Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டி பிளாக் திரைவிமர்சனம் | டி பிளாக் ஓடிடி | அமேசான் ப்ரைம் வீடியோ

UDHAYAKUMAR August 03, 2022 & 17:01 [IST]
டி பிளாக் திரைவிமர்சனம் | டி பிளாக் ஓடிடி | அமேசான் ப்ரைம் வீடியோRepresentative Image.

யூடியூப்பில் பிரபலமான எரும சாணி சேனலின் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான திரைப்படம் டி பிளாக். திரில்லர் வகையைச் சார்ந்த இந்த படம் திரையரங்குகளில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனாலும் எதிர்பார்ப்பை பெரிய அளவில் பூர்த்தி செய்யாததன் காரணமாக வரவேற்பு குறைந்தே காணப்பட்டது. 

கதை சுருக்கம் 

அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் முதலாமாண்டு மாணவர் அருள், அவரது நண்பர்கள் விஜய், மைலோவுடன், காதல் நாயகியான ஸ்ருதியை பார்ப்பது காதலிப்பது நேரம் செலவிடுவது என இருக்கிறார்.  மிகவும் ஸ்ட்ரிக்ட்டான அந்த கல்லூரியில் ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தது யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறார் அருள். யார் கொலை செய்தது எதனால் கொலை செய்யப்பட்டார் என்பதை எப்படி கண்டறிந்தார்கள் என்பதே கதைச் சுருக்கம். 

அருள்நிதியின் நண்பர்களாக வரும் கதிர் மற்றும் விஜய் சில இடங்களில் கல்லூரி காலத்தை நினைவு படுத்தினாலும், நம்ம காலேஜ்ல இப்படி எல்லாம் கிரிஞ்ச் இல்லப்பா என பெருமைபடவும் வைக்கின்றனர். கதாநாயகி ரெண்டு சீன் வந்துவிட்டு செல்கிறார். லைட்டா தலையைக் காட்டி செல்கிறார் கரு பழனியப்பன். இவர்களைத் தவிர தலைவாசன் விஜய், உமா ரியாஸ், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட கைத்தேர்ந்த நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். 

இருந்தாலும் படத்தை காப்பாற்ற முடியவில்லை. வேறு நல்ல படங்கள் எதுவும் பார்ப்பதற்கு இல்லை எனும் பட்சத்தில் இந்த படத்தை நீங்கள் பார்க்க உக்காரலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்