Nandhinipriya Ganeshan March 23, 2023
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்காக குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்படுகிறது. இதில் அரசுப் பணிகளுக்கான பணியிடங்கள் 7,301 மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் 81 என மொத்தம் 7,382 காலி இடங்களை நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்து, சுமார் 15 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வருடம் மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கையை 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தப்பட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி, விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist) பணியிடங்கள் எண்ணிக்கை 1,024 இருந்து 1176 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதால், தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2023 ஆம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதற்கான தேர்வு 2024 பிப்ரவரியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Nandhinipriya Ganeshan March 16, 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV) ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு கடந்தாண்டு ஜூலை 24ம் தேதி நடைபெற்றது. தற்கான முடிவுகள் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிப்ரவரியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது மீண்டும் இந்த மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான தேதியை வாரியம் இன்னும் அறிவிக்கவில்லை. எனவே இந்தத் தேர்வில் கலந்துகொண்டு முடிவு அறிவிப்பை எதிர்பார்க்கும் விண்ணப்பதாரர்கள் முடிவுக்காக காத்திருங்கள். TN குரூப் 4 முடிவை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியீட்டுத் தேதிக்குப் பிறகு ஆன்லைனில் அணுகலாம். சரியான உள்நுழைவு விவரங்களுடன் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். குரூப் 4 ரிசல்ட் 2023 பதிவிறக்கம் செய்வது எப்படி? முதலில், விண்ணப்பதாரர்கள் TNPSC இன் www.tnpsc.gov.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். பிறகு TNPSC குரூப் 4 ரிசல்ட் டவுன்லோட் லிங்க் 2023ஐப் பார்க்கவும். இணைப்பைக் கிளிக் செய்து, உள்நுழைவு சாளரம் திறக்கும் வரை காத்திருக்கவும். இப்போது கொடுக்கப்பட்ட பிரிவுகளில் செல்லுபடியாகும் உள்நுழைவு (login) தேவையானவற்றை உள்ளிடவும். அதன் பிறகு டவுன்லோட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது TNPSC குரூப் 4 முடிவுகள் 2023 திரையில் தோன்றும். முடிவு விவரங்களைச் சரிபார்த்து, பதிவிறக்கம் என்பதைக் கிளிக் செய்க. அவ்வளவு இதை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Nandhinipriya Ganeshan March 15, 2023
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராய கல்லூரியில் TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 6 மாதங்கள் நடைபெற உள்ளன. எனவே, TNPSC, IBPS, SSC, RRB போன்ற போட்டி தேர்வுக்கு தயாராகும் தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்கள் இலவச பயிற்சி பெற இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். இது தொடர்பான வெளியியப்பட்டுள்ள செய்தி குறிப்பில், TNPSC மற்றும் IBPS, SSC, RRB ஆகிய போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தழிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும் மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் 300 இடங்களுக்கும் பயிற்சிகல் வழங்கப்படுகிறது. தற்போது, மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு, புதிதாக இணையவழி மூலம் விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் இல்லை.
Nandhinipriya Ganeshan March 09, 2023
தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் வரைவாளர் போன்ற அரசு பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி 7301 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவடைந்து தற்போது 7 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை தேர்வின் முடிவு வெளியிடப்படவில்லை. இது குறித்து தேர்வர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நடந்து முடிந்த TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
Priyanka Hochumin March 08, 2023
தமிழகத்தில் பொதுத் தேர்வுக்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் மிகவும் விறுவிறுப்பாக தங்கள் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பிராக்டிகல் எக்ஸாம் முடிந்து பின்னர் பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வெளியான தகவல் என்னவென்றால், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Gowthami Subramani March 06, 2023
2023 ஆம் ஆண்டின் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுர்வேதா மற்றும் பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கென தனித்தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan February 18, 2023
அன்பு மாணவச் செல்வங்களே! உங்களுக்கு அனைவருக்கும் டாக்டராகி ஊசி போட தான் ஆசையா? ஆனால், அந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. அதைவிட அற்புதமான வேலைகள், படிப்புகள் நிறைய இருக்கின்றன. அதை தேர்ந்தெடுக்கலாமே? அதே மனநிறைவான வேலை, குறைவான கட்டணத்தில் படிப்பு கிடைக்கும். என்னனு தெரிந்துக்கொள்ள விருப்பமா? இதோ தெரிந்துக் கொள்ளுங்கள். தற்போது 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும், படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
Nandhinipriya Ganeshan February 16, 2023
தமிழ்நாடு அரசுப்பணியார் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in -இல் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் தங்களது ஒருமுறை பதிவேற்றம் (ஓடிஆர்) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு ஹால் டிக்கெட்டுகளை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கிடையில், சென்ற வருடம் ஜூலை மாதத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகள் ஏழு மாதங்கள் ஆகியும் வெளியாகாத நிலையில், வருகின்ற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Gowthami Subramani February 15, 2023
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு நடந்து முடிந்த நிலையில், இன்னும் அதற்கான முடிவுகள் வரவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இந்த மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்விற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் நாள் நடத்தப்பட்டது.
Gowthami Subramani February 13, 2023
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்றும் தேர்வு முடிவுகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் தேர்வு எழுதினர். தற்போது டிஎன்பெஸ்சி தேர்வுகள் முடிந்து 6 மாதங்கள் ஆன நிலையில், தேர்வு முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடவில்லை.