Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,008.21
-740.21sensex(-1.02%)
நிஃப்டி21,814.30
-241.40sensex(-1.09%)
USD
81.57

கல்வி

10, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் எப்போது? - சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவிப்பு..! | CBSE Board Exam 2024

Saraswathi July 15, 2023

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்தின்கீழ் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள், கல்வியாண்டின் தொடக்கத்திலேயே பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் ஆண்டு நாட்காட்டியில் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டு 12 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18.2024 அன்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல்.8.2024 அன்றும் தொடங்கவுள்ளது.  இதேபோல், சிபிஎஸ்இ எனப்படும் மத்தியப் பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதியை சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 21ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவ-மாணவியருக்கு அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 17ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 10ம் தேதி பொதுத்தேர்வுகள் நிறைவடையும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெக்ஸ்ட் தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்: தேசிய மருத்துவ ஆணையம் தகவல்!

Baskar July 06, 2023

டெல்லி: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. நெக்ஸ்ட் தேர்வு படி 1 மற்றும் படி 2 என இரண்டு படிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த 10 ஆண்டுகளுக்குள் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் ஐந்தரை ஆண்டுகளை கொண்டது. இதில் கல்லூரியில் நான்கரை ஆண்டுகள் படித்த பின்னர் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுகின்றனர்.அதனைத் தொடர்ந்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்றுகின்றனர். இந்நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்தாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. நெக்ஸ்ட் தேர்வில் தேர்வு பெற்றால்தான் பயிற்சி மருத்துவர் பணியை செய்ய முடியும்.இரு தேர்வுகளாக மே மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்வுகள் நடக்கும். வரும் 28 ம் தேதி நாடு முழுவதும் மாதிரி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ்ட் தேர்வு நடத்துவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசு இந்த தேர்வை கைவிட வேண்டும் என்று ஏற்கனவே முத்ல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம் - மாணவ-மாணவியர் உற்சாகம்

Saraswathi July 03, 2023

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ-மாணவியருக்கான வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. தமிழக கல்லூரி கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்பட்டுவரும் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கு 1,07,299 இடங்கள் உள்ளன. நடப்பாண்டில் இந்த இடங்களில் சேர்வதற்கு 2லட்சத்து 46 ஆயிரம் மாணவ-மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 25ம் தேதி மாணவர்களுக்கான தரிவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

குரூப்-4 பதவிக்கான காலியிடங்கள் அதிகரிப்பு - டிஎன்பிஎஸ்சியின் புதிய பட்டியல் ரிலீஸ்!

Saraswathi July 01, 2023

தமிழகத்தில் குரூப்-4 பதவிகளுக்கான காலியிடங்கள் 10,292ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமநிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. 20 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், அதே ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேர்வை 18, 36, 535 பேர் எழுதினர்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு - மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்!

Saraswathi June 30, 2023

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்தாண்டு இளங்கலை எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள், 2 பல்மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 50 எம்.பி.பி.எஸ் இடங்களும், 200 பல்மருத்துவப் படிப்பு (பிடிஎஸ்) இடங்களும் இருக்கின்றன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிவரை பெறப்படுகிறது.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடக்கம்..!

Saraswathi June 28, 2023

தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று தொடங்குகிறது. எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாயின. அதில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் பிரபஞ்சன், 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஓதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது. 

நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை - அரசுப் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை..!

Saraswathi June 28, 2023

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெற்றோரிடம் கட்டாய நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி இலவச கல்வி வழங்கப்பட்டுவருகிறது. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கிவருகிறது. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் கிடைக்கிறது.

தேர்வு முடிவுகள் எப்போது..? - டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Saraswathi June 28, 2023

தமிழகத்தில் காலியாகவுள்ள வனப்பயிற்சியாளர், உதவிப்பிரிவு அலுவலர், கால்நடை உதவி அறுவைசிகிச்சை நிபுணர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள இடங்களுக்காக நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம் (ஜூலை) வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற விவரத்தை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

10,11,12ம் வகுப்புகளுக்கு மாலைநேர சிறப்பு வகுப்புகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Saraswathi June 27, 2023

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் (சிறப்பு வகுப்புகள்) நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஜூன் 12ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி பாடங்கள் நடத்தப்பட்டுவருகிறது. வெயிலின் தாக்கத்தால் நடப்பாண்டிற்கான பள்ளிகள் திறப்பு தள்ளிப்போன நிலையில், சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் - எப்படி பதிவிறக்கம் செய்வது | TNEA Rank List 2023

Abhinesh A.R June 26, 2023

தமிழ்நாடு பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதனை எப்படி பதிவிறக்கம் செய்து பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.