Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்தியாவிலையே தமிழ்நாடு தான் டாப் 3ல இருக்கு! இதுக்கு மேல ஏதாவது சொல்லனுமா என்ன?

Priyanka Hochumin Updated:
இந்தியாவிலையே தமிழ்நாடு தான் டாப் 3ல இருக்கு! இதுக்கு மேல ஏதாவது சொல்லனுமா என்ன?Representative Image.

Per Capita Income of TamilNadu Districts: தற்போது இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவாகவும், பணவீக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேட்ட உடனே நமக்கு ஏற்படும் சந்தேகம் அப்ப இந்திய வருமானம் எந்த அளவிற்கு தான் இருக்கிறது என்பது தான்? இப்படி மக்கள் கேள்வி கேட்பதற்கு பதில் கிடைக்கும் விதமாக இந்தியா இன் பிக்சல்ஸ் (Pixels of India) என்னும் ட்விட்டர் அக்கவுண்ட்  சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலையே தமிழ்நாடு தான் டாப் 3ல இருக்கு! இதுக்கு மேல ஏதாவது சொல்லனுமா என்ன?Representative Image

ஒரு நாட்டின் வளர்ச்சியைப் பற்றி தெரிந்துகொள்ள தனி நபரின் வருமானம் தான் மூலாதாரம். இதில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்வது நமக்கு பெருமைக்குரிய விஷயமாகும். இதில் தனிவருமானம் எப்படி கணக்கிட படுகிறது என்றால்? நாட்டின் ஒரு மாநிலம் அல்லது மாவட்டத்தில் தனி நபர் ஒருவர் ஒரு வருடத்திற்கு சம்பாதிற்கும் பணத்தின் சராசரி அளவீடு தான் அது. அதில் முதல் மூன்று இடத்தையும் தமிழ்நாட்டில் இருக்கும் மூன்று மாநிலங்கள் தான் பிடித்துள்ளது. எந்தெந்த மாவட்டம் எவ்ளோ தனி நபர் வருமானத்தை ஈட்டியுள்ளது என்று பார்ப்போம்.  

தமிழ்நாடு மாவட்டம்

தனி நபர் வருமானம்

திருவள்ளூர்

3.84 லட்சம் ரூபாய்

கோயம்புத்தூர்

3.35 லட்சம் ரூபாய்

ஈரோடு

3.17 லட்சம் ரூபாய்

கிருஷ்ணகிரி

2.90 லட்சம் ரூபாய்

காஞ்சிபுரம்  

2.81 லட்சம் ரூபாய்

நாமக்கல்

2.70 லட்சம் ரூபாய்

கரூர்

2.52 லட்சம் ரூபாய்

திருச்சி

2.44 லட்சம் ரூபாய்

விருதுநகர்

2.28 லட்சம் ரூபாய்

சென்னை

2.26 லட்சம் ரூபாய்

திருப்பூர்

2.22 லட்சம் ரூபாய்

கன்னியாகுமரி

2.14 லட்சம் ரூபாய்

வேலூர்

2.05 லட்சம் ரூபாய்

தூத்துக்குடி

2.04 லட்சம் ரூபாய்

நீலகிரி

2.03 லட்சம் ரூபாய்

சேலம்

1.92 லட்சம் ரூபாய்

மதுரை

1.88 லட்சம் ரூபாய்

திருநெல்வேலி

1.79 லட்சம் ரூபாய்

தர்மபுரி

1.76 லட்சம் ரூபாய்

திண்டுக்கல்

1.63 லட்சம் ரூபாய்

தஞ்சாவூர்

1.62 லட்சம் ரூபாய்

கடலூர்

1.55 லட்சம் ரூபாய்

தேனி

1.34 லட்சம் ரூபாய்

ராமநாதபுரம்

1.30 லட்சம் ரூபாய்

புதுக்கோட்டை

1.24 லட்சம் ரூபாய்

சிவகங்கை

1.19 லட்சம் ரூபாய்

நாகப்பட்டினம்

1.16 லட்சம் ரூபாய்

விழுப்புரம்

1.15 லட்சம் ரூபாய்

திருவாரூர்

1.10 லட்சம் ரூபாய்

திருவண்ணாமலை

1.06 லட்சம் ரூபாய்

பெரம்பலூர்

89,529 ரூபாய்

இந்தியாவிலையே தமிழ்நாடு தான் டாப் 3ல இருக்கு! இதுக்கு மேல ஏதாவது சொல்லனுமா என்ன?Representative Image

இது 2019-20 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக மக்கள் தொகை மற்றும் மாவட்டத்தின் மொத்த வருமானம் ஆகியவற்றை கொண்டு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர் வருமானம் அளவுகளை முடிவு செய்துள்ளது. மேலும் பணவீக்கத்தை அளவிட 2011-12 தரவுகளை 1.65 உடன் பெருக்கி 2019-20 ஆண்டின் அடிப்படை அளவீடு மற்றும் வருமானத்திற்கு 1.05 உடன் பெருக்கி 2019-20 ஆண்டின் அடிப்படை அளவீட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்