சிவகங்கை மாவட்டத்தில் பாம்பு கடித்த 10 வயது சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதில் செவிலியர்கள் தாமதம் காட்டியதால், சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சேர்வாஊரணி என்ற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் மற்றும் அமுதா தம்பதியின் 10 வயது மகள் ஓவியா இரவு வீட்டில் தரையில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது பாம்பு ஒன்று சிறுமி யை கடித்துள்ளது.
Nandhinipriya Ganeshan December 01, 2022
தமிழகத்தில் நிகழும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் மக்களை பீதியடைய வைக்கிறது. சட்ட ஒழுங்கில் காவல்துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சைபர் க்ரைம் குற்றங்களும் அதிகரித்துள்ளதால் காவல்துறை திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பட்டப்பகலில் பொது இடத்தில் கல்லூரி மாணவி கொலை, கார் குண்டு வெடிப்பு என தனிமனித குற்றம் முதல் தீவிரவாத தாக்குதல் வரை தமிழகத்தை உலுக்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் இளைஞரை கொன்று தலையை தனியாக எடுத்து சென்ற கும்பலின் செயல் மாவட்டத்தையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.
Nandhinipriya Ganeshan November 24, 2022
பரிகார பூஜை என்ற பெயரில் தினமும் பல்வேறு மோசடிகள், பாலியல் வன்முறைகள் என செய்திகள் வந்தாலும் மக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.அதேப்போல் ஒரு சம்பவம் சிவகங்கை அருகே நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் ரேணுகா தேவி, இவருக்கு அதேப்பகுதியை ஒருவருடன் திருமணமாகி 11 வயதில் மகனும்,8வயதில் மகளும் உள்ளனர். ரேணுகா தேவியின் கணவர் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ரேணுகாதேவிக்கு திருப்பத்தூர் வேட்டங்குடிப்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்ற போலி சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் திருமணமான ஆறே மாதங்களில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் அரசு மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த முத்து என்பவற்றின் மகள் ஜெபஸ்லீ (23). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலப்பசலையைச் சேர்ந்த திரவியம் என்பவற்றின் மகன் ஜெகதீஷுக்கும் (26) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்த்தில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஆவுடை பொய்கை எனும் இடத்தில் திருமணமாகி வெறும் 2 நாட்களே ஆன மதன்குமார் தனது மனைவி நதியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சியிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று லாரியை முந்துவதற்கு முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக மதன்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
Gowthami Subramani October 27, 2022
மருதுபாண்டியர்கள் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி, சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடம் சென்று அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாத, 24 ஆம் நாள், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில், மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவர்களது நினைவாக, அங்கு காளையார் கோவில் கட்டப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும், அக்டோபர் மாதம் 27 ஆம் நாள், மருது பாண்டியர்களுக்கு குருபூஜை விழா நடத்தப்படுகிறது. அதே போல, இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் குருபூஜை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசியல் தலைவர்கள் பலர் வருவதால், சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட ஆறு தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan October 26, 2022
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் பெயர்பெற்றவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இதனையடுத்து ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
Nandhinipriya Ganeshan October 21, 2022
சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே நெஞ்சத்தூரை சேர்ந்தவர் குமரேசன். நிறைமாத கர்ப்பிணியான இவருடைய மனைவி நிவேதா (21) -க்கு இன்று அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில், நிவேதா சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவருடன் அவடைய தாய் விஜயலட்சுமி மற்றும் உறவுக்கார பெண் திருச்செல்வி ஆகியோரும் சென்றனர்.
அமராவதிபுதூர், ஐடிஐ, விசாலயன்கோட்டை, ஆரவயல், கோவிலூர், மானகிரி, ஆலங்குடி, குன்றக்குடி, திருப்பத்தூர் டவுன், திருக்கோஷ்டியூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, மாதவராயன்பட்டி, சாலைகிராமம், வண்டல், கானாடுகாத்தான், கொத்தமங்கலம், வண்டல், கானாடுகாத்தான், கொத்தமங்கலம். , காளையார்கோயில், புளியடிதம்மம், நாட்டரசன்கோட்டை, கொல்லவயல், தேவகோட்டை, வேப்பங்குளம், வளமாவூர், ராம் நகர், சக்கவயல், புதுவயல், கண்டனூர், மித்திரவயல், பெரியகோட்டை, அரசனூர், பெத்தனேந்தல், பில்லூர், மானாமதுரை, சப்பசூடுதுறை. உலகம்பட்டி, புழுதிப்பட்டி, குளத்துப்பட்டி, இடைமேலூர், மலம்பட்டி, தமராக்கி, அ.தெக்கூர், நெற்குப்பை, மகிபாலன்பட்டி, கந்தவராயன்பட்டி, கீழசேவபட்டி, சிறுகூடல்பட்டி, நெய்வாசல், கீரணிப்பட்டி, சிறுகூடல்பட்டி, நெய்வாசல், கீரணிப்பட்டி, எஸ்.வி.பட்டிமங்கலங்கலம், எஸ்.வி.பட்டிமங்கலம் நகரம், ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, மறவமங்கலம், குண்டக்குடை, வளையம்பட்டி, இளையான்குடி, கண்ணமங்கலம், தாயமங்கலம், காரை kudi டவுன், செஞ்சை, எம்.சூரக்குடி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருப்புவனம், சிலைமான், செங்குளம், பழையனூர், திருஅச்செட்டி, பழையனூர், மாரநாடு, பொட்டப்பாளையம், கீழடி, புலியூர், கரிசல்குளா, காஞ்சிரங்குளம்