Wed ,May 15, 2024

சென்செக்ஸ் 72,987.03
-117.58sensex(-0.16%)
நிஃப்டி22,200.55
-17.30sensex(-0.08%)
USD
81.57

பைக் ரிவியூஸ்

கவாஸாகி நிஞ்ஜா ZX-4R....ரூ.8.49 லட்சத்திற்கு...அப்படி என்ன இருக்கு? | Kawasaki Ninja ZX-4R Launch Date

Priyanka Hochumin September 12, 2023

இந்தியாவில் சும்மா வேற லெவல் அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது கவாஸாகி நிஞ்ஜா ZX-4R. சுமார் ரூ.8.49 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக் வெர்சிஸ் 650 அட்வென்ச்சர் டூரரை விட காஸ்டிலியாம். அப்படி கவாஸாகி பைக்கில் எந்த மாறியான அம்சங்கள் இருப்பதால் இவ்ளோ விலை என்று தெரிந்துகொள்ளலாம். இது பேஸ், ஹையர் ஸ்பெக் SE மற்றும் ZX-4RR என மொத்தம் மூன்று வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கவாஸாகி நிஞ்ஜா ZX-4R இன் பேஸ் வேரியண்ட் மட்டும் அறிமுகமாகியுள்ளது.

எல்லாமே டாப் பிராண்ட் தான்....ஆனா இதுல எது டாப் தெரியுமா? | TVS X vs Ola S1 Pro vs Ather 450X Comparison in Tamil

Priyanka Hochumin August 28, 2023

TVS நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிரீமியம் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் ஸ்கூட்டர் போலவே மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஓலா எஸ் 1 ப்ரோ மற்றும் ஏதெர் 450 எக்ஸ் ஸ்கூட்டர்களும் சமீபத்தில் வெளியானது. நம்முடைய பட்ஜெட்டிற்கு ஏற்ப இருக்கும் இந்த மூன்று மாடல் ஸ்கூட்டர்களுள் எது அம்சங்களில் சிறந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தாறுமாறான அம்சங்களுடன் 2 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் கவாஸாகி.. | Kawasaki Electric Bike Launch

Nandhinipriya Ganeshan August 25, 2023

இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அந்தவகையில், பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான கவாஸாகியும் தனது நின்ஜா இ-1 மற்றும் இசட் இ-1 என்ற இரண்டு புதிய எலக்ட்ரிக் பைக்குகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. கவாஸாகியின் இந்த இரண்டு மாடல்களுமே அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தற்போதைக்கு இந்த மாடல்களின் விற்பனைக்கு சர்வதேச சந்தையில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இரண்டு மாடல்களிலும் 9 கிலோவாட் மோட்டார் வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களின் பாடிவொர்க்கானது, அந்தந்த பெட்ரோல் பங்குகளை பொறுத்து மாறுபடும். அந்தவகையில், நின்ஜா இ-1 மாடலில் கூர்மையான முன்புறம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரன்ட் வின்ட்-ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இசட் இ-1 மாடல் அளவில் சற்று சிறியதாக காட்சியளிக்கிறது. இத்துடன் இரண்டு மாடல்களிலும் டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், ஸ்ப்லிட் சீட்கள், TFT ஸ்கிரீன், அலாய் வீல்கள், இ-பூஸ்ட் ஆப்ஷன் மற்றும் மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் தோராயமாக 135 கிலோ மற்றும் 140 கிலோ எடை கொண்டவை. இதையெல்லாம் விட, மிகவும் சுவாரஸ்யமானது என்னவென்றால், அதிக வரம்பிற்காக இரண்டாவது பேட்டரி பேக்கை வைத்திருப்பதுதான். இந்த எலெக்ட்ரிக் கவாஸாகிகள் இந்தியாவிற்கு வருமா இல்லையா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஏதெர் 450 எஸ் Vs ஏதெர் 450 எக்ஸ் எது பெஸ்ட்-னு பாக்கலாம் | Ather 450S vs Ather 450X Comparison

