Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tamil Rockerz எப்படி இருக்கு? அதிரி புதிரி ஹிட் அடிக்குமா வெப் சீரிஸ்...!

UDHAYAKUMAR August 18, 2022 & 19:25 [IST]
Tamil Rockerz எப்படி இருக்கு? அதிரி புதிரி ஹிட் அடிக்குமா வெப் சீரிஸ்...!Representative Image.

சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது தமிழ் ராக்கர்ஸ் தொடர். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரடக்சன்ஸ் முதன்முறையாக வெப் சீரிஸ் தளத்தில் களமிறங்கியுள்ளது. இந்த வெப்சீரிஸை அறிவழகன் இயக்கியுள்ளார். 

நடிப்பும் கதையும் 

அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம்பெருமாள், வினோதினி வைத்தியநாதன், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இணையதளத்தை நம்பி வாழும் இன்றைய தலைமுறை, அதே இணையதளத்தால் பாதிக்கப்படும் நிகழ்வுகளும் அன்றாடம் நடந்தேறி வருகின்றன. இதேபோல் கோடி ரூபாய் முதல் போட்டு எடுக்கும் படைப்புகளை எளிமையாக இருந்த இடத்திலிருந்தே திருடி விற்பது போன்ற பைரஸி சைபர் கிரைமின் பின்னால் இருக்கும் இருண்ட பக்கங்களைத் தோலுரித்து காட்டுகிறது இந்த தொடர். 

இரண்டாவது இன்னிங்ஸில் தனது கதைத்தேர்வை மெருகேற்றி சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது காலத்துக்கேற்ப கலைஞனின் ஈடுபாடு என அவரை பாராட்டலாம்.  சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள  இந்த தொடரின் கதை சிறப்பாக இருப்பதாக அனைவரும் பகிர்ந்து வருகின்றனர். 

எப்படி இருக்கு?

சினிமா உலகிற்கே சாபக்கேடாக உள்ள பைரஸி வெப்சைட்கள் எப்படி உருவாகிறது? மாட்டிக் கொள்ளாது எப்படி இவர்களால் இத்தனை படங்களை படம்பிடித்து அப்லோட் செய்யமுடிகிறது? உலகின் பெரிய பெரிய பட நிறுவனங்களைக் கூட இவர்களால் எப்படி ஆட்டிவைக்க முடிகிறது, தண்ணீர் காட்ட முடிகிறது என்பதை அருமையாக விளக்கி எடுத்துள்ளனர். 

திரைப்படம் வெளியாகி சில நாட்களில் புதிய படங்களை அப்லோட் செய்வதில் தொடங்கி, பின்னர் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போதே தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட்டில் வெளியாகும் நிலையும் ஏற்பட்டு தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமா உலகமே கதி கலங்கி நின்றது. பின்னர் சில சட்டங்களால் பல படங்கள் இணையதளங்களில் வெளியாகாமல் தடுக்கப்பட்டாலும், நூறு சதவிகிதம் தடுக்கப்படவில்லை என்பதை வெப்சீரிஸிலேயே காட்டுகிறார்கள். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்