Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 73,104.61
328.48sensex(0.45%)
நிஃப்டி22,217.85
113.80sensex(0.51%)
USD
81.57

மதுரை

ஜெராக்ஸ் கடையில் போலி ரத்த சான்றிதழ் - பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Selvarani July 20, 2023

மதுரையில் ஓட்டுநர் உரிமம் பெற வருபவர்களுக்உ போலி ரத்த சான்றிதழை வழங்கிய ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பிரபா வசந்தகுமாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை பழங்காநத்தம் அருகே உள்ள பைபாஸ் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினமும்  ஓட்டுநர் உரிமம், லேனர், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவைகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து‌ செல்கினறனர்‌. இதில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பபிப்பவர்கள் ரத்த வகை குறிப்பிட வேண்டும். இதற்காக ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்தில்‌ ஆய்வு செய்து ரத்த வகைக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

பணம், சிகரெட் கேட்டு வாலிபர்கள் தகராறு - மளிகை கடையை சூறையாடும் வீடியோ வெளியீடு!

Selvarani July 12, 2023

மதுரையில் மளிகை கடையில் இலவசமாக பணமும், சிகரெட்டும் கேட்டு தகராறு செய்த வாலிபர்கள், கடை உரிமையாளரை அடித்துவிட்டு கடையை சூறையாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரும்பாலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவர் கரும்பாலை என்ற பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்தக்கடைக்கு அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் கார்த்திக் என்ற எலி கார்த்தி, அய்யனார் மகன் பாவரசு, பால்பாண்டி மகன் பாலசக்தி ஆகிய மூவரும்  சென்றனர். கடையிலிருந்து பணமும் சிகரெட்டும் இலவசமாக கேட்டு கடை உரிஇமையாளரிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள்: அதிகாரிகள் ஆலோசனை

Baskaran July 11, 2023

மெட்ரோ ரயில் பணிகள் கோவிலை பாதிக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மதுரையில் நடைபெற உள்ள மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக, அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமை செயலர், ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் சித்திக் உட்பட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் மேற்கொள்ளப்பட உள்ள மெட்ரோ ரயில் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மதுரையில் வீடுகளில் கிளி வளர்க்க தடை.. மீறினால் வழக்குப் பாயும்..! - வனத்துறை எச்சரிக்கை

Selvarani July 06, 2023

மதுரையில் சட்டவிரோதமாக வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தசட்டத்தின்படி, கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி வீடுகளில் கிளிகள் வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், மதுரை மாநகர் செல்லூர் பகுதியில் பல வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளிகள் வளர்ப்பதாகவும், அவற்றின் இறக்கைகளை வெட்டி, கிளிகளை துன்புறுத்தி வருவதாகவும் வனத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ல் திறக்கப்படும்..! - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

Saraswathi July 03, 2023

மதுரையில் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட குமரி சங்கமம் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்த பிரதமர் மோடி, இதை சொந்த மாவட்டமாக நினைத்ததாகக் கூறினார். மீனவளத்துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கிய பிரதமர் மோடி, அதற்கு இணை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனை நியமித்து பெருமைச்சேர்த்ததாக அண்ணாமலை தெரிவித்தார். 

மதுரையில் பூட்டி கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை

Chandrasekar July 02, 2023

மதுரை மாநகர் கரிமேடு விஸ்வசாபுரியை சேர்ந்த அஜித், வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்துவருகிறார். இவர் மருந்து விற்பனையாளராக பணிபுரிந்துவருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அஜித்தின் வீட்டிற்குள் இருந்து திடிரென வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது திடீரென மர்ம பொருள் வெடித்து அங்கு வைத்திருந்த பொருட்கள் வெடித்து சிதறிய நிலையில் கிடந்துள்ளது.

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் ஊழல் - வெங்கடேசன் பேட்டி

Abhinesh A.R July 01, 2023

ஒப்பந்த முறை இருக்கும் வரை தூய்மை பணியாளர்கள் வறுமைக்காக மலக்குழிகளில் இறங்கி மலக்குழி மரணங்கள் அதிகரிக்கும் என தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மாமன்னன் படத்திற்கு எதிர்ப்பு - மதுரையில் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

Saraswathi June 29, 2023

உதயநிதி நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நேதாஜி சுபாஷ் சேனை, முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் அமைப்பினர் திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திர்ல ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, மாமன்னன் திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஸ் ஃப்கத் பாசில் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித் திருவிழா - மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்!

Saraswathi June 29, 2023

உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் கிராமத்தில் மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்களை பிடித்து சென்றனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்தது முதலைக்குளம் கிராமம். இக்கிராமத்தில் நடுமுதலைக்குளம்-கஸ்பா முதலைக்குளம்- கீழப்பட்டி-ஒத்தவீட்டுபட்டி- குளத்துப்பட்டி-கொசவபட்டி-அம்மன்கோவில்பட்டி-எரவம்பட்டி-பூசாரிபட்டி-மலையூர்-சின்னகொசவம்பட்டி என 12 கிராமத்திற்கு பாத்தியப்பட்ட பெரிய கண்மாய் உள்ளது.

பசியில் பார்சலை பிரித்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - உணவகத்தில் அதிரடி சோதனை!

Baskaran June 19, 2023

மதுரையில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளருக்கு பார்சல் கொடுக்கப்பட்ட உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.