Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57

மாசுபாடு

ஏர்-ஹாரன்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை..!

Saraswathi June 24, 2023

கோவை மாநகரில் ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாநகரில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மோட்டார் வாகன சட்டங்களையும் போலீசார் கடுமையாகக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிப்படி நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26 ஆம் தேதி முதல் கோவை மாநகரில் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்-ஹாரனை பயன்படுத்தும் வாகனங்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த ஆய்வின்போது, ஏர்-ஹாரன் பொருத்திய வாகனங்கள் கண்டறியப்பட்டால், அதன் உரிமையாளர் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கழிவுகள் அகற்றும் பணி தீவிரம்..! கண்காணிப்புக்குழுத் தலைவர் பேட்டி..!!

Saraswathi June 21, 2023

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி வரும் 23ம் தேதி முதல் தொடங்கும் என சார் ஆட்சியர் கௌரவகுமார் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், ஆலையிலிருந்து கழிவுகளை அகற்ற வேண்டும், பசுமை வளையத்தை பராமரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவு, அபாயகரமான கழிவு மற்றும் பசுமை வளையத்தை பராமரிக்க துணை ஆட்சியர் கௌரவ குமார் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, மாநகராட்சி பொறியாளர், தீயணைப்பு அதிகாரி, மற்றும் ஸ்டெர்லைட் ஆலை சார்பாக இரண்டு பேர் என 9 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவுகளை அகற்றுவதற்கான ஆய்வு பணிகளை ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 10 தினங்களாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சார் ஆட்சியர் கௌரவ்குமார், துணை கண்காணிப்பாளர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய கண்காணிப்பு குழுவினர் இன்று ஸ்டெர்லைட் ஆலையில் சிசிடிவி கேமரா மற்றும் ஆலை உள்ளே செல்லும் வாகனங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்பட உள்ள ஜிப்சம் கழிவுகளை உடைப்பதற்காக கொண்டுவரப்பட்ட இரண்டு எஃப்எல் இயந்திரங்களை, கண்காணிப்பு குழுவினர் ஆலை உள்ளே அனுமதித்து சிப்சம் கழிவு உடைக்கும் பணி தொடங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சார் ஆட்சியர் கௌரவ குமார், ஆலையின் உள்ளே மற்றும் வெளியே இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தற்போது சிப்சத்தை உடைக்கும் பணி தொடங்கியுள்ளது. கழிவுகள் இன்னும் இரண்டு நாள் கழித்து, வரும் 23ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அகற்றப்படும். இங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் ஜிப்சம், தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பசுமை வளையத்தை பராமரிக்கும் பணியும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - திருப்பூரில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்

Saraswathi June 19, 2023

திருப்பூரில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி நுதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி தொடங்கியது முதல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் அப்பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம், இது தொடர்பான எதிர்ப்பை ஏற்கனவே பொதுமக்கள் பதிவு செய்தனர். இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று 45 வது வார்டு பகுதி முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.