Fri ,Jun 14, 2024

சென்செக்ஸ் 76,992.77
181.87sensex(0.24%)
நிஃப்டி23,465.60
66.70sensex(0.29%)
USD
81.57

இந்திய பொக்கிஷங்கள்

மனதை மயக்கும் குளு குளு மணாலி.. | Best Places to Visit in Manali

Nandhinipriya Ganeshan June 24, 2023

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மிகவும் பிரபலாமான மலைத்தலங்களில் ஒன்று தான் மணாலி. பனிப்பொழிவு காலங்களில் இயற்கை அழகை ரசிப்பதற்காக பனிப்பொழிவு நிறைந்த இடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவது வழக்கம். அப்படி பலரையும் வசீகரித்த இடமாக இந்த மணாலி விளங்குகிறது. அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மணாலியில்? வாங்க பார்க்கலாம். மணாலி: மனதை மயக்கும் இயற்கை அழகும், வண்ணமயமான மலர்த்தோட்டங்களும், பனி மூடிய மலைகளுக்கு நடுவே பசுமைப் போர்த்திய மலைகளும் நிறைந்த இந்த மணாலிக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் வருகை தருவார்கள். டிரெக்கிங், கேம்பிங், ஆங்கிலிங், ரிவர் ராப்டிங், ஸ்கீயிங் போன்ற குளிர்கால விளையாட்டுகளுக்கு பெயர்போன மணாலியை முழுமையாக சுற்றி பார்க்கவே 4 லிருந்து 5 நாட்கள் தேவைப்படும். செழிப்பான கலாச்சாரம் மற்றும் புனித யாத்திரைகளுக்கு புகழ்பெற்ற இந்த மணாலியில் நாம் சுற்றி பார்க்க நிறைய சுற்றுலா இடங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம். மணாலியில் பார்க்க வேண்டிய இடங்கள்: சோலாங் பள்ளத்தாக்கு | Solang Valley கடல் மட்டத்திலிருந்து சுமார் 8400 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு, கோடைக் காலங்களில் சர்ப்பிங் மற்றும் பாராகிளைன்டிங் செய்ய ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். கேபிள் காரில் ஏறி இமயமலையின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம். ரஹாலா நீர்வீழ்ச்சி | Rahala Waterfall மணாலி நகரத்திலிருந்து 27 கிமீ தொலைவில் 2501 மீ உயரத்தில் அமைந்துள்ளது இந்த ரஹாலா நீர்வீழ்ச்சி. இமயமலையில் இருக்கும் உருகும் பனிப்பாறையில் இருந்து வரும் தண்ணீரே நீர்வீழ்ச்சியாக கொட்டுகிறது. இது ஒரு பிரபலமான பிக்னிக் ஸ்பாட் மற்றும் ஓய்வெடுப்பதற்கான சரியான இடமாகவும் விளங்குகிறது. வியாச முனிவர் தியானம் செய்ய இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததாகவும் நம்பப்படுகிறது. ஜோகினி நீர்வீழ்ச்சி | Jogini Waterfall இந்த நீர்வீழ்ச்சியானது மணாலியிலிருந்து 3 கிமீ தொலைவிலும் வசிஷ்டர் கோயிலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் பியாஸ் நதி மற்றும் ரோஹ்தான்கின் பனி மூடிய சிகரங்களின் அழகை கண்டு ரசிக்கலாம். முக்கியமான யாத்திரை தளமாகவும் ஜோகினி விளங்குகிறது. ஹிடிம்பா கோயில் | Hadimba Devi Temple 1553 ஆம் ஆண்டு மகாராஜா பகதூர் சிங் என்பவரால் கட்டப்பட்ட இந்த ஹிடிம்பா தேவி கோயிலானது 'தூங்காரி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் பீமனின் மனைவியான ஹிடிம்பா தேவி மூலவராக அருள்பாலிக்கிறார். இந்த கோயிலானது முழுக்க முழுக்க மரத்தால் கட்டப்பட்டவை, இதுவே இக்கோயிலின் தனித்துவம். ஹிமாலயன் நிங்மாபா புத்த கோவில் | Himalaya Nyingmapa Buddhist Temple வட இந்தியாவில் அமைந்துள்ள புத்த மடாலாயங்களில் பிரபலமான ஒன்றாக இந்த ஹிமாலயன் நிங்மாபா கோம்பா புத்த மடாலயம் திகழ்கிறது. இதன் கட்டிடக்கலையின் அழகிற்காகை ரசிப்பதற்காவும், சுற்றுச்சூழலின் அமைதிக்காகவுமே ஏராளனமான சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். பிருகு ஏரி | Bhrigu Lake மணாலியிலிருந்து 40 கி.மீ.தொலைவில் குலூ மாவட்டத்தில் அமைந்துள்ள உயரமான ஏரி தான் பிருகு ஏரி. புகழ்பெற்ற துறவி மகரிஷி பிருகு ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்த இடம் என்று அறியப்படுகிறது. இந்த ஏரியின் சிறப்பம்சமே ஒவ்வொரு பருவத்திலும் அதன் நிறத்தை மாற்றிக்கொள்ளுமாம். அதாவது, கோடையில் நீல நிறமாகவும், கோடையின் பிற்பகுதியில் மரகத பச்சை நிறமாகவும் மாறும். கிரேட் ஹிமாலயன் தேசிய பூங்கா | Great Himalayan National Park இந்த பூங்காவில் 1000க்கும் மேற்பட்ட தாவரங்கள், 209 பறவை இனங்கள், 31 பாலூட்டி இனங்கள், 12 ஊர்வன மற்றும் 125 பூச்சிகள் உட்பட பல அரிய வகை உயிரினங்கள் இருக்கின்றன. இங்கு வெப்ப நிலையானது மைனஸ் 4.4 டிகிரி செல்சியஸ் ஆக இருக்குமாம். பார்வையாளர்கள் செல்லவும் கேமராவுக்கும் கட்டணம் செலுத்த வேண்டும். ஏப்ரல் - ஜூன் மற்றும் செப்டம்பர் - நவம்பர் ஆகியவை இங்கு செல்ல ஏற்ற மாதங்களாகும்.