Priyanka Hochumin August 22, 2023

குறைந்த விலையில் தரமான எலெட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்வதில் பேர் போன நிறுவனம் ஏதெர். பட்ஜெடிற்கு ஏற்ப நடுத்தர மக்களுக்கு சுமூகமான பயணத்தை அளிக்க பல தயாரிப்புகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஏதெர் 450S vs 450X 2.9kwh vs 450X ஸ்கூட்டர் மாடலுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களைப் பாப்போம்.

ஓலா எஸ்1 ப்ரோ மாடலுக்கும், எஸ்1 எக்ஸ் மாடலுக்கும் இதுதான் வித்தியாசம்.. எது வாங்குவீங்க? | Ola S1 Pro vs Ola S1 X Comparison

Nandhinipriya Ganeshan August 21, 2023

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வரும் தயாரிப்பு நிறுவனம் ஓலா ஆக தான் இருக்கும். காரணம் குறைந்த காலக்கட்டத்தில் சிறந்த தயாரிப்புகளை வெளியிட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ஓலா நிறுவனம் பல மாடல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சிறந்த மாடல்களான Ola S1 Pro (gen1) மற்றும் Ola S1 X மாடல்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

கீவே நிறுவனத்தின் புதிய 300cc அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர்.. இதுல இப்டியொரு வசதி இருக்கா? | Keeway Vieste 300 XDV Adventure Scooter

Nandhinipriya Ganeshan August 16, 2023

சீனாவுக்கு சொந்தமான ஹங்கேரி நாட்டை சேர்ந்த இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கீவே (Keeway) அதன் புதிய 300சிசி அட்வென்ச்சர் வகை ஸ்கூட்டரான வீஸ்டே XDV 300ஐ தற்போது வெளிநாடுகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வீஸ்டே எக்ஸ்டிவி 300 (XDV 300) அட்வென்ச்சர் ஸ்கூட்டரானது, கீவே நிறுவனம் விற்பனை செய்துவரும் வீஸ்டே 300 (Vieste 300) ஸ்கூட்டரை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது. வீஸ்டே 300 என்பது ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனைவிட அதிக பிரீமியம் மற்றும் அட்வென்சர் பயணங்களுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட வாகனமாகவே தற்போது இந்த புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி-யை கீவே மோட்டார் உருவாக்கி இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் அட்வென்சர் ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் முன்பக்கம் ஒரு பெரிய அப்ரோன், பிளாஸ்டிக் கிளாடிங் வசதி, அட்வென்ச்சர் செல்ல தேவையான மிகப்பெரிய விண்ட் ஸ்க்ரீன், உயரமான அகலமான ஹாண்டில் பார் வசதி, சிங்கள் பீஸ் சீட் போன்றவை உள்ளது. எஞ்ஜினை பொறுத்த வரை, 278 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சினால் 18.4 பிஎச்பி பவரையும், 22 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும். இத்துடன், சிவிடி கியர்பாக்ஸ் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இதில் ஃபுல் LED லைட்டிங், LCD கிளஸ்டர் வசதி, சிங்கள் ஸ்டெப் சாடல், கிராப் ரைல், ஆன்டி ஸ்கிட் ஸ்டீல் பிளேட் வசதிகள் உள்ளன. தோற்றத்தின் அடிப்படையிலும் மிகவும் முரட்டுத் தனமான அட்வென்ச்சர் ஸ்கூட்டர் போன்றே தோற்றம் தருகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, ஸ்கூட்டரின் முன்பக்கம் பிரீமியம் KYB USD போர்க், KYB டூயல் ஷாக் வசதி, 13 இன்ச் வீல், அகலமான டயர்கள், 240mm முன்பக்க டிஸ்க் பிரேக், 220mm பின்பக்க டிஸ்க் பிரேக் வசதிகள் உள்ளன. வெள்ளை மற்றும் நீலம் என இரு விதமான நிறங்களில் புதிய வீஸ்டே 300 எக்ஸ்டிவி விற்பனைக்குக் கிடைக்கும். வெளிநாடுகளில் மட்டுமே விற்பனையில் உள்ள இந்த ஸ்கூட்டர் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அறிமுகப்படுத்தினால் அதன் விலையானது ரூ.3.25 லட்சம் வரையில் இருக்கும். ஏனென்றால், இது ஒரு ப்ரீமியம் மாடல்.

