda Elevate SUV

Gowthami Subramani May 16, 2023

ஹோண்டா கார் நிறுவனமானது நீண்ட காலத்திற்குப் பிறகு, ஹோண்டா எலிவேட் புத்தம் புதிய மாடல் அறிமுகமாக உள்ளது. இந்த எலிவேட் மாடலின் டீசரை ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஹோண்டா எலிவேட் SUV காரின் அம்சங்கள், விலை, அறிமுகமாகும் நாள் மற்றும் மேலும் சில முக்கிய விவரங்களை இந்தப் பதிவில் காணலாம்.