ஹைதராபாத் வொண்டர்லால இப்படி ஒரு ஸ்பெஷலா.? இது தெரியாம போச்சே.! | Hyderabad Wonderla

Gowthami Subramani June 08, 2023

பொக்கிஷங்களால் ஆன நிலப்பரப்புகளைக் கொண்ட இடத்தையே ஹைதராபாத் எனக் கூறுவர். இந்த இடத்தில் சுற்றிப்பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும், பெரும்பாலும் அனைவரும் எதிர்பார்ப்பது வொண்டர்லாவாகத் தான் இருக்கும். இது பயனர்களுக்குப் புது வித அனுபவங்களையும், பேரின்பத்தையும் தரும் மறக்க முடியாத இடமாக அமைகிறது. இந்தப் பதிவில் ஹைதராபாத்தில் உள்ள வொண்டர்லாவின் டிக்கெட் விலை, நேரம், ரைட்ஸ் விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களைக் காணலாம்.

சூப்பரான கோடைக் கொண்டாட்டத்திற்கு பெங்களூர் வொண்டர்லா தான்..! | Wonderla Bangalore

Gowthami Subramani May 30, 2023

சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பிச் செல்லும் இடங்களில் ஒன்று அம்யூஸ்மென்ட் பார்க்குகள். இந்த அம்யூஸ்மென்ட் பார்க்குகளில் ஒன்றாக விளங்குவது வொண்டர்லா. இது இந்தியாவில் பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த வொண்டர்லா செயல்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் சென்னையிலும் வொண்டர்லா அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தப் பதிவில், பெங்களூரில் உள்ள வொண்டர்லாவின் டிக்கெட் விலை, பார்க் நேரம், ரைட்ஸ் விவரங்கள் மற்றும் இது குறித்த பல்வேறு தகவல்களைக் காணலாம்.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் | Places to Visit in Delhi