மிக குறைந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்.. முன்னாடியே ஆர்டர் போட்டால் செம்ம ஆஃபர் இருக்கு.. | Ola S1 X Electric Scooter

Nandhinipriya Ganeshan August 16, 2023

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் மூலம் மாறுபட்ட கருத்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஓலா எஸ்1' என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் தனது எலக்ட்ரிக் பயணத்தை தொடங்கிய ஓலா நிறுவனம், ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) போன்ற பல தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் சமீபத்தில் தான் துவங்கப்பட்டன. ரூ.1.10 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்1 ஏர் தான் ஓலா நிறுவனத்தின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. இதனாலேயே எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேலே கூறிய இரண்டு மாடல்களை காட்டிலும் மிக குறைந்த விலையில் ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X) என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஓலா எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றி முழுமையான விபரங்களை இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஓலா எஸ்1 எக்ஸ் விவரக்குறிப்புகள்: இந்த புதிய எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டாரனது, S1 X (2kWh), S1 X (3kWh) மற்றும் S1 X+ என்ற மூன்று வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மூன்று வேரியண்ட்களிலும் 6kW உச்ச ஆற்றலை வழங்கும் ஹப் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை மாடலின் அதிகபட்ச வேகம் 85kmph ஆகவும், S1 X (3kWh) மற்றும் S1 X+க்கு 90kmph ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்ட S1 X மற்றும் S1 X+ க்கு தோராயமாக 5.5 வினாடிகளும், 2kWh வேரியண்டிற்கு 7.9 வினாடிகளும் ஆகும். மேலும், இந்த மூன்று வேரியண்ட்களுமே ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர்கள் வரை செல்லும். ஹோம் சார்ஜரைப் பயன்படுத்தி, மூன்று வேரியண்ட்களிலுமே பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 7.4 மணிநேரம் ஆகும். S1 X மற்றும் S1 X+ 500W போர்ட்டபிள் சார்ஜருடனும், 2kWh வேரியண்ட் 350W சார்ஜருடனும் வருகிறது. ஓலா எஸ்1 எக்ஸ் அம்சங்கள்: Ola S1 X இன் முக்கிய அம்சங்களில் பல்வேறு ரிவர்ஸ் மோட், சைட் ஸ்டாண்ட் அலர்ட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு மற்றும் இரட்டை LED புரொஜெக்டர்கள் ஆகியவை அடங்கும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியண்ட்டின் அடிப்படையில் இந்த அம்சங்கள் மாறுபடலாம். இன்னும் கூடுதலாக இதில் எக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்ற மூன்று வகையான ரைடிங் மோட் வசதிகளும் உள்ளன. ஓலா எஸ்1 எக்ஸ் விலை: S1X (2kWh) வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.79,999 ஆகவும், S1X (3kWh) மற்றும் S1 X+ மாடல்களின் ஆரம்ப விலைகள் முறையே ரூ.89,999 மற்றும் ரூ.99,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த விலைகள் ஆகஸ்ட் 21, 2023 வரை மட்டுமே. ஆகஸ்ட் 21க்குப் பிறகு, 2kWh வேரியண்ட்டிற்கு ரூ.89,999 ஆகவும், 3kWh வேரியண்ட்டிற்கு ரூ.99,999 ஆகவும், S1X+ வேரியண்ட்டிற்கு ரூ.1,09,999 ஆகவும் (எக்ஸ்-ஷோரூம்) விலை உயர்த்தப்படும். S1X (3kWh) மற்றும் S1X (2kWh) வேரியண்டிற்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது மற்றும் முன்பதிவு கட்டணம் ரூ.999 ஆகும். வண்ண விருப்பங்களை பொறுத்தவரை, ரெட் வெலாசிட்டி, மிட்நைட், ஃபன்எம்கே, ஸ்டெல்லர், வோக், பொர்செலைன் ஒயிட் மற்றும் லிக்கிவிட் சில்வர் என ஏழு வகையான வண்ண விருப்பங்கள் உள்ளன.

