Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

“எங்களால முடியல” - தஞ்சை விவசாயிகள் அரசுக்கு பரபரப்பு கோரிக்கை! 

KANIMOZHI Updated:
“எங்களால முடியல” - தஞ்சை விவசாயிகள் அரசுக்கு பரபரப்பு கோரிக்கை! Representative Image.

நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெல் கொள்முதலில் 50 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில்  கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என விவசாய சங்கங்கள்  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 


ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இவ்வருடம் சுமார் பதினோரு லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சம்பா மற்றும் தாளடி பருவ நெல் கொள்முதலில் சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய அரசு நிர்ணயம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு 50 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளை தவிர்க்க அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் மூட்டைக்கு 40 ரூபாய் மாமூல் பெறுவதை கட்டுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்துள்ளனர். 

அடிக்கடி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும் எனவும்,
 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது 40 கிலோ எடை கொண்ட மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனை 80 கிலோவாக அதிகரிக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிரமாக கண்காணிப்பு மேற்கொண்டால் பல லட்சம் கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்