Priyanka Hochumin January 20, 2023

ஜனவரி 26, 2023 அன்று நாம் 74வது குடியரசு தினத்தை கொண்டாட உள்ளோம். அன்று நம் நாட்டை பெருமிதம் செய்யும் வண்ணம் நாட்டின் முப்படைகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து தங்கள் மரியாதையை செலுத்துவார்கள். அதை பார்க்கும் அனைவருக்கே ஒரு இனம் புரியாத சந்தோசம், கர்வம் மற்றும் மெய்சிலிர்ப்பு ஏற்படும். இவை நடைபெறும் இடமானது டெல்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் இடத்தில் கர்தவ்ய பாதையில் நடைபெறும். நம் தேசத்தை கௌரவிக்கும் வகையில் குடியரசு தின அணிவகுப்பு கோலாகலமாக நடைபெறும் இடத்தை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

2022 Top 10 Tourist Places | மக்கள் அதிகம் சென்ற டாப் 10 பிரபல சுற்றுலாத் தளங்கள்

Priyanka Hochumin December 26, 2022

உலகில் பரப்பளவில் அடிப்படையில் ஏழாவது இடத்திலும், மக்கள்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது இந்தியா. அது மட்டும் இல்லாமல் உணவு மற்றும் கலாச்சாரத்தில் நம்மை அடிச்சுக்க ஆளே இல்லை. அப்படி இருக்கையில் 2022 ஆம் ஆண்டில் டாப் 10 சுற்றுலாத் தலங்களுக்கு அதிகம் மக்கள் சென்றுள்ளனர் என்ற பட்டியல் வெளியானது. அதன் அடிப்படையில், தாஜ் மஹால் - ஆக்ரா, ஹவா மஹால் - ஜெய்ப்பூர், குதுப் மினார் - மெஹ்ராலி, ஜிம் கார்பெட் தேசிய பூங்கா - ராம் நகர், ஹர்மந்திர் சாஹிப் - அம்ரிஸ்டர், சன் டெம்பிள் - கோனார்க், எல்லோரா குகைகள் - அவுரங்காபாத், அஜந்தா குகைகள் - அவுரங்காபாத், கஜுராஹோ கோவில்கள் - கஜுராஹோ, ஹுமாயூனின் கல்லறை - டெல்லி

நடக்கவே நடக்காதுன்னு நினைச்சோம்...ஆனா தாஜ்மஹாலில் நடக்கபோகுது | Free Entry at Taj Mahal

Priyanka Hochumin December 15, 2022

தங்கள் காதலுக்கான அடையாளாம் பற்றி நிறைய கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அதில் உலக மக்கள் இன்றளவும் நினைவில் கொண்டிருப்பது, ஷாஜஹான் - மும்தாஜ், ரோமியோ - ஜூலியட், லைலா - மஜ்னு இப்படி சொல்லிகிட்டே போகலாம். ஆனால் இதுல நம் நாட்டோட கலைத்திறனை உலகிற்கே கொண்டு சேர்த்த உலகின் அதிசயங்களுள் ஒன்றானது "தாஜ் மஹால்" தான். தன்னுடைய மனைவி மும்தாஜ் மீது ஷாஜஹான் கொண்ட காதலால் கட்டப்பட்ட காவியம். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாட்கள் உற்ஸின் நிகழ்வு நடைபெறுகிறது.