தனித்துவமான அம்சங்களுடன் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 விலை எவ்வளவு? | Harley Davidson X440 Price

Nandhinipriya Ganeshan August 10, 2023

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 என்பது 3 வேரியண்ட்களில் 4 வகை வண்ணத்தேர்வுகளில் கிடைக்கும் க்ரூஸர் பைக் ஆகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான ப்ரீயம் பைக்கான ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இதில் 440சிசி ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 6,000 rmp இல் 27 bhp பவரையும், 4,000 rmp இல் 38 nm டார்க்கையும் உருவாக்கும். இது 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ள. முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 ஆன்டி-லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டத்துடன் வருகிறது. சுமார் எடை 190.5 கிலோ கொண்டுள்ள இந்த பைக்கில் 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் உள்ளது. மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ள இந்த பைக்கின் பேசிக் மாடல் (டெனிம்) வயர்-ஸ்போக் வீல்களுடன் வருகிறது. பின்னர், மிட் வேரியண்ட் (விவிட்) அலாய் வீல்கள் மற்றும் டூயல்-டோன் ஃபினிஷுடன் வருகிறது. டாப்-வேரியண்ட் (எஸ்), டயமண்ட்-கட் அலாய் வீல்களுடன் வருகிறது. அம்சங்களை பொறுத்தவரை, Harley Davidson X440 ஆனது, ஹார்லி-டேவிட்சன் பிராண்டிங் கொண்ட வட்டமான ஹெட்லைட், LED லைட்டிங், மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான USB போர்ட், ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஓடோமீட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர், ப்ளூடூத் இணைப்பு மற்றும் சைட்-ஸ்டாண்ட் அலர்ட் ஆகியவற்றை காட்டும் 3.5-இன்ச் TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விலையை பொறுத்தவரையில் பேசிக் வேரியண்ட் டெனிம் (Denim) ரூ.2,39,500 க்கும், மிட் வேரியண்ட் விவிட் (Vivid) ரூ.2,59,500 க்கும், டாப் வேரியண்ட் எஸ் (S) ரூ.2,79,500 க்கும் வாங்க கிடைக்கிறது. லிட்டருக்கு 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும் இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ்400, மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

விலை கூடுதலாக இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டரும் இதுவே.. அப்படியென்ன இதுல சிறப்பு? | Ola Electric S1 Pro Price 2023 in India

