Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
0.00sensex(0.00%)
நிஃப்டி22,055.70
0.00sensex(0.00%)
USD
81.57

இந்நாளில்

அனைத்து உள்ளங்களுக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் | Happy Onam 2023 Wishes in Tamil

Priyanka Hochumin August 28, 2023

கேரளாவில் 10 நாள் கோலாகலமாக பண்டிகையாக கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகை. இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மலையாள நாட்காட்டியின் படி, சிங்கம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் எல்லா ஆண்டும் தனது அன்பான மக்களை பார்க்க இந்த நேரத்தில் பூமிக்கு வருகை தரும் அரக்க மன்னன் மகாபலியை வரவேற்கும் விதமாக இப்பண்டிகை நடைபெறுகிறது. இந்நன்னாளில் மக்கள் அனைவரும் தங்களின் உற்றார் உறவினர்களுடன் ஆனந்தமாக கொண்டாடப்படுகிறது. எனவே, கேரள மக்கள் மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் மக்கள் பீதி - வனப்பகுதிக்கு விரட்டியடித்த வனத்துறை!

selvarani July 22, 2023

கோவையில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையை பார்த்து பொதுமக்கள் பீதியடைந்தனர். வனத்துறையினர் வந்து அடர்ந்த காட்டுக்குள் அந்த யானையை விரட்டிய பிறகு அவர்கள் நிம்மதியடைந்தனர். மருதமலை வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலா வந்தது. இதனையடுத்து அதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் யானை அதே பகுதியில் சுற்றி வலம் வந்தது. இரவு கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் ஊருக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானை ஊருக்குள் வந்ததை அடுத்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஊருக்குள் மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். பின்னர், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் யானையை அடர் வனப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி அடிவாரத்திற்கு விரட்டியடித்தனர். தற்போது ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. அந்த காட்சிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோவாக பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஹெல்மெட் போட்டு வந்தால் ஒரு கிலோ தக்காளி இலவசம் - போக்குவரத்து போலீசார் நூதன விழிப்புணர்வு!

selvarani July 21, 2023

இருசக்கர வாகனத்தில் வரும் இரண்டு பேருமே ஹெல்மெட் அணிந்து வந்தால் ஒரு வாரத்திற்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் அல்லது ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதியான மறைமலைநகர் அருகே அமைந்துள்ள பிரபல தனியார் பள்ளியில், தாம்பரம் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட மறைமலைநகர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி அவர்கள் சக காவலர்களுடன் பள்ளிக்குச் சென்று ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன்னிலையில் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நூதன விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனசேகர், சிவப்பு தங்கரதக் கொடையாளர் அமைப்பின் நிறுவனர் முருகன், அன்னபூர்ணா கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் சரவணன், சமூக ஆர்வலர் சுஜித், பாக்கியராஜ், திருக்கச்சூர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் உள்ளிட்டார் கலந்து கொண்டு ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை பெற்றோர்கள் முன் எடுத்து கூறினர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகேஷ் காந்தி பேசுகையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஹெல்மெட் அணியாமல் பயணம் மேற்கொள்வதால் இந்த விபத்து ஏற்படுகிறது. நீங்கள் இருசக்கர வாகனத்தில் இருவர் வரும்போது இருவருமே தலைக்கவசம் அணிந்து வந்தால் அடுத்த ஒரு வாரத்திற்கு 1 கிலோ தக்காளியை இலவசமாக தரப்படும். அல்லது ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும், என்றார்.

முனீஸ்வரன் கோவிலில் மூலவர் கல் சிலை கடத்தல் - கடத்தல் கும்பலுக்கு காவல்துறை வலைவீச்சு!

selvarani July 21, 2023

குடியாத்தம் அருகே முனீஸ்வரன் கோவிலில் இருந்த மூலவர் கல் சிலையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகாமையில் முனீஸ்வரன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த முனீஸ்வரர் மூலவர் சிலையை திருடி சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர். அவ்வழியாக சென்ற பக்தர்கள் மூலவர் சிலை இல்லாததையும் சிலைகளை சேதப்படுத்தியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பரதராமி காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். ஊர் பொதுமக்களிடம் புகார் பெற்றுக் கொண்டு சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்யும்படி பரதராமி போலீசாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் உள்ள முனிஸ்வரன் கோவிலின் சிலைகளை உடைத்து சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயானத்தில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய முடியும்..! - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

selvarani July 21, 2023

மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும். வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடலை புதைப்பதற்காக தனியாக மாயனம் உள்ள நிலையில், ஜெகதீஷ்வரி என்பவர் உயிரிழந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்தாகவும், புதைக்கப்பட்ட அந்த உடலை தோண்டி எடுத்து, மயானத்திலேயே புதைக்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி, பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது எனக் கூறி, உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஷ்வரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கிராமத்தில் மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதி இருந்த போதும், கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின் கீழ் மயானமாக அறிவிக்கப்படாத பகுதியில் சடலங்களை புதைக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்ய, வழக்கை முழு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் முகமது சபீக் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய முழுவு அமர்வு, தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து விதிகளின்படி, மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தான் சடலங்களை அடக்கம் செய்ய வேண்டும்., இந்த விதிகளுக்கு முரணாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து, மயானத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என விளக்கம் அளித்துள்ளது. மேலும், வேறு எந்த பகுதியிலும் அடக்கம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

