Mon ,May 29, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57

விருதுநகர்

தாய்-சேய் அடுத்தடுத்து மரணம்.. அதிர்ச்சியில் உறவினர்கள்.. போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Sekar December 18, 2022

விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் மற்றும் அவரது வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சதுகிரி கோவிலுக்குச் செல்ல தடை - பக்தர்கள் ஏமாற்றம்! 

Kanimozhi December 05, 2022

கடந்த சில திதனங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த  பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

குழந்தைக்கு நாக்கிற்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை? மருத்துவமனை மீது புகார்.. விளக்கம் அளித்த மருத்துவர்..

Nandhinipriya Ganeshan November 24, 2022

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (25). இவருடைய மனைவி கார்த்திகா (23). இந்த தம்பதியினருக்கு கடந்த வருடம் அக்டோபர் 30 ஆம் தேதி சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு மூச்சு குழாயில் சுவாசிப்பு பிரச்சனை இருந்ததாக மதுரையில் ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கடந்த வருடம் நவம்பர் 2 ஆம் தேதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த விபரீதம்.. கதறி அழும் குடும்பத்தினர்..!

Gowthami Subramani October 25, 2022

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில், ஆரவாரம்பட்டி கம்பர் தெருவில் வசித்து வரும் தம்பதியினர் மணிகண்டன் – மாரீஸ்வரி. இவர்களுக்கு பரமேஸ்வரன் என்ற ஐந்து வயதுடைய மகனும், 1 1/3 வயதில், முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று மாலை நேரத்தில் மாரீஸ்வரி துணிகளைக் காயப் போடுவதற்காக மாடிக்குச் சென்றுள்ளார்.

விருதுநகரில் பவர் கட்...! எப்ப போகும்? எப்ப திரும்பி வரும்?

UDHAYA KUMAR October 03, 2022

விருதுநகரில் பவர் கட்...! எப்ப போகும்? எப்ப திரும்பி வரும்?

விருதுநகர் அருகே விபத்து! தாய் மகன் பலி...!

UDHAYA KUMAR September 25, 2022

விருதுநகர்: நெல்லை நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதியதில் தாய், மகன் உயிரிழந்துள்ளார். விபத்தில் தாய் முத்துலட்சுமி, மகன் மௌலி உயிரிழந்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியில் சோகம்.. மின்சாரம் தாக்கி பலியான பரிதாபம்!!

Sekar September 01, 2022

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புரத்தில் தேர்த்திருவிழா நடந்தது. ஊரின் முக்கிய தெருக்கள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட நிலையில், ராஜபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெரு வளைவில் மரத்தில் மோதி தேர் நின்றது.

ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதல்.. மாணவர்கள் பலர் காயம்.. ஓடோடி வந்த அமைச்சர்!!

Sekar August 29, 2022

விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 10 மாணவ மாணவியர் மற்றும் ஆட்டோ டிரைவர் காயமடைந்தனர். விருதுநகர் அருகே உள்ள துலுக்கன்பட்டி எனும் பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் உட்பட  10 மாணவர்கள் காலை டிரைவர் நாகராஜின் ஆட்டோவில் ஆவுடையாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆவுடையாபுரம் ரெயில்வே கேட் பகுதியில், எதிரே வந்த பட்டாசு ஆலை வேன் மீது எதிர்பாராத விதமாக ருக்கு நேர் மோதியதில் ஆட்டோவின் முன்பகுதி சேதமடைந்தது.  

அதிர்ச்சி.. அருப்புக்கோட்டையில்.. பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை!!

Sekar August 25, 2022

விருதுநகர் மாவட்டத்தில் பெண் ஒருவரை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாராத்தில் 18 வயது நிரம்பாத சிறுவன் ஒருவன் உட்பட ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண், தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக பஸ் ஸ்டாப்பில் நின்றுள்ளார். அப்போது அந்த பகுதி வழியாக காரில் வந்த பெண்ணுக்கு தெரிந்த ஒருவர், சம்பந்தப்பட்ட பெண்ணை ஊரில் விட்டுவிடுவதாக கூறி காரில் ஏற்றிச் சென்றுள்ளார். போகும் வழியில் காரை நிறுத்தி விட்டு, காருக்கு வெளியே நின்றுகொண்டு அந்த பெண்ணுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பைக் மற்றும் காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், திடீரென அந்த நபரை தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர். 

வீடுகளை சூழ்ந்த மழைநீர்....கால்வாய் வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி...!

Bala August 19, 2022

விருதுநகர் அருகே வீட்டை சுற்றி மழைநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.