விவோ நிறுவனத்தின் புதிய விவோ வி29 சீரிஸ் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் விவோ வி29 5ஜி மற்றும் விவோ வி29 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவைகளின் அம்சம், விவரக்குறிப்பு உள்ளிட்ட தகவலை பற்றி பார்க்கலாம்.
Vivo V29 விவரக்குறிப்புகள்
விவோ வி29 ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் 10 ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. அத்துடன் Adreno 642L GPU ஆதரவு கொண்ட ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி 6என்எம் சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 50எம்பி கேமரா செட்டப் அளிக்கப்படும். 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் விற்பனைக்கு வரும்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி பல கனெக்டிவிட்டி ஆதரவு கொண்டுள்ளது. இந்த போனில் யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன. தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவுக்கு என ஐபி68 சான்றிதழ் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் ஹிமாலயன் ப்ளூ, மெஜஸ்டிக் ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்படும்.
மேலே குறிப்பிட்ட அம்சங்களில் சிலவற்றைக் கொண்டு விவோ வி29 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு மாடல் போன்களும் ரூ.40,000/-க்கு இந்திய சந்தையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…