Christmas Special : ஜிலு ஜிலு-ன்னு கிறிஸ்துமஸ்-க்கு எங்கையாவது போலாமா? இங்க அதுக்காக தனி ஈவென்ட்லாம் நடக்குதாம்! | houseboat in kashmir dal lake

Priyanka Hochumin December 12, 2022

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் பல விஷயங்களுக்காக சிறப்பு வாய்ந்தது. அதிலும் அதிகம் சுற்றுலா தளங்களுக்கு பேர் போனது நம் இந்தியா. அதிலும் ஜம்மு அண்ட் காஷ்மீர் "பூமியின் சொர்கம்" என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. காரணம்! கொஞ்சம் கூட மாசுபாடு இல்லாத நகரம். எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென மரம் மற்றும் வயல்கள். காலையில் சூரியனின் வெளிச்சம் பாதி மலைகளால் மூடப்பட்டு மிதமான வெளிச்சத்தில் அற்புதமான அழகை நமக்கு காண்பிக்கும்.

தங்கம் சாக்கடையில் இருந்து கிடைக்குமா.... அதுவும் இந்தியாவிலா..? எங்க தெரியுமா..?

Manoj Krishnamoorthi December 05, 2022

தங்கம் என்றாலே நம் மனதிற்குள் ஒருவித சந்தோஷம் தான். பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை நம் வாழ்வியலில் ஒரு அங்கமாக தங்கம் உள்ளது. சாமானியன் முதல் சீமான் வரை சேர்க்க நினைக்கும் ஒரு ஆஸ்தியாக பார்க்கப்படுகிறது. ஏன்..? நம் கையில் கொஞ்சம் காசு இருந்தாலே நம்மை சுற்றி இருப்பவர்கள் சொல்லும் வார்த்தை 'தங்கத்தை வாங்கி வை... பின்னாடி அவசரத்துக்கு உதவும்' என்பது தான். அது நிச்சயம் மறுக்க முடியாத ஒன்றுதான்... ஆனால் விலை உயர்ந்த ஸ்தானத்தில் நாம் பார்க்கும் தங்கம் சாக்கடையில் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா...? அதுவும் இந்தியாவில் நடக்கிறது. சரி, இது எங்கு நடக்கிறது என்பதை பற்றி அறிய வேண்டுமா....! மேலும் இந்த பதிவை பின்தொடரவும். 

Places to Visit Hampi in One Day: ஒன் டே ட்ரிப்-ஆ ஹம்பி போங்க..! திரும்ப வர மனசே வராது…! மாவீரன் ஷூட்டிங் நடந்த இடமும் இங்க தானா பாத்துக்கோங்களே…

Gowthami Subramani July 11, 2022

Places to Visit Hampi in One Day: நம் தமிழகத்தில் இருந்து மிகக் குறைந்த இடைவெளியில் இருக்கும் மைசூருக்கு அருகில் உள்ள ஹம்பி என்ற இடத்தைப் பற்றி தான் நாம் காணப்போகிறோம்.

Best Trekking Places Near Me: த்ரில்லிங்கான மலையேற்றம் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா? இதோ உங்களுக்கான இடம்.. உயிர் பயம் காட்டும் மலையேற்றம்..!!

Nandhinipriya Ganeshan June 28, 2022

நம்மில் பலருக்கும் மலையேற்றம் என்பது மிகவும் பிடிக்கும். ஆனால், பெரும்பாலும் மரங்கள் நிறைந்த அடர்ந்த காடுகளில் தான் ட்ரெக்கிங் செய்வார்கள். ஆனால், நாம் இப்போது பார்க்க போகும் இடமானது வெறும் பாறையால் ஆன ஒரு மலைப்பகுதி. இங்கு அவ்வளவு எளிதில் யாராலும் சென்றுவிட முடியாது. குறிப்பாக உயரத்தை பார்த்து பயம் இருப்பவர்கள் இந்த இடத்திற்கு சென்றால் அடுத்தது மயக்கம் தான். ஏனென்றால் அவ்வளவு உயரத்தில் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவில் நடந்து செல்ல வேண்டும். அப்படி என்ன இடம், எங்கு இருக்கிறது என்று தானே கேட்குறீங்க. வாங்க பார்க்கலாம்.