Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வங்கி அல்லது தபால் அலுவலகம்..! ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்ய எது பெஸ்ட்.? | Post Office Fixed Deposit Vs Bank Fixed Deposit

Gowthami Subramani Updated:
வங்கி அல்லது தபால் அலுவலகம்..! ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்ய எது பெஸ்ட்.? | Post Office Fixed Deposit Vs Bank Fixed DepositRepresentative Image.

சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய அங்கமாக விளங்கும் ஒன்றாகும். அந்த வகையில், பங்குச் சந்தை, ஃபிக்ஸ்டு டெபாசிட் போன்ற பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அதிலும், பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பதால், மக்கள் ஃபிக்ஸ்டு டெபாசிட் அதாவது நிலையான வைப்புத் தொகையில் அதிக ஈடுபாடு காட்டி வருகிண்றனர். ஆனால், இந்த ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தபால் அலுவலகம் அல்லது வங்கி இவை இரண்டில் எவற்றில் ஃபிக்ஸ்டு டெபாசிட் வைப்பது சிறந்தது என்பது குழப்பமாக இருக்கும். இவற்றில், தபால் அலுவலகம் அல்லது வங்கி எது ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கு சிறந்தது என்பதைக் காணலாம்.

தபால் அலுவலகம் அல்லது வங்கி.?

வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை, தபால் அலுவலகத்தில் நிலையான வைப்புத் தொகை எவ்வாறு வேறுபடுகிறது மற்றும் எதைத் தேர்வு செய்யலாம் என்பதைக் காணலாம்.

அரசுத் திட்டங்கள்

வட்டி விகிதங்களில் ஏற்படக் கூடிய ஏற்ற, இறக்கங்களால், தபால் அலுவலக FD- ஆனது குறைவாகவே பாதிப்பு உண்டு. அதே சமயத்தில் வங்கிகளில் வழங்கப்படும் FD ஆனது RBI-ன் ரெப்போ விகித மாற்றங்களைப் பொறுத்தது. இதில், ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட ஃபிக்ஸ்டு டெபாசிட் விகிதங்களை வழங்குகின்றன.

போஸ்ட் ஆபிஸ் நிலையான வைப்புத் தொகையானது முதலீடு மற்றும் நன்மைகளில் கணிசமான வருமானத்தை வழங்குகிறது. மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய இந்த சேமிப்புத் திட்டம் உத்தரவாதமான வருமாத்தை அளிக்கிறது. எனவே, அஞ்சலகத்தின் நிலையான வைப்புத்தொகை திட்டம் முதலீடு செய்வதற்கான பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

ஃபிக்ஸ்டு டெபாசிட் காலம்

வங்கிகளில் ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கான கால அவகாசம் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இருக்கும்.

தபால் அலுவலகங்களில் 1 வருடம், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் என ஃபிக்ஸ்டு டெபாசிட் வைப்பதற்கு கால அவகாசம் உள்ளது.

அந்த வகையில், ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கு வங்கியுடன் ஒப்பிடும் போது தபால் அலுவலகம் சிறப்பானதாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்