Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூகுள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு....! மக்களே இனி கவலை வேணாம்..!

Gowthami Subramani September 30, 2022 & 16:30 [IST]
கூகுள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு....! மக்களே இனி கவலை வேணாம்..!Representative Image.

கூகுள் விரைவில் மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் ஒரு புதிய அம்சத்தை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இது மக்கள் தாங்களாகவே, மொழிபெயர்க்க அனுமதிப்பதாக கூறப்படுகிறது. அதாவது, செய்தி இயந்திர மொழிபெயர்ப்பு மூலம், தேடலில் இருந்து நேரடியாக மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கலாம்.

தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் தங்கள் நாடுகளில் உள்ள செய்திகளைப் பற்றி அதிகம் தேடுகின்றனர். அந்த வகையில், மக்களுக்குப் பயன்பாடுள்ளதாக இந்த புதிய அறிவிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது.

அதன் படி, வரும் 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில், மொழிபெயர்க்கப்பட்ட செய்திகளை எளிதில் கண்டறிவதற்கு புதிய அம்சத்தை, இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் இருந்து அதிகாப்பூர்வமான அறிக்கைகளை மக்கள் எளிதாகப் படிக்கவும், எங்கு என்ன நடக்கிறது என்ற தனிப்பட்ட கண்ணோட்டம் குறித்த விவரங்களையும் வழங்குகிறது.

கூகுள் நிறுவனம் வெளியிட்டதன் படி, புதிய Google Search Tool ஆப்ஷனைப் பயன்படுத்தி, சர்வதேச செய்திகளைத் தேடி, வாசகர்கள் அதனை மற்ற மொழிகளில் தொடர்புடைய உள்ளூர் அறிக்கையுடன் இணைக்கும். இது பயனர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள மற்ற செய்திகளைப் பற்றி தெரிந்து கொள்ளவும் உதவும்.

இந்த புதிய Search Tool மூலம், இணையத்தில் உள்ள ஆன்லைன் விவாதங்கள் மற்றும் இன்னும் பிற தகவல்களைக் கண்டறியக் கூடிய மற்றொரு அம்சத்தையும் பெற முடியும். அதன் படி, “Discussions and Forums” என அழைக்கப்படும் இந்தப் புதிய அம்சம், பல்வேறு பிரபலமான Forums-ல் இருக்கும் மற்றும் இணையத்தில் உள்ள ஆன்லைன் விவாதங்களில் பயனுள்ள உள்ளடக்கத்தை உள்ளடக்கியதாக அமையும்.

இது ஆரம்பத்தில், பிரெஞ்சு, ஜெர்மன், மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் உள்ள செய்திகளை மொபைல் மற்றும் Desktop-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் எனவும், இது பின்னர் பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்