Nandhinipriya Ganeshan March 21, 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அதில், என்னதான் நம் நாட்டில் வேளாண் தொழில்நுட்பங்கள் சிறந்து விளங்கினாலும், சில ஏற்றத் தாழ்வு இருந்து தான் வருகிறது. இதனை ஈடுகட்டுவதற்காக விவசாயிகளுக்கு வெளிநாட்டு வேளாண் தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு, நமது மாநிலத்தில் பின்பற்றும் வகையில் வெளி நாட்டில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Nandhinipriya Ganeshan March 21, 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது, 2023 - 2024 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் வேளாண் துறை மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முத்தான 10 முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்க்கலாம்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் விவசாய நிலங்களுக்குச் சென்ற ஆட்சியர் பாலசுப்ரமணியன், தோட்டத்தில் இருந்த கரும்புகளை டேப் கொண்டு அளக்க உத்தரவிட்டார்.
Nandhinipriya Ganeshan January 06, 2023
நம்மில் பலருக்கும் பழங்களில் மிகவும் பிடித்தது வாழைப்பழம். ஏனென்றால், இதன் ஒருவிதமான இனிப்பு சுவை ஒரு பக்கம் இருந்தாலும் அதன் நன்மைகள் பல பல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் வளைத்து வைத்திருக்கும் இந்த வாழைப்பழத்தில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. உலகில் பல்வேறு இடங்களில் விளையும் இந்த வாழைப்பழம் ஒவ்வொரு பருவ சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் வாழைப்பழத்திற்கு டிமெண்ட் என்றே சொல்லலாம். இந்த நிலையில், உலகிலேயே மிகப்பெரிய வாழைப்பழம் 'Giant Highland Banana' பப்புவா நியூகினியா எனும் நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான வாழைப்பழங்கள் அனைத்தும் காட்டு வாழைப்பழங்களின் வகைகளை சார்ந்தவை. இது உண்மையில் இயற்கையின் அதியம் என்றே சொல்ல வேண்டும்.
வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த முட்டைக்கோஸ் மற்றும் வாழையை நாசம் செய்துள்ளது.
செங்கம் சுற்று வட்டார பகுதியில் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நீரில் மூழ்கி அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்து கற்றுத் தர மொபைல் செயலியை இயக்கி வரும் தமிழக இளைஞரை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டம் மத்வார் பகுதியைச் சேர்ந்த 37 வயதான முரளி பி.எஸ்சி. கணினி அறிவியல் படித்துள்ளார். இவரது தந்தை செல்வராஜ் தானிய வியாபாரியாக இருந்து வந்துள்ளார்.
சீர்காழியில் நெல் பயிரில் அதிக மகசூல் பெற விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை முகாம் நடைபெற்றது. இதில் ஏரளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
47 ஆண்டுகால வரலாற்றிலேயே வரட்டுபள்ளம் அணையில் இருந்து தொடர்ந்து 74 நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்பட்டு விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க பணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்