Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Punjab National Bank : பஞ்சாப் வங்கியில் புதிய மாற்றம்..?

Muthu Kumar May 11, 2022 & 18:02 [IST]
Punjab National Bank : பஞ்சாப் வங்கியில் புதிய மாற்றம்..? Representative Image.

Punjab National Bank : பொதுத்துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்களது சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. மேலும் மாதாந்திர இலவச பரிவர்தனை கட்டணங்கள் முதல் வங்கி அல்லாத பரிவத்தனைகள் வரை பல்வேறு மாற்றங்களை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச பரிவர்த்தனை 

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தற்போது சேமிப்பு கணக்கில் இப்போது ஒரு அண்டுக்கு 40 பரிவத்தனைகள் வரை இலவசமாக செய்யலாம். அதற்க்கு அதிகமாக பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 

கூடுதல் கட்டணம்

இந்த இலவச பரிவர்த்தனை வரம்பை 40-ல் இருந்து 50 ஆக பஞ்சாப் நேஷ்னல் வங்கி உயர்த்தியுள்ளது. 40 பரிவர்த்தனைக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

செக் பரிவத்தணை

பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு 25 இலைகள் கொண்ட செக் புக் இலவசமக வழங்கப்படும். இந்த செக் புக்கில் 20 ஆக குறைத்து வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செக் ரிட்டர்ன் ஆனால் 100 ரூபாய் என்று இருந்த கட்டணத்தை 250 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் 250 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

லாக்கர் வாடகை

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் லாக்கர் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், அதற்கான வாடகையை ஒரு வருடம் வரை தாமதாக செலுத்தினால் 25 சதவீத ஆண்டு வாடகையை அபராதமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் 2 வருடங்கள் என்றால் 50 சதவீதம் வாடகை கட்டணம் அபராதம். 3 வருடத்திற்கு மேல் சென்றால் வங்கி லாக்கர் உடைக்கப்படும்

பணபரிவர்த்தனை 

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில்1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிவர்த்தனை இலவசமாக செய்யலாம். இந்நிலையில் 1 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு 1 ரூபாய் என குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகபட்சம் ரூ.30,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்