Nandhinipriya Ganeshan August 08, 2023

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் மூலம் மாறுபட்ட கருத்துக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு 'ஓலா எஸ்1' என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் தனது எலக்ட்ரிக் பயணத்தை தொடங்கிய ஓலா நிறுவனம், ஓலா எஸ்1 ப்ரோ, ஓலா எஸ்1 ஏர் போன்ற பல தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பயன்பாடுகளை தன்வசம் கொண்டு வந்துள்ளது. அந்தவகையில், ஓலா நிறுவனத்தின் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரீமியம் மாடலான ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றி முழுமையாக இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஓலா எஸ்1 ப்ரோ 2023 விவரக்குறிப்புகள்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டாராக ஓலா எஸ்1 ப்ரோ இருந்து வருகிறது. நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகன மாடலும் இதுவே ஆகும். நேர்த்தியான வடிவமைப்பு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்டுள்ள ஓலா எஸ்1 ப்ரோ ஓர் வாட்டர் ப்ரூஃப் வாகனம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் இந்த ஸ்கூட்டரானது போர்சிலைன் ஒயிட் (Porcelain White), ஆந்த்ராசைட் கிரே, கோரல் கிளாம், ஜெருவா, ஜெட் பிளாக், காக்கி, லிக்விட் சில்வர், மார்ஷ்மெல்லோ, மேட் பிளாக், மிட்நைட் ப்ளூ, மில்லினியல் பிங்க், நியோ மிண்ட் (Neo Mint) போன்ற 12 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த எஸ்1 ப்ரோவில் உள்ள மிட் டிரைவ் ஐபிஎம் மின்சார மோட்டார் 8.5kW அதிகபட்ச ஆற்றலையும், 58Nm உச்ச முறுக்குவிசையையும் வழங்கும் வகையில் டியூன் செய்யப்பட்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் ஸ்கூட்டர் 115kmph வேகத்தில் 181km வரை பயணம் செய்ய முடியும். மேலும், 3.97kWh பேட்டரி பேக் 18 நிமிடங்களில் 75 கிமீ தூரம் செல்லும் அளவிற்கு வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதுவே, முழுமையாக சார்ஜ் செய்வதற்கு ஆறரை மணி நேரம் ஆகும். மேலும், இந்த வாகனத்தால் வெறும் 2.9 செகண்டுகளிலேயே 0 - 40 கிமீ வேகத்தை எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓலா எஸ்1 ப்ரோ 2023 அம்சங்கள்: அம்சங்களை பொருத்தவரையில், முன்புறத்தில் ட்வின்-பாட் ஹெட்லைட், ஏப்ரனில் பொருத்தப்பட்ட ஸ்லீக் எல்இடி இண்டிகேட்டர்கள், பாடி-கலர் முன் ஃபெண்டர், வளைந்த பக்க பேனல்கள், நேர்த்தியான எல்இடி டெயில்லைட், பின்புறத்தில் வெளிப்புற சார்ஜிங் போர்ட் மற்றும் ஒரு ஸ்பிலிட்-ஸ்டைல் ​​பிலியன் கிராப்ரைல் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஸ்கூட்டரின் இருக்கைக்கு கீழ் 36 லிட்டர் சேமிப்பு இடம் உள்ளது. இதில், இரண்டு ஹெல்மெட்களை வைத்துக்கொள்ளலாம். எஸ்1 ப்ரோ, ப்ராக்ஸிமிட்டி லாக்/அன்லாக், ரிமோட் பூட் லாக், கால் அலர்ட், மெசேஜ் அலர்ட், இன்ஃபோடெயின்மென்ட், சைட்-ஸ்டாண்ட் அலர்ட், ஆன்டி-தெஃப்ட் அலர்ட், ஜியோ-ஃபென்சிங் (geo-fencing), வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், ஆன்போர்டு நேவிகேஷன், லிம்ப் ஹோம் மோட் (limp home mode), ரிவர்ஸ் மோட், கெட்-ஹோம் மோட் (get-home mode), டேக்-மீ-ஹோம் லைட்டுகள், எச்எம்ஐ மூட்ஸ் கொண்ட சவுண்ட், எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் லாக், எச்எம்ஐ பிரைட்னஸ் அட்ஜஸ்டர், வெல்கம் ஸ்கிரீன், ஓடிஏ அப்டேட்ஸ், மேனுவல் எஸ்ஓஎஸ் மற்றும் ஃபைன்ட் மை ஸ்கூட்டர் ஆப்ஷன் (find my scooter) போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான அதிநவீன தொழிநுட்ப செயல்பாடுகளையும் கொண்டுள்ளது. இத்துடன் ஹில்-ஹோல்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட்; நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என்ற மூன்று ரைடிங் மோட் வசதியும் உள்ளது. முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன், OLA S1 Pro இரண்டு சக்கரங்களின் ஒருங்கிணைந்த பிரேக்கிங் அமைப்புடன் வருகிறது. விலை பொறுத்துவரை, இந்தியாவில் எஸ்1 ப்ரோவின் ஆரம்ப விலை ரூ.1.4 லட்சம் (On-Road Price) ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் தேடுகிறீர்களானால், Ola Electric S1 Pro நிச்சயமாக முதலிடத்தில் இருக்கும்.

