Priyanka Hochumin February 08, 2023
திமுக அரசு ஆட்சியை பிடிக்கும் போது பல வாக்குறுதிகளை வெளியிட்டது. அவற்றுள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது "புதுமைப் பெண் திட்டம்". இது முற்றிலும் பெண்கள் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவான திட்டமாகும். இத்திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
Gowthami Subramani February 05, 2023
ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி மாதம் 1 ஆம் நாள் நடைபெறும். இதில், வருமான வரி, சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட தகவல்களைப் பற்றிய ஆலோசனைகள் நடைபெறும். மேலும், மக்களின் நலனுக்காக புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
Gowthami Subramani December 22, 2022
இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே இன்டர்நெட் பயணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. கிராமத்தின் நடுவே உள்ள சிறிய பெட்டிக் கடை முதல், நகரத்தில் உள்ள பெரிய மால் வரை ஆன்லைனில் இயங்கி வருகின்றன. இந்த பிஸியான சூழலில், மக்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒரு சில சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பிடப்பட்ட சான்றிதழ்கள் இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற சூழலில் உள்ளனர்.
Gowthami Subramani December 10, 2022
திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதியினருக்கு, திருமணப் பதிவு என்பது கட்டாயமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தம்பதியினர் எப்படி திருமணச் சான்றிதழைப் பெறலாம் என்பது குறித்து காண்போம். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ், திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி, விசா பெறுவது, பாஸ்போர்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது.
Priyanka Hochumin November 29, 2022
நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 1329.2 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதை நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டு முதல் 1-8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை நிறுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல கொடுக்கப்படும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்று கூறுகின்றனர்.
Nandhinipriya Ganeshan November 28, 2022
முந்தைய காலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் ஏராளம். உதாரணமாக குழந்தை கருத்தரிக்கப்படுவதற்கு முன்பே பாகுபாடு பார்க்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் குறைந்த விலை கருக்கலைப்பு தொழில்நுட்பமே. ஒருவேளை தப்பிதவறி அந்த குழந்தை பிறந்துவிட்டால் அதிர்ஷ்டம் தான். இப்படி, ஒரு பெண் குழந்தை பிறந்த உடனேயே மதவெறி, அநீதியை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த மாதிரியான நிலைமை மெல்ல மெல்ல மாறி தற்போது பெண் குழந்தைகளுக்கு சமத்துவம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் சமத்துவத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஒரு பெண் குழந்தை தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற இடையூறுகளை கருத்தில் கொண்டு, அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவும், வெற்றிபெறவும் அவர்களுக்கு சரியான வாய்ப்பும் கூடுதல் உதவும் வழங்கவே இந்திய அரசாங்கம் ஏராளமான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றில் சிறந்த 10 திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Gowthami Subramani November 24, 2022
வருங்காலத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு, நாம் நிகழ்காலத்தில் இருந்தே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுவாக, வாழ்நாளில் நாம் ஈட்டும் பணத்தை சேமிப்பு அல்லது முதலீடாகச் சேர்க்கலாம். அந்த வகையில், நாம் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து சேமிப்பதும் அவசியமாகும். இவ்வாறு பணத்தை முதலீடு செய்து சேமிப்பதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன. தபால் நிலையம், வங்கிகளில் பணத்தை முதலீடு செய்து சேமிப்பர்.
Priyanka Hochumin November 24, 2022
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 தொடர்பாக சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாட்டில் நிதி நிலை மோசமாக உள்ளதாகவும் அது சரி செய்யப்பட்ட உடன் மிக விரைவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் தக்க நேரத்தில் அறிவிப்பார்.
Gowthami Subramani November 21, 2022
பென்சன் பெறும் நபர்கள் அனைவரும் தங்களது ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் கீழ் பென்சன் பெறும் ஒவ்வொரு மூத்த குடிமக்களும், தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். அதாவது, பென்சன் வாங்குபவர்கள் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் என்ற ஜீவன் பிரமான பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக இருந்தது.
Gowthami Subramani November 12, 2022
மத்திய மற்றும் மாநில அரசு, பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தேசிய பென்சன் திட்டமானது மக்களுக்கு சிறந்த பலன்களைத் தருவதாக உள்ளது. தேசிய பென்சன் திட்டத்தை, பென்சன் ஒழுங்குமுறை ஆணையமாக விளங்கும் PFRFA நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மட்டுமல்ல. தனியார் ஊழியர்களும் தங்களது பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைந்து எப்படி முதலீடு செய்யலாம் என்பதையும், மாதந்தோறும் பென்சன் தொகை பெறும் முறைகளையும் பற்றிக் காண்போம்.