Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

ஓடிடி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வைத்தது ஆப்பு.. இனி அதை செய்ய முடியாது

Aruvi Updated:
ஓடிடி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வைத்தது ஆப்பு.. இனி அதை செய்ய முடியாதுRepresentative Image.

சென்னை: ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் பகிர்வது நிறுத்தப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பித்த ஓடிடிக்கள் தற்போது அசுர வேகத்தில் வளர்ந்திருக்கின்றன. வருட சந்தா கட்டினால் போதும் குடும்பத்தோடு வீட்டிலேயே இருந்தபடி படங்களையோ, வெப் சீரிஸ்களையோ பார்க்கலான் என்பதால் அதற்கான மவுசு அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், ஆஹா உள்ளிட்ட ஓடிடி தளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் நெட்ஃப்ளிக்ஸில் உலகின் பல்வேறு நாடுகளில் உருவாகும் வெப் சீரிஸ்கள் முதல் படங்கள்வரை ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கின்றன. இதனால் அந்த தளத்துக்கு பயனர்கள் அதிகளவில் இருக்கின்றனர்.

அதேசமயம் மற்ற ஓடிடி தளங்களைவிடவும் நெட்ஃப்ளிக்ஸின் சந்தா கொஞ்சம் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். உதாரணமாக நெட்ஃப்ளிக்ஸின் ஒரு மாத சந்தாவுக்கு 149 ரூபாய் (மொபைல் ப்ளான்) வசூலித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வருடத்துக்கு 1,788 ரூபாய் வசூலிக்கிறது.

மேலும் பேஸிக் ப்ளானாக ஒருவர் மட்டும் பார்ப்பதற்கு ஒரு மாதத்துக்கு 199 ரூபாயும், வருடத்துக்கு 2,388 ரூபாயும் வசூலிக்கிறது. அதேபோல் ஸ்டாண்டர்ன் ப்ளானாக இரண்டு பேர் பார்க்க ஒரு மாதத்துக்கு 499 ரூபாயும், 5,988 ரூபாயும், ப்ரீமியம் ப்ளானாக (அல்ட்ரா ஹெச்.சி) நான்கு பேர் பார்ப்பதற்கும் மாதம் 649 ரூபாயும், வருடத்துக்கு 7,788 ரூபாயும் வசூலித்துக்கொண்டிருக்கிறது. இதனால் இவ்வளவு பணம் கொடுத்து நெட்ஃப்ளிக்ஸை சப்ஸ்க்ரிப்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

ஓடிடி பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வைத்தது ஆப்பு.. இனி அதை செய்ய முடியாதுRepresentative Image

அதன் காரணமாக ஒருவர் மட்டும் சப்ஸ்க்ரைப் செய்து பாஸ்வேர்டை மற்றொருவருக்கு கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. சப்ஸ்க்ரைபர்கள் தொடர்ந்து இப்படி செய்வதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துக்கு வருமானம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதனை தற்போது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தடுத்திருக்கிறது. அதன்படி, ஒரு பயனர் மற்றொருவருக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்யப்படுவது நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “பாஸ்வேர்டை ஷேர் செய்திருக்கும் பயனர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதேபோல் பேஸிக் ப்ளானில் Ad Free அம்சம் புதிய பயனர்களுக்கும், ஏற்கனவே அந்த ப்ளானில் இருந்து விலகி மீண்டும் இணைய விரும்பும் பயனர்களுக்கும் நிறுத்தப்படுகிறது.

தற்போது இருக்கும் சப்ஸ்க்ரைப்பர்களுக்கு மட்டும்தான் அது பொருந்தும். கனடாவில் அந்த முறை செயல்படுத்தவும்பட்டுவிட்டது. அதனையடுத்து அமெரிக்காவிலும் ப்ரிட்டனிலும் நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த வருடத்தின் வருவாய் புதிய பயனர்களின் மூலம்தான் அதிகரித்திருக்கிறது. இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில் இயக்க லாபம் மட்டும் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதை இந்த வருடத்தின் முழுமைக்கும் அதிகரிக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறோம்” என கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்