Priyanka Hochumin February 20, 2023
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்.எஸ் டோனி அவர்களின் கடைசி ஐபிஎல் போட்டி குறித்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தது சி.எஸ்.கே நிறுவனம். வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் 16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இது தோனியின் இறுதி போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தன் மீது சென்னை ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் என்னுடைய இறுதி ஆட்டத்தை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி விட்டு தான் ஓய்வு பெரும் முடிவை அறிவிப்பேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தற்போது டி20 போட்டிகளில் மிகவும் அபாரமான ஃபார்மில் உள்ளார். அவர் கடைசியாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார் மற்றும் இரண்டாவது போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஐபிஎல் ஏலம் இன்று நடந்தால், அதில் ஷனகாவின் வாய்ப்புகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL 2023) தனது முதல் சீசனில் பங்கேற்க வாய்ப்பில்லை என வெளியான ஊகங்களை நிராகரித்தார். ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கேமரூன் கிரீன் மும்பை இந்தியன்ஸால் ரூ. 16.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏலத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற புகழ்பெற்ற கீரன் பொல்லார்டின் இடத்தை ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல் 2023) ஏலம் முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் 2023 சீசன் தொடங்கும் தற்காலிகத் தேதியை அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் சீசன் 16, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும். வழக்கமாக மார்ச் மாதத்தில் தொடங்கும் ஐபிஎல் சீசன் இந்த முறை ஏப்ரல் மாதத்தில் தொடங்கிவதற்கு காரணம், மகளிர் ஐ.பி.எல்லின் முதல் சீசனை மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதால் தான் என பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் மினி ஏலத்தில் பல சாதனைகள் சரிந்துள்ளன. சூப்பர் ஸ்டார்கள் ஏலத்திற்கு தயாராக இருப்பதால், உரிமையாளர்கள் தங்கள் சூப்பர் ஸ்டார்களின் சேவைகளை முன்பதிவு செய்ய முந்தைய சாதனைகளை உடைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சாம் கர்ரானைப் பெறுவதற்கான முயற்சி தோல்வியுற்ற நிலையில், சென்னை அணி பின்னர் ஜேசன் ஹோல்டருக்கும் ஏலப் போரில் இறங்கியது. இறுதியில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸை 16.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இந்த நடவடிக்கையை சிஎஸ்கே ரசிகர்கள், எம்எஸ் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று பாராட்டி வருகின்றனர்.
ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களை வாங்குவதற்கு அணிகள் போட்டி போட்டு வருகின்றன. அதன் படி ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் குறித்த தகவலை இதில் பார்க்கலாம்.
கடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20 லீக்களில் பங்கேற்பதற்காக, ஐபிஎல் மற்றும் உத்தரபிரதேச அணிகளில் இனி விளையாட மாட்டார் என தெரிகிறது. “நான் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். உத்தரபிரதேச கிரிக்கெட் அணிகளில் சில உற்சாகமான இளைஞர்கள் வருகிறார்கள். நான் ஏற்கனவே உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் எனது தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளேன். எனது முடிவைப் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் தெரிவித்துள்ளேன்” என்று ரெய்னா கூறியதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2023 : ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மகேந்திர சிங் தோனி கேப்டனாக வழிநடத்துவார் என சிஎஸ்கே சிஇஓ காஷி விஸ்வநாத் உறுதி செய்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐபிஎல் 2022 சீசனின் போது, போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவை கேப்டனாக நியமித்து அணி கேப்டன்சியில் மாற்றத்தை பரிசோதித்தது. இருப்பினும், இந்த சோதனை தோல்வியடைந்ததால், ஏப்ரல் 30 அன்று போட்டியின் நடுவில் அணியை வழிநடத்த எம்எஸ் தோனி மீண்டும் கொண்டு வரப்பட்டார்.
IPL 2023 : முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி ஐபிஎல்லின் அடுத்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இன் தலைமை பயிற்சியாளராக என சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ட்விட்டரில் அறிவித்தது. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆலோசகராக கடந்த சீசனில் இருந்த பிரையன் லாரா, அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லாராவின் நியமனத்தை அறிவித்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கிரிக்கட் ஜாம்பவான் பிரையன் லாரா வரவிருக்கும் ஐபிஎல் சீசன்களுக்கு எங்கள் தலைமை பயிற்சியாளராக இருப்பார்." எனத் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் டாம் மூடிக்கும் நன்றி தெரிவித்தனர். மூடி தலைமை பயிற்சியாளராக இருக்கும்போது, அணி 5 பிளேஆஃப்களில் விளையாடியுள்ளது மற்றும் 2016இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2020 ஆம் ஆண்டு, ட்ரெவர் பெய்லிஸ் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். எனினும் 2021 ஆம் ஆண்டில் டாம் மூடி மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.