Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

அசர வைக்கும் Oneplus Open போன்...ரூ.1.2 லட்சத்துக்கு என்ன இருக்கு?| Oneplus Open Foldable Phone

Priyanka Hochumin Updated:
அசர வைக்கும் Oneplus Open போன்...ரூ.1.2 லட்சத்துக்கு என்ன இருக்கு?| Oneplus Open Foldable PhoneRepresentative Image.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் fold மாடல் போன் ஆனது வரும் அக்டோபர் மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் சீனாவில் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த போனின் விலை, விவரக்குறிப்பு உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம்.  

Oneplus One Fold விவரக்குறிப்புகள்

Oneplus One ஸ்மார்ட்போன் உள்ளே 7.8″ 2K foldable 120Hz AMOLED டிஸ்பிளே மற்றும் வெளியே 6.3″ 120Hz AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 1600 × 720 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் Oxygen OS 13.1, Android 13 - ஐ ஆதரவு கொண்ட Snapdragon 8 Gen 3 SoC சிப்செட் கொண்டு இயங்குகிறது.

கேமராவைப் பொறுத்த வரையில், 48எம்பி பிரைமரி கேமரா, 48எம்பி அல்ட்ரா வைடு, 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 32எம்பி மற்றும் 20எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா செட்டப் அளிக்கப்படும். 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். 67 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 4800 எம்ஏச் பேட்டரியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் Emerald Eclipse மற்றும் Voyage Black ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும். இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.1.2 லட்சத்திற்கு அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில், இந்த போனின் முழு விவரத்தையும் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்