Nandhinipriya Ganeshan May 26, 2023
மற்ற வகை காப்பீடுகளை போலல்லாமல், இந்தியாவில் இரு சக்கர வாகன காப்பீடு வைத்திருப்பது சட்டப்பூர்வமாக கட்டாயம். அதாவது, மோட்டார் வாகனச் சட்டம் 1988ன் கீழ், அனைத்து இந்திய ஓட்டுநர்களுக்கும் மூன்றாம் தரப்பு இருசக்கர வாகனக் காப்பீடு அல்லது பைக் இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பைக் இன்சூரன்ஸ் என்பது உங்க பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், உங்களுடைய பைக்கிற்கும் பாதுகாப்பான ஒன்று. பைக்கை பொறுத்தவரை நாம் சரியாக ஓட்டினாலும் நமக்கு எதிரே வரும் நபர்கள் சரியாக ஓட்டுவார்களா? என்பது சந்தேகம் தான். அதனால் எப்போது எதுவேண்டாலும் நடக்கலாம். இந்த மாதிரியான சமயத்தில் எழும் நிதி பொறுப்புகளில் இருந்து பாதுகாக்கப்பதால், இன்சூரன்ஸ் எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்தவகையில், இந்தியாவில் பல இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவை அனைத்தும் ஒரே மாதிரியான காப்பீட்டு அம்சங்கள் மற்றும் கவரேஜ்களை வழங்குவது கிடையாது. எனவே, ஒவ்வொருவரும் சரியான காப்பீட்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். அதன்படி, இந்தியாவில் உள்ள சிறந்த பைக் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பட்டியலும் அவற்றின் திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளோம். இரு சக்கர வாகன காப்பீட்டு நிறுவனங்கள்: பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [Bajaj Allianz General Insurance Company Ltd] சோழமண்டலம் எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Cholamandalam MS General Insurance Company] Future ஜெனரலி இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி [Future Generali India Insurance Company] கோ டிஜிட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Go Digit General Insurance Company] இஃப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [ IFFCO Tokio General Insurance Company Ltd] கோடாக் மஹேந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் [Kotak Mahindra Life Insurance Company Ltd] லிபர்ட்டி ஜெனரல் இன்சூரன்ஸ் [Liberty General Insurance Ltd] தேசிய இன்சூரன்ஸ் லிமிடெட் [National Insurance Co. Ltd] நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் கம்பெனி [New India Assurance Co. Ltd] ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Oriental Insurance Co. Ltd] ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Reliance General Insurance Co. Ltd] எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [SBI General Insurance Co. Ltd] ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [Shriram General Insurance Co. Ltd] டாடா AIG ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [TATA AIG General Insurance Co. Ltd] யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கோ லிமிடெட் [United India Insurance Co. Ltd] ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் [Royal Sundaram General Insurance] பார்தி ஆக்ஷா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [Bharti AXA General Insurance Company] HDFC ERGO ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி [HDFC ERGO General Insurance Company]
Manoj Krishnamoorthi February 01, 2023
வேகமாக செல்லும் ரேஸ் கார் அல்லது சொகுசு கார்களில் இந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் குறைவாக இருக்கும். அதே வேளையில் தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் கார்களில் கிரவுண்ட் கிளியரன்ஸ் அதிகமாக இருக்கும். இந்த வித்தியாசம் எதற்கு? என்பதை யோசிக்கும் வேளையில் கிரவுண்ட் கிளியரன்ஸின் பயன்பாடு எதற்கு என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்று எழும் கேள்விக்கும் பதிலாக அமையும். மேலும் கிரவுண்ட் கிளியரன்ஸை அதிகப்படுத்துவதற்கான வழியையும் காண்போம்.
Manoj Krishnamoorthi January 20, 2023
கடந்த சில வருடஙகளாக டிராஃபிக் பிரச்சனை அதிகமாக தான் உள்ளது. பைக் மற்றும் கார்களின் அதிகரிப்பு இன்றைய நாளில் போக்குவரத்து நெரிசலை உருவாக்குகிறது. இதை சமாளிப்பதற்கான வழியை இந்த பதிவில் காண்போம்.
Manoj Krishnamoorthi January 03, 2023
டூவீலரோ அல்லது காரோ எதுவாக இருந்தாலும் இன்ஜின் பராமரிப்பு என்பது அத்தியாவசியம் ஆகும். நம்மில் பல பேருக்கு இன்ஜினை எப்படி பராமரிப்பது என்ற குழப்பம் உண்டாகும். இந்த பதிவில் கொடுத்திருக்கும் தகவலை ஃபாலோ பண்ணினால் இன்ஜின் பெரிய அளவு செலவு வைக்காது.