சிற்ப கலைக்கூடத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருட்டு போலீசார் விசாரணை

selvarani July 21, 2023

மேலூர் அருகே சிற்பக் கலைக்கூடம் செயல்படும் கட்டிடத்தில் பூட்டை உடைத்து ஒரு லட்சம் மதிப்பிலான உபகரணங்களை திருடிச்சென்றது யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தபுளியம்பட்டியில் செல்வம் என்பவர் தனது மகன் ராம்குமார் உடன் இணைந்து அப்பகுதியில் கடந்த இரண்டு மாதமாக சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல சிற்பக் கலைக்கூடம் செயல்படும் கட்டிடத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குசென்றுள்ளார். இன்று கலைக்கூடத்தை திறக்க வரும்போது, கட்டிடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தப்போது, கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சிற்பக் கலைக்கூடம் செய்ய தேவையான சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கட்டிங் மெஷின் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள், உளி, சுத்தியல் உள்ளிட்ட சாமான்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் செல்வம் உடனடியாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு, குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை - முட்புதரில் வைத்து சீரழித்த இளைஞர் கைது.

selvarani July 20, 2023

சேலத்தில் இரவு நேரத்தில் கடைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இழுத்துச் சென்று முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாட்டம் கருப்பூர் அருகே வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் நேற்று இரவு சுமார் 9:00 மணி அளவில் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற பெண் வரவில்லை. அவரது சகோதரர் தேடி உள்ளார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள முட்புதரில் இருந்து தனது சகோதரி வெளியே வந்ததை பார்த்துள்ளார். அங்கு மறைந்திருந்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டார். அங்கு சென்று பார்த்தபோது காயமடைந்த நிலையில் கிடந்த சகோதரியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதுகுறித்து கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தல் ஈடுபட்டாரா? என அக்கம் பக்கத்தில் இருந்து விசாரித்தபோது அவர் ரத்த கரையுடன் இருந்ததாக அங்கு உள்ளவர்கள் கருப்பூர் போலீசாரிடம் சொன்னதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் உதவி ஆய்வாளர் மேனகா ஆகியோர் சம்பவம் குறித்து அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனநலம்பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனம், வேன் நேருக்கு நேர் மோதல் - இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி

selvarani July 20, 2023

நெல்லை மாவட்டம் மானூர் அருகே இருசக்கர வாகனமும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராம் மற்றும் உச்சிமாகாளி. இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கல்லூரி முடிந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் ஜெயராம் மற்றும் உச்சிமாகாளி ஆகிய இருவரும் சங்கரன்கோவில் சாலை வழியாக அவர்களது ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அழகிய பாண்டிபுரம் அருகே இருசக்கர வாகனம் வரும்போது எதிரே வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் விபத்து நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டதுடன் உயிரிழந்த இருவரின் உடலையும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் இருவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் புகுந்த கட்டு விரியன் பாம்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு!

selvarani July 20, 2023

நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் கட்டு விரியன் பாம்பு புகுந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசுதுறை கட்டிடங்கள் உள்ளன. பல இடங்களில் அலுவலகங்கள் செயல்படாமல் பூட்டப்பட்டும், புதர்கள் மண்டியும் காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது அலுவலகங்களுக்குள் பாம்புகள் படை எடுப்பது, ஆட்சியர் அலுவலக வாளாகத்தில் உலா வருவதும் உண்டு. தீயணைப்பு மற்றும் மீட்பு படையினரால் அடிக்கடி பாம்புகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவது வழக்கம். இந்த நிலையில் இன்று அரசு ஊழியர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை ஆட்சியர் அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டு பணிகளை முடித்துவிட்டு எடுக்கும்போது வாகனத்தில் பாம்பு ஏறி இருப்பதை கண்டு அந்தப் பாம்பை விரட்ட முயன்றார். ஆனால் பாம்பு அவரது வாகனத்தில் செயின் ப்ரேக்கெட்டில் உள்ளே சென்றது. இதனைத் தொடர்ந்து அந்த பாம்பை விரட்ட முயலும் போது பாம்பு இருசக்கர வாகனத்தில் உள்ள செயினில் சிக்கி உயிரிழந்தது. பின்னர் அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறிய பாம்பை அப்புறப்படுத்தினர். அந்த பாம்பு கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு என கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டத்தை மீறினால் குண்டாஸ் பாயும்..! - மதுபான கடை உரிமையாளர்ளுக்கு குமரி டிஎஸ்பி எச்சரிக்கை

selvarani July 20, 2023

காவல் துறைக்கு நிறைவான ஊதியத்தை அரசு கொடுப்பதால், ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்றும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி சரக டிஎஸ்பி மேஷ்குமார் எச்சரித்துள்ளார். சர்வதேச சுற்றுலா ஸ்தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி எஸ் பி மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். ​​​​​​​அப்போது டிஎஸ்பி மகேஷ் குமார் பேசுகையில், அரசு நிர்ணயித்துள்ள நேரத்ததில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது.சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன். மீறினால் அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை, என்றார்.