Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தரையோடு அடித்துச் செல்லப்படும் தரைப்பாலங்கள்!!

Sekar August 08, 2022 & 16:55 [IST]
நொய்யலில் பெருக்கெடுக்கும் வெள்ளம்.. தரையோடு அடித்துச் செல்லப்படும் தரைப்பாலங்கள்!!Representative Image.

காவிரியின் துணை நதியான நொய்யலிலும் வெள்ளம் பெருக்கெடுத்து, கோவையில் நொய்யலில் அமைந்துள்ள தரைப்பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் மழையால் தமிழகம் முழுவதும் பல்வேறு அணைகளும் முழுமையான நிரம்பியுள்ளன. காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, ஈரோடு மற்றும் பவானி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையில் உள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. 

இதேபோல் காவிரியின் துணை நதிகளில் ஒன்றான பவானியிலும் அதிக நீர்வரத்தால், பவானி சாகர் அணை நிரம்பியுள்ளது. இதனால் அங்கிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால், காவிரியின் மற்றொரு துணை நதியான நொய்யல் ஆற்றிலும் மழை நீர் வெள்ளம்போல் கரை புரண்டு ஓடுகிறது. 

இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நொய்யல் ஆற்றின் இடையில் கட்டப்பட்டிருந்த, கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூருக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

அது போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் தரைப்பாலம் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடர்ந்தது. இந்நிலையில், அதேபாலம் கடந்த 3 நாளுக்கு முன்பு மீண்டும் உடைந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பின்னர் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்ல வேண்டிய பொதுமக்கள், ராமநாதபுரம் வழியாக நஞ்சுண்டாபுரம் வந்து அங்குள்ள நொய்யல் ஆற்று தரை பாலம் வழியாக வெள்ளலூர் சென்று வந்தனர். இந்நிலையில் நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலத்திலும் தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தையும் வெள்ளலூர் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மழைக்காலங்களில் தொடர்ந்து அவதிக்குள்ளாவதால், அங்கு விரைவில் தரைப் பாலத்தை உயர்த்தி உயர்மட்ட பாலமாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்