ஆண்ட்ராய்டு போன்களின் மவுசை பின்னுக்கு தள்ளி தற்போது அனைவரையும் பிரம்மிக்க வைத்தது ஐபோன் 15 சீரிஸ் தான். இதில் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 என மொத்தம் 4 மாடல் அடங்கும். இதில் ஐபோன் 15 பிளஸ் மாடலின் விலை, அம்சங்கள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்த மாடல் ஸ்மார்ட்போன் 60ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் செய்யும் 6.7 இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது ஹெக்ஸா கோர் ஆப்பிள் ஏ16 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது. வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஐபோன் 15, தூசி மற்றும் நீர் பாதுகாப்பிற்கான IP68 மதிப்பீட்டை பெற்றுள்ளது. இதில் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் Wi-Fi 802.11 b/g/n/ac/ax, GPS, Bluetooth v5.30, NFC, USB Type-C, 3G, 4G உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் அளிக்கப்பட்டுள்ளது.
கேமரா பற்றி பார்க்கையில், 48-மெகாபிக்சல் (f/1.6) பிரைமரி கேமரா, 12 மெகாபிக்சல் (f/2.4), என்னும் டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. செல்பீ பயன்பாட்டிற்கு f/1.9 துளையுடன் கூடிய 12-மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் பிளாக், ப்ளூ, கிரீன், பிங்க் மற்றும் எல்லோ ஆகிய கலர் ஆப்ஷனில் அறிமுகமாகும். இது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி ஆகிய ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் கிடைக்கும். இன்று செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் ஐபோன் 15 ப்ரோ ரூ.89,900/-க்கு இந்தியாவில் விற்பனையாகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…