Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஃபிக்ஸ்டு டெபாசிட்க்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் பெயர்கள் இதோ..! | Banks Providing Highest Fd Rates 2023

Gowthami Subramani Updated:
ஃபிக்ஸ்டு டெபாசிட்க்கு அதிக வட்டி தரும் வங்கிகளின் பெயர்கள் இதோ..! | Banks Providing Highest Fd Rates 2023Representative Image.

பெரும்பாலும் சேமிப்பு என்றாலே, நிலையான வைப்புக் கணக்கு பயன்படுத்துபவர்களே அதிகம். அதிலும், குறிப்பாக அதிக வட்டி தரக்கூடிய வங்கிகளிலேயே ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்ய நினைப்பார்கள். அந்த வகையில், இந்தப் பதிவில் ஃபிக்ஸ்டு டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு 8.75%-வரை வட்டி தரக்கூடிய சில வங்கிகளைப் பற்றி இதில் காணலாம்.

நிலையான வைப்புத் தொகை

சேமிப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் ஒரு நல்ல பாதுகாப்பான இடமாகவும், வழியாகவும் அமைவது  வங்கிகளில் இருக்கும் நிலையான வைப்புத் தொகை வசதியாகும். நிலையான வைப்புத் தொகை அதாவது ஃபிக்ஸ்டு டெபாசிட் கணக்குகள் வைத்திருப்பவர்களுக்கு சராசரியாக 7.5% வரை தனியார் வங்கிகள் வட்டி வரம்பை வைத்துள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு ரெப்கோ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாமல் 6.5% ஆக வைத்துள்ளது. இந்நிலையில், நிலையான வைப்புத் தொகை அல்லது ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்வதற்கு ஏதுவான எந்த வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்பதில் குழப்பமடைவர். இதனால், சில தனியார் வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றனர்.

சில குறிப்பிட்ட வங்கிகள் 8%-ற்கும் அதிகமான வட்டியை சுமார் 1 முதல் 2 ஆண்டுகள் நிலையான வைப்புக் கணக்குகள் வைப்பவர்களுக்கு வழங்கி வருகிறது. அதன் படி, எந்தெந்த வங்கிகள் இந்த வட்டி தொகையை வழங்குகிறது எனவும், அவற்றின் வட்டி சதவீதம் குறித்தும் இதில் பார்க்கலாம்.

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி (Ujjivan Small Finance Bank)

இந்த வங்கியானது, 1 முதல் 2 ஆண்டுகள் வரை உள்ள நிலையான வைப்புத் தொகை கணக்குகளுக்கு 8.25% வரையிலான வட்டித் தொகையை வழங்குகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கு இதை விட 0.50% வட்டி அதிகமாக வழங்கப்படுகிறது.

கால வரம்பு

வட்டி விகிதம்

9 மாதங்கள் – 12 மாதங்கள்

6.50%

13 மாதங்கள் – 559 நாள்கள்

8.00%

560 நாள்கள்

8.25%

561 நாள்கள் – 989 நாள்கள்

7.50%

 

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி (Equitas Small Finance Bank)

இந்த வங்கியானது 1 முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புக் கணக்குகளுக்கு 8.20% வரை வட்டி அளிக்கிறது. மேலும், மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு 0.50% வரை அதிகமான வட்டியை அளிக்கிறது. இந்த வட்டி விகிதமானது கடந்த ஏப்ரல் 2023 ஆம் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

கால வரம்பு

பொது FD (வட்டி விகிதம்)

1 ஆண்டு – 18 மாதங்கள்

8.20%

18 மாதங்கள் – 2 ஆண்டுகள்

7.75%

 

உத்கர்ஷ் சிறு நிதி வங்கி (Utkarsh Small Finance Bank)

இந்த வங்கியானது கீழே குறிப்பிட்ட கால வரம்பிற்குள் இருக்கக்கூடிய நிலையான வைப்புக் கணக்குகளுக்கு 7.75% முதல் 8.50 வரையிலான வட்டிதொகையை வழங்குகிறது.

கால வரம்பு

பொது FD (வட்டி விகிதம்)

மூத்த குடிமக்களுக்கான FD (வட்டி விகிதம்)

365 நாள்கள் – 699 நாள்கள்

7.75%

8.50%

 

யூனிட்டி சிறு நிதி வங்கி (Unity Small Finance Bank)

ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகை கொண்டவர்களுக்கு, இந்த வங்கியானது அதிக பட்சமாக 9.25% வரை வட்டி வழங்குகிறது.

கால வரம்பு

பொது FD (வட்டி விகிதம்)

மூத்த குடிமக்களுக்கான FD (வட்டி விகிதம்)

1 ஆண்டு

7.35%

7.85%

501 நாள்கள்

8.75%

9.25%

501 நாள்கள் – 18 மாதங்கள்

7.35%

7.85%

 

சூர்யோதாய் சிறு நிதி வங்கி (Suryoday Small Finance Bank)

சூர்யோதாய் வங்கியானது 2 ஆண்டு காலத்திற்கு வைப்புக் கணக்கிற்கு 9% வரையிலான வட்டியை வழங்குகிறது.

கால வரம்பு

பொது FD (வட்டி விகிதம்)

மூத்த குடிமக்களுக்கான FD (வட்டி விகிதம்)

1 ஆண்டு

6.85%

7.35%

2 ஆண்டுகள்

8.50%

9.00%

 

மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து வங்கிகளும், நிலையான வைப்புத் தொகைக்கு அதிக அளவிலான வட்டியை வழங்கி வருகிறது. இதில், குறுகிய கால அதாவது இந்த இரண்டு வருடங்கள் காலம் நிலையான வைப்புக் கணக்கு வைக்க நினைப்பவர்கள், இந்த வங்கிகளில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஃபிக்ஸ்டு டெபாசிட் செய்யலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்