Tue ,Apr 23, 2024

சென்செக்ஸ் 73,917.31
268.69sensex(0.36%)
நிஃப்டி22,409.95
73.55sensex(0.33%)
USD
81.57

வெற்றி நிச்சயம்

கூலித் தொழிலாளர்கள் டூ தொழில் முனைவோர்கள்..! சாதித்து காட்டிய மகளிர் சுய உதவிக்குழு!

Gowthami Subramani December 30, 2022

இந்தியாவில் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து சாதனை படைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. இந்தியாவில் தொழில்முனைவோரை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசால் கடந்த ஜனவரி 16, 2016 ஆம் நாள் முதல் ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. அதன் பின்னர், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தொழில்முனைவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது தொழில்முனைவோர்களிடையே உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

2022-ன் தொழில்முனைவோர் புத்தகங்கள்! நீங்கள் தொழில்முனைவோர் ஆகலாம்| Books for Startups

Gowthami Subramani December 30, 2022

ஒவ்வொரு ஆண்டும், அந்த ஆண்டின் முடிவின் நிலை பற்றி தெரிந்து கொள்வதில் சுவாரசியம் இருக்கும். அதன் படி, ஸ்டார்ட் அப் வரிசையில் பார்க்கும் போது, புதிய தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளில் உள்ள ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் பற்றிய புத்தகங்கள், தொழில்முனைவோர்களின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்வாறு தொழில்முனைவோர்கள் தொழில் உருவாக்குவதற்கான உயர்வு மற்றும் தாழ்வு குறித்து கூறப்படும் டாப் 10 புத்தகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறு நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு உதவும் Gallabox! | Gallabox Startup Story

Gowthami Subramani December 26, 2022

தொழில் முனைவோர்கள் அவர்களது வணிகத்தை மேம்படுத்திட பல்வேறு கடினமாக சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டுவதும் அமையும். இருப்பினும் சிறப்பாக செயல்பட்டு வரும் சில நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதன் படி, சிறு நிறுவனங்களுக்கு உதவக் கூடிய வகையில் சென்னை ஸ்டார்ட் அப் நிறுவனமான Gallabox செயல்பட்டு வருகிறது.

Indian Unicorns 2022 | 2022 -ல் யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..

Nandhinipriya Ganeshan December 23, 2022

தனியார் நபர்களால் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கப்பட்டு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பை எட்டும் நிறுவனங்களையே 'யூனிகார்ன் ஸ்டார்ட்அப்' என்று அழைக்கப்படும். அதாவது, ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மதிப்பு $1 பில்லியனுக்கும் மேல் இருந்தால், யூனிகார்ன் கிளப்பில் நுழைவதற்கான வாய்ப்பை பெறுகின்றன. இந்தியா ஸ்டார்ட்அப் வெற்றிக் கதைகளின் பட்டியலில் இடம்பிடிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும், 90% ஸ்டார்ட்அப்கள் அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்து விடுகின்றன.

Zoho: உலகையே திரும்பி பார்க்க வைத்த ஜோஹோ.. தஞ்சாவூரிலிருந்து சான் பிரான்சிஸ்கோ.. மாஸ் காட்டும் ஸ்ரீதர் வேம்பு... 

Nandhinipriya Ganeshan November 10, 2022

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஸ்ரீதர் வேம்பு, சென்னை ஐஐடியில் தனது கல்லூரி படிப்பை முடித்து, அதன் பின்னர் ஆய்வுப் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். நியூ ஜெர்சியில் உள்ள ஃபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1989 ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அதன்பிறகு 1994 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் டியோகோவில் உள்ள குவால்காம் நிறுவனத்தில் சேர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றினார். அந்த சமயத்தில் நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சென்னை திரும்பி வந்து தனது சகோதரர்களுடன் இணைந்து 1996ஆம் ஆண்டு சென்னையில் 'வேம்பு சாஃப்ட்வேர்' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கினார். அதாவது, வணிக நிறுவனங்களை கையாள தேவைப்படும் சாப்ட்வேர்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

இரண்டு அறை அபார்ட்மெண்ட்டில் தொடங்கப்பட்ட ஃப்ளிப்கார்ட் இன்று உலகின் நம்பர் 1 நிறுவனமானது எப்படி?