குறைந்த விலையில் ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சூப்பர் அம்சங்கள்! | Ather 450S Electric Scooter Full Specifications

Nandhinipriya Ganeshan July 12, 2023

ஏதர் எனர்ஜி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறைந்த விலையை கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும். ஏதர் 450எஸ் பற்றிய கூடுதல் விவரங்களை பார்க்கலாம். பெங்களூருவை தளமாக கொண்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான 'ஏதர் எனர்ஜி', 2018 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் தொடுதிரை கன்சோலை அறிமுகப்படுத்திய முதல் பெரிய நிறுவனம் ஆகும். இதுவரை நிறுவனம் பல விதமான ப்ரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.  விலை & முன்பதிவு: இந்த நிலையில், தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏதர் 450எஸ் ஸ்கூட்டரை வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா முழுவதும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்கூட்டரின் ஸ்பெஷாலிட்டியே அதன் விலை தான். நிறுவனத்தின் தற்போதைய பிரபலமான மாடலான 450எக்ஸ் ஸ்கூட்டரை போலவே வெளியாக உள்ள இந்த புதிய ஏதர் 450எஸ் ஸ்கூடரின் விலை ரூ.1.29 லட்சம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் விற்பனை அடுத்த மாதம் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. பேட்டரி: நாட்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள 125சிசி பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட, இந்த புதிய இ-ஸ்கூட்டர் ஒப்பிடக்கூடிய திறன் மற்றும் சிறந்த சவாரி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஏதர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது ஒரு முழுமையான சார்ஜில் 115 km (IDC) உச்ச வரம்பை வழங்கும் சிறிய 3kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது 8.58 பிஹெச்பி பவரையும், 26 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேலும், இதன் டாப் ஸ்பீடு என்று பார்த்தால், மணிக்கு 90 கிமீ வேகத்தை எட்டும் என்று நிறுவனம் கூறுகிறது. கூடுதல் அம்சம்: விலை குறைவாக இருக்கிறது என்றால் தொழில்நுட்பத்தில் சில மாறுபாடுகள் இருக்கும் அல்லவா! ஆம், 450எக்ஸ் மாடலில் காணப்படும் தொடுதிரை அலகுக்கு பதிலாக, இந்த புதிய 450எஸ் மாடலில் LCD இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலை கொண்டிருக்கும். இது ஸ்மார்ட்போனை போன்ற தொடு திறன் இல்லாமல் இருந்தாலும், ஸ்கூட்டர் அதே 7-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 4G LTE இணைப்பு, வழிசெலுத்தல் (navigation), புளூடூத் இணைப்பு மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வரவுள்ளது. வடிவமைப்பு: இது தவிர, 450S இல் வடிவமைப்பு மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இது தற்போதைய மாடலின் அதே கூர்மையான, கச்சிதமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும். முன் ஃபோர்க்குகள், பின்புற மோனோஷாக் மற்றும் பெல்ட் டிரைவ் கொண்ட முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக் ஆகியவை மாறாமல் இருக்கலாம். அறிமுகப்படுத்தப்பட்டதும், ஏத்தர் 450S ஆனது Ola S1, TVS iQube S, Bajaj Chetak. Ampere Primus மற்றும் அதே பிரிவில் உள்ள பிற இ-ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருக்கும்.