Gowthami Subramani March 22, 2023
தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனமானது, பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், கலந்து கொள்ள தேவையான தகுதிகள், வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காணலாம். இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
Gowthami Subramani March 21, 2023
2023 ஆம் ஆண்டின், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வெளியான அறிவிப்பின் படி, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 2,599 காவலர்களை நியமிப்பதற்கு தமிழக காவல் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் காவல்துறையின் எண்ணிக்கை தற்போது 1.34 லட்சமாக உள்ளது. இதில் புதிய இரண்டாம் நிலை காவலர்களை விரைவில் தேர்வு செவதற்கான செயல்முறையை விரைவில் தொடங்க காவல் துறையின் மாநிலத் தலைவரிடமிருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
Priyanka Hochumin March 21, 2023
தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நடந்த பட்ஜெட் தாக்களில் தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதில் தமிழ்நாட்டின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது.
Nandhinipriya Ganeshan March 20, 2023
CRPF - மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) 9223 கான்ஸ்டபிள் (Technical and Tradesman) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் All Over India-யில் பணியமர்த்தப்படுவார்கள்.
Priyanka Hochumin March 14, 2023
மத்திய அரசு மற்றும் அதனைச் சார்ந்த துரைக்களில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.100/- கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் பெண்கள் மற்றும் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Nandhinipriya Ganeshan March 13, 2023
மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அசாம் ரைபிள் படைப் பிரிவில் ஆய்வக உதவியாளர், செவிலிய உதவியாளர், மருந்தாளுநர் உள்ளிட்ட மொத்தம் 616 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதிக்குள் Assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Gowthami Subramani March 09, 2023
மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இதில் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தேவையான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பற்றி இதில் காணலாம். இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
Priyanka Hochumin March 07, 2023
தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் இதோ உங்களுக்கான வாய்ப்பு. சென்னை மாநகராட்சியில் காலியாக இருக்கும் பணி இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்டுள்ள தரவுகளை சரியாக எழுதி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.
Priyanka Hochumin March 06, 2023
பழனி தண்டாயுதபாணி திருகோவில் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழே குறிப்பிட்டுள்ள கல்வி தகுதியை பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 01.07.2022 ஆம் நாளின் படி, 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
Priyanka Hochumin February 28, 2023
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection commission) நடத்தும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கலெக்டர் முருகேஷ் கூறினார். இதில் கலந்துக் கொண்டு தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பெறலாம்.