Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nasa News in Tamil: விஞ்ஞானிகள் அதிர்ச்சி...பூமிக்கு அசம்பாவிதத்தை ஏற்படுத்தும்...ராட்சஷ வால் நட்சத்திரம்!

Priyanka Hochumin April 17, 2022 & 09:00 [IST]
 Nasa News in Tamil: விஞ்ஞானிகள் அதிர்ச்சி...பூமிக்கு அசம்பாவிதத்தை ஏற்படுத்தும்...ராட்சஷ வால் நட்சத்திரம்!  Representative Image.

Nasa News in Tamil: நாசா வெளியிட்ட ஒரு அதிர்ச்சிகரமான தகவல், மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் வால் நட்சத்திரம். இதனால் என்னென்ன மாற்றங்கள் அல்லது விபரீதங்கள் நேரும் என்பதை விரிவாக இந்த பதிவில் பாக்கலாம். 

பொதுவாகவே விண்வெளியில் இருந்து வால் நட்சத்திரங்கள் பூமியை நோக்கி வருவது இயல்பான விஷயம். வால் நட்சத்திரங்கள் விழும் நேரத்தில் நாம் என்ன நினைத்து வேண்டினாலும் நடக்கும் என்பது மக்களின் மூடநம்பிக்கை. இருப்பினும் இதுவரை கீழே வரும் வால் நட்சத்திரங்களை காட்டிலும் தற்போது நாசாவுக்கு (Today Nasa News in Tamil) தென்பட்ட ஒன்று, இயல்பு வால் நட்சத்திரங்களை காட்டிலும் 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. 

வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில்லியன் டன்கள் என்று நாசாவின் ஹபிள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டது. மேலும் அது 137 கிலோ மீட்டர் அகலம் கொண்டிருக்கிறதாம். இப்படி ஒரு வால் நட்சத்திரத்தை முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆனால் இப்பொழுது தான் நாசாவின் ஹபிள் தொலைநோக்கி மூலம் அதனின் அளவை  உறுதிசெய்ய முடிந்ததாக தெரிவித்துள்ளனர். 

இவ்ளோ பெரிய வால் நட்சத்திரம் எங்க பூமியில் வந்து விழுந்துவிடுமோ என்பர் யாரும் கவலை கொள்ள வேண்டாம். ஏனென்றால் அதிகபட்சமாக சூரியனில் இருந்து ஒரு பில்லியன் மைல் தொலைவுக்குத்தான் அது வந்திருக்கிறது. இது எப்படியும் 2031 ஆம் ஆண்டிற்குள் கண்டிப்பாக நடக்க வாய்ப்பில்லை என்றனர். 

இவற்றை விட இவ்ளோ பெரியதா? | Nasa Breaking News Today in Tamil 

வானியலாளர்கள் இந்த வால் நட்சத்திரத்தை எதனுடன் ஒப்பிடுகிறார்கள் என்றால், அறிவியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக பெரிய வால் நட்சத்திரமாக இது திகழ்கிறது. "இதனுடைய அளவை நாங்கள் உறுதி செய்யவதற்கு முன்னர், நாங்கள் இந்த வால் நட்சத்திரம் மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் இவ்ளோ பெரியதாக இருக்கும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை" என்று டேவிட் ஜூவிட், லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கோள் அறிவியல் மற்றும் வானியல் பேராசிரியாராக இருக்கும் இவர் கூறினார். 

 

               

 

மேலும் நாசாவில் இருக்கும் விஞ்ஞானிகள், இந்த வால் நட்சத்திரத்தை பெஹிமோத் எனப்படும் ராட்சஷப் பனி யானையுடன் ஒப்பிடுகின்றனர். இப்படிப்பட்ட ராட்சஷ வால் நட்சத்திரத்தை, சிலியில் கூட்டு அமெரிக்க ஆய்வகத்தில் கறுப்பு ஆற்றல் பற்றி ஆய்வு செய்து வரும் பெட்ரோ பெர்னார்டினெல்லி, கேரி பெர்ன்ஸ்டீன் ஆகிய விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தனர் என நாசா விண்வெளி அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 

சரி வால் நட்சத்திரம் நா என்ன? | Nasa News Asteroid 

நாசாவை பொறுத்தவரை வால் நட்சத்திரங்கள் என்றால் ஐஸ் "லெகோ கேலரி" என்று குறிப்பிடுகின்றனர். இது கோள்கள் கட்டமைக்கப்பட்ட தொடக்க காலத்தில் எஞ்சியிருந்த பகுதிகளாகும். 

 

               

 

அது சூரிய குடும்பத்திற்கும் (Solar System) வெளியே உள்ள பெரிய கோள்களுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை  காரணமாக, அவை சூரிய குடும்பத்தில் இருந்து எதிர்பாராத விதமாகத் தூக்கி வீசப்பட்டன என்று நாசா கூறுகிறது. அந்த தூங்கி வீசப்பட்ட வால் நட்சத்திரங்கள் சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள "ஊர்ட்" மேகத் திரளில் இருக்கின்றன. ஊர்ட் என்ற பெயர் எப்படி வந்தது என்றால், சூரிய மண்டலத்தைச் சுற்றி பனியால் ஆன மேகம் இருப்பதைக் கண்டறிந்த விஞ்ஞானிக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அந்த பெயரை அளிக்கப்பட்டதாக நாசா குறிப்பிட்டுள்ளது. 

இப்பொழுது வால் நட்சத்திரம் எங்கு இருக்கிறது? | Nasa News in Tamil 

மக்காவ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மேன்-டு ஹுய், இந்த வால் நட்சத்திரத்தை பார்த்து வியர்ந்து போய் அதனை " ஒரு அற்புதமான பொருள்" என்று பிரம்மித்து கூறியுள்ளார். மேலும் இந்த வால் நட்சத்திரத்தின் துல்லியமான அளவை தெரிந்துகொள்ள எங்களுக்கு பெட்டர் டேட்டா தேவைப்பட்டது. எனவே தான் இந்த வால் நட்சத்திரத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இவ்ளோ கால தாமதம் ஆகிவிட்டது என்றார். 

 

              

 

பெர்னார்டினெல்லி-பெர்ன்ஸ்டைன் வால் நட்சத்திரம் முப்பது லட்சம் ஆண்டுகள் நீளமான நீள்வட்ட சுற்றுப்பாதையில் பயணிக்கிறது. இதனால் சூரியனிலிருந்து தோராயமாக அரை ஒளியாண்டு தொலைவு வரை அது செல்வதாக கூறுகின்றனர். இப்பொது இந்த வால் நட்சத்திரம் சூரியனிடம் இருந்து 200 கோடி மைல்களுக்கும் குறைவான தொலைவில் உள்ளது. இது நமது சூரிய மண்டலத்தின் தளத்துக்கு கிட்டத்தட்ட செங்குத்தாக (perpendicular) விழுந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்