Manoj Krishnamoorthi January 02, 2023
உலகம் முழுவதும் இன்சூரன்ஸ் என்பது சாதாரணமான விஷயம் தான். நம் நாட்டில் நாம் அதிகமாக செய்யும் இன்சூரன்ஸ் எதுவென்றால் வாகனம் இன்சூரன்ஸ் ஆகும். இந்த வாகன இன்சூரன்ஸில் 3rd பார்டி இன்சூரன்ஸில் என்னென்ன கவர் ஆகும் என்பது பல முறை குழப்பமாக இருக்கும். இந்த குழப்பத்திற்கான தீர்வை எப்படி அறிந்து கொள்வது என்பதை பற்றி காண்போம்.
Manoj Krishnamoorthi December 28, 2022
கார் வாங்கலாம் என்றால் சிலரிடம் நாம் ஆலோசனை கேட்போம். சிலர் புதிய கார் என்பார்கள் சில யூஸ்டு கார் என்பார்கள். புதிய கார்கள் வாங்குவது என்றால் பெரியளவு தேடல் இருக்காது ஆனால் யூஸ்டு கார் வாங்குவது என்றால் தான் பிரச்சனை வரும். எப்படி வாங்குவது? என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்ற சந்தேகம் உண்டாகும். இதுபோன்ற கேள்விகள் உங்களுக்கும் உள்ளதா.. இதோ இந்த பதிவு உங்களான தீர்வு அளிக்கும்.
Manoj Krishnamoorthi December 26, 2022
சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது திடீரென கார் வெடிப்பது எல்லாம் அடிக்கடி நடக்குது. இந்த மாதிரியான பிரச்சனை வராமல் இருக்க , இதெல்லாம் செய்யாமல் இருந்தால் நம்ம பேட்டரி பிரச்சனை அளிக்காது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா..... இதோ இந்த டிப்ஸ் பின்பற்றினால் நம்ம வண்டியின் பேட்டரியில் எந்த பிரச்சனையும் வராது.
Manoj Krishnamoorthi December 19, 2022
நம் பல பேருக்கு கார் வாங்குவது ஸ்டேட்டஸ் விஷயம் என்பதை விட பல நாள் ஆசையாக தான் இருக்கும். பெரும்பாலும் நாம் நினைப்பது உண்டு கார் வாங்கும்போது நமக்கு விருப்பமான கலர்களை தேர்வு செய்கிறோம் என்றுதான், அது உண்மைதான் என்றாலும் இன்னும் சுவாரஸ்யமான தகவல் இந்த பதிவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
Manoj Krishnamoorthi December 16, 2022
நாம் எதற்காக ஓடுகிறோம் என்பதை யோசிக்க கூட நேரமில்லாமல் பறக்கும் அவசர உலகில் இருக்கிறோம். நம் அவசரத்திற்கு நாம் செல்லும் இடத்திற்கு கொண்டு செல்லும் கார் மற்றும் பைக் பற்றிய பதிவு ஆகும். இதன் சாவி இல்லை என்றால் வண்டியை இயக்குவது என்பது கடினமாகும். ஒருவேளை இருசக்கர வாகனம் என்றால் கூட தள்ளி சென்று பழுது பார்த்து கொள்ளலாம். ஆனால், காரின் சாவி கையில் என்றாலே பெரும்பாடாகும். காரின் சாவியை தொலைத்தால் கதையே வேறு, ஓருவேளை காரின் சாவியை காரின் உள்ளே வைத்து பூட்டி விட்டால் கார் லாக் ஆகிவிடும். அப்போ எழும் குழப்பத்திற்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.
Manoj Krishnamoorthi December 15, 2022
பயணம் செய்வது என்றாலே நம் மனதிற்குள் ஒரு குதூகலம் கூத்தாடும். நம் மனதில் சந்தோஷம் அதிகரிக்க காரணம் தனிப்பட்ட மனதையே சார்ந்தது, ஆனால் ஒரு சிலரால் கார், பஸ் போன்ற வாகனத்தில் பயணம் செய்தாலே வாந்தி எடுக்கும் பிரச்சன உண்டு. உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா..? இது ஏன் ஏற்படுகிறது என்று என்றாவது சிந்தித்திருப்பீர். அதற்கான காரணம் மற்றும் எப்படி தடுப்பது என்ற வழிமுறையையும் பார்ப்போம்.