Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி? | How to Withdraw Money from PF Account Online

Nandhinipriya Ganeshan Updated:
ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி? | How to Withdraw Money from PF Account OnlineRepresentative Image.

1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தின்படி இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு ஓய்வூதிய திட்டமே 'தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம்'. இந்த திட்டம் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வுகாலத்திற்கு பிறகுய் பாதுகாப்பை வழங்குவதற்கும், ஒருவேளை துரதிஷ்டவசமாக ஊழியர்கள் இறந்தாலும், அவரது குடும்பத்தினருக்கும் உதவும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கு இபிஎஃப் கணக்கு என்பது கட்டாயம் இருக்கும்.

PF என்றால் என்ன?

தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதேபோல், குறிப்பிட்ட தொகையை தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம் சார்பில் செலுத்தப்படுகிறது. தொழிலாளர் வைப்பு நிதியில் உள்ள பணம் அரசு சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. தொழிலாளர் மற்றும் நிறுவனம் செலுத்தும் தொகைக்கு அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு வட்டியாக பணம் செலுத்தப்படும். 

பின்னர், அந்த சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் ஊழியருக்கு அளிக்கப்படுகின்றன. EPF திட்டம் தற்போது 8.15 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கப்படும் தொகையை அவசர தேவைக்கு பயன்படுத்தும் ஆப்சனும் உண்டு. குறிப்பாக திருமணம், கல்வி, வீடு அல்லது பிளாட் வாங்க, வீடு புதுப்பிக்க, மருத்துவ செலவு, ஹோம் லோன் கடன், ஏதேனும் பேரழிவு காலத்தில் கடன், ஓய்வுக்கு முன்பாக பணம் பெறுதல் என பல காரணங்களுக்காக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். 

சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் EPF பணத்தினை ஆன்லைனில் எளிதாக விண்ணப்பித்து பெற முடியும். முன்பெல்லாம் ஒரு ஊழியர்கள் பிஎஃப் பணத்தினை எடுக்க வேண்டும் என்றால், நிறுவனத்தின் கையொப்பம் அவசியம். ஆனால் இன்று அப்படியில்லை. நிறுவனத்தின் கையொப்பம் இல்லாமலேயே பணத்தினை எடுக்கும் வசதி உண்டு. ஆன்லைன் மூலம் உங்களது UAN நம்பரை பயன்படுத்தி பணம் எடுக்கலாம். 

ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி? | How to Withdraw Money from PF Account OnlineRepresentative Image

ஆன்லைன் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி?

➥ முதலில் https://unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN நம்பரை கொடுத்து லாகின் செய்யவும். அதன் பிறகு க்ளைம் என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.

➥ இது அடுத்த புதிய பக்கம் தொடங்கும். அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும். அதன் பிறகு process for online claim என்பதை கிளிக் செய்யவும்.

➥ அங்கு உங்கள் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைப்பேசி எண் போன்றவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை தேர்ந்தெடுத்து கீழ் தோன்றும் மெனுவில் PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுக்கவும்.

➥ அதன் பிறகு பணம் எதற்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்ற காரணத்தை உள்ளிடவும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். 

➥ அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக் கிளிக் செய்யவும். OTP ஐ உள்ளிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு உங்களது பிஎஃப் தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்