Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுக்கு தானே இத்தனை நாள வெயிட்டிங்.. குஷியில் ரசிகர்கள்.. | The Legend OTT Release Update

Nandhinipriya Ganeshan Updated:
இதுக்கு தானே இத்தனை நாள வெயிட்டிங்.. குஷியில் ரசிகர்கள்.. | The Legend OTT Release UpdateRepresentative Image.

முன்பெல்லாம் புது படம் திரையரங்குகளில் வெளியாகி பல மாதங்கள் கழித்தே தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படுகிறது. ஆனால், இந்த காலத்தில் திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகிவிடுகிறது. இதற்காகவே பல படங்களின் ஓடிடி ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பார்கள். 

தற்போது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் 'தி லெஜண்ட்' படம் ஓடிடியில் ரிலீஸாகவுள்ளது. சென்ற வருடம் ஜூலை 2 ஆம் தேதி தி லெஜண்ட் திரைப்படம் சுமார் 800 க்கும் அதிகமான திரையரங்களில் ரிலீஸானது. மறைந்த சின்ன கலைவாணர் விவேக், ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்திருந்தனர். 

இந்த படத்தை பார்த்து ட்ரோல் செய்யாதவர்களே இல்லை. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரம் போல் இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் கழுவி ஊற்றினார். ஆனால், இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் பார்ப்பதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். 

ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் குஷிபடுத்தும் விதமாக இன்று 12.00 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 'தி லெஜண்ட்' ஓடிடி ரிலீசுக்கு பிறகு என்ன மாதிரியான மீம்ஸ்கள் எல்லாம் இணையத்தில் வட்டமடிக்க போகிறதோ.!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்