Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

3400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு.. இதில் ஆச்சர்யத்தின் உச்சம் என்னவென்றால்? | 3400 Year Old City Found in Iraq

Nandhinipriya Ganeshan Updated:
3400 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு.. இதில் ஆச்சர்யத்தின் உச்சம் என்னவென்றால்? | 3400 Year Old City Found in IraqRepresentative Image.

பருவ நிலை மாற்றத்தால் உலகில் எத்தனையோ நாடுகள் பாதிக்கப்படுகின்றன. அவற்றில் அதிகம் பாதிக்கப்படும் நாடாக ஈராக் நாடும் ஒன்று. பல மாதங்களாக அந்த நாட்டின் தென்பகுதி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் மிக முக்கியமான நீர்த்தேக்கங்களில் ஒன்றான மொசூல் ஆணை டைக்ரிஸ் ஆற்றின் மீது கட்டப்பட்டது. தண்ணீர் அதிகமாக இருந்ததால் பழங்கால தடையங்கள் ஏதும் அங்கு கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டின் கடும் வறட்சி காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் குறைந்தது. 

இந்த நிலையில் சர்வதேச தொல்லியல் துறை குழு ஒன்று ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் கெமுனேவில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த நகரத்தில் கிபி 1275 - 1475 இல் வாழ்ந்த மிட்டாணி பேரரசு அமைந்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நகரத்தில் பீங்கான் ஜாடிகள், களிமண், மண் செங்கற்கள், சுவர்கள், கோபுரங்கள், அரண்மனைகள் மற்றும் பல மாடி கட்டிடங்கள் போன்ற பழங்கால இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுவாரஸ்மயமாக, கியூனிஃபார்ம் என்ற பழங்கால எழுத்து நடையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த எழுத்து நடையை படித்து புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால், தற்போது மொழிபெயர்ப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நகரமானது கிமு 1350 ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அழிந்துள்ளதாகவும், மிட்டாணி சாம்ராஜ்ஜியத்தின் மண் சுவர்கள் இவ்வளவு காலம் நீரில் மூழ்கியிருந்தாலும் இன்னும் அப்படியே இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கண்டுபிடிப்பின் மூலமாக மிட்டாணி சாம்ராஜ்ஜியத்தின் அழிவு பற்றிய முக்கிய தகவல்களை வழங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்