Nandhinipriya Ganeshan October 27, 2022

ஆன்லைனில் வாங்குவது விற்பதும் நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. அற்புதமான ரிட்டர்ன் பாலிசிகள் மற்றும் உத்தரவாதங்களுடன் மலிவு விலையில் பொருட்களை வாங்குவதற்கு ஆரம்ப காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் இணையத்தை நம்பியிருந்தனர். அதுமட்டுமல்லாமல், அப்போது ஆன்லைன் ஷாப்பிங் என்பது ஒரு ட்ரெண்ட் ஆக இருந்தது. ஆனால், இந்த காலத்தில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது ஒரு ட்ரெண்ட் மட்டும் அல்ல, இளைஞர்களும் முதியவர்களும் ஈடுபடும் ஒரு நடைமுறை ஆகிவிட்டது. இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆன்லைன் ஷாப்பிங் தளம் என்று சொன்னால், Flipkart இன் பெயர் தான் முதலில் வரும். 

தன்னுடைய புதுமையான யோசனையால் நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தன்நம்பிக்கை நட்சத்திரம் நவீன் திவாரி

Nandhinipriya Ganeshan October 26, 2022

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் எண்ணில் அடங்கா புதுத் தயாரிப்புகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவற்றையெல்லாம் நொடிக்கு நொடிக்கு நமது மொபைலில் அப்டேட் செய்வது எது? விளம்பரங்களே. சிலவற்றை நமது நண்பர்கள், குடும்பத்தினர், தெரிந்தவர்கள் மூலம் தெரிந்துக்கொண்டாலும், அனைத்து தகவல்களையும் ஒரு மனிதரால் கண்காணிப்பது என்பது சாத்தியமில்லாத விஷயம் தானே. ஆனால், அதை சாத்தியமாக்கி காட்டியுள்ளது “இன்மொபி” என்ற மொபைல் அட்வடைஸிங் நிறுவனம். “இந்தியாவின் முதல் யூனிகார்ன் ஸ்டார்ட் அப்” – Inmobi.

Monday Motivation: இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் நம்ம ஊரு ஈ-காமர்ஸ் தளம்.. கலக்கும் சேலத்து இளைஞன்..

Nandhinipriya Ganeshan September 26, 2022

சேலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான திரு.சோமசுந்தரம், இயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய உதவும் வகையில் HcOrganic.com என்ற ஈ-காமர்ஸ் வர்த்தகத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்த காலத்தில் எத்தனையோ ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வந்துவிட்டன. இருப்பினும், விடாமுயற்சியுடன் புதுமையான யோசனையுடன் சோமசுந்தரம் தொடங்கப்பட்ட ஈ-காமர்ஸ் தளம் உருவான கதையை பற்றிய பார்க்கலாம்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இளம் ஸ்டார்ட்அப் நாயகர்கள்..

Nandhinipriya Ganeshan September 25, 2022

2022 ஆம் ஆண்டிற்கான ஹுருன் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் கௌதம் அதானி முதல் இடத்தை பிடித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஒருவர் முதலிடம் பிடித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விஷயம் கிடையாது. இருப்பினும், இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தங்களது விடாமுயற்சிகளின் மூலமும் புதுமையான யோசனையின் மூலமும் வாழ்க்கையில் பல சவால்களை முறியடித்து தற்போது பில்லியனர்களாக உருவெடுத்திருப்பது தான்.

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமென்றால் 'கடினமாக உழைக்காதே' - வாரன் பஃபெட்!

Nandhinipriya Ganeshan September 12, 2022

கடின உழைப்பு வெற்றிக்கு இன்றியமையாத ஒரு தகுதி. ஆனால், கடினமாக உழைக்கும் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி அடைந்துவிடுவதில்லை. வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் என நம் அன்றாட வாழ்க்கையில் பல வகையான மனிதர்களை பார்க்கிறோம். அவர்கள் நம் அனைவரை விடவும் தினமும் பல நேரம் அதிகமாகவும் கடினமாகவும் உழைக்கின்றார்கள். ஆனால், அவர்களில் மிகச் சிலர் மட்டுமே அவ்வாழ்க்கையில் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகருகின்றார்கள். மீதி இருக்கும் அனைவரும் கடினமாக உழைத்தே தங்களது வாழ்க்கையை கடத்துக்கின்றார்கள். எனவே நாம் வெற்றி என்னும் இலக்கை அடைக்குவதற்கு கடின உழைப்பு ஒன்று மட்டுமே போதாது. அதையும் தாண்டி ஏதோவொரு திறமை நம்மிடம் இருக்க வேண்டும். அத்திறமை என்னவென்ற கேள்வி இங்கு பலரது மனதிலும் குடிக்கொண்டிருக்